தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 கடந்த 17 – ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் யாஷிகா ஆனந்த், ஜனனி ஐயர், பொன்னம்பலம் , பாலாஜி, டேனியல், சென்ராயன், மும்தாஜ் உள்ளிட்ட 16 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் , இரண்டாவது நாளிலிருந்தே சிறு சிறு பிரச்சனைகள் வரத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் சமையல் செய்வதில் தொடங்கிய பிரச்சனை விஸ்வரூபமெடுத்துள்ளது.
நடிகை மும்தாஜ், மற்றும் பாலாஜியின் மனைவி நித்யா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மும்தாஜ் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது போல் தனது மனநிலை இருப்பதாக சக போட்டியாளர்களிடம் கதறியபடி தெரிவிக்கும் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் இதேபோல நடிகர் பாலாஜி மறைமுகமாக தனது மனைவி குறித்து திட்டுவதை போலவும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடந்த முறை பிக்பாஸ் வீட்டில் நடந்த களேபரங்களை ரசித்த பார்வையாளர்கள் இந்த முறையும் பிக்பாஸ் வீட்டின் நிகழ்வுகளை எதிர்பார்ப்புடனேயே பார்த்து வருகின்றனர்.
கடந்த முறை ஜூலியை அனைத்து போட்டியாளர்களும் டார்கெட் செய்தது போலவே இந்த முறை நித்யாவை அனைத்து போட்டியாளர்களும் ஓரங்கட்டுவார்கள் என்றே கருதப்படுகிறது






