விஜய் கொடுத்த பெரும் தோல்வி.; ‘லைகர்’ டைரக்டருக்கு கை கொடுக்கும் பிரபலம்

விஜய் கொடுத்த பெரும் தோல்வி.; ‘லைகர்’ டைரக்டருக்கு கை கொடுக்கும் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆகஸ்டில் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் ‘லைகர்’.

அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

ரூ.100 கோடிக்கு அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் பெரிய நஷ்டத்தை அடைந்தது. இதனால் இயக்குனர் பூரி ஜெகந்நாத்தை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்தனர்.

தற்போது வெற்றியை நோக்கி பயணிக்க தயாராகி வருகிறார் பூரி ஜெகந்நாத்.

இவர் புதிய படத்திற்கான ஸ்கிரிப்டை ரெடி செய்யுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானிடம் அந்த கதையை பூரி ஜெகந்நாத் சொன்னதாகவும், அவரும் ஓகே சொன்னதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

எனவே விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நாம் எதிர்ப்பார்க்கலாம்..

ஜூனியர் என்டிஆர், ரவி தேஜா பற்றிய ரகசியங்களை வெளியிட்ட நயன்தாரா

ஜூனியர் என்டிஆர், ரவி தேஜா பற்றிய ரகசியங்களை வெளியிட்ட நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா சமீபத்திய பேட்டியில் ஜூனியர் என்டிஆர் ஒருபோதும் ஒத்திகை பார்க்க மாட்டார் என்றும்,கேமரா முன் ஒரு திடீரென கேரக்டராக மாறுவார் என்றும் தெரிவித்தார்.

ரவி தேஜா தெலுங்கு படங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தபோது, ​​தனக்கு சிறந்த நண்பராக இருந்தார்.

“அவர் ஹிந்தியில் சரளமாக பேசக்கூடியவர்.

அதனால், நாங்கள் எப்போதும் இந்தியில்தான் பேசிக் கொண்டிருந்தோம்” என்று நயன் கூறியுள்ளார்.

பொதுவாக நயன் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை .

தன்னுடைய சொந்த பேனர் படம் என்பதால் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

அருள்நிதி – பிரியா பவானி ஷங்கர் இணையும் ‘டிமாண்டி காலனி 2’ சூட்டிங் அப்டேட்

அருள்நிதி – பிரியா பவானி ஷங்கர் இணையும் ‘டிமாண்டி காலனி 2’ சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜய் ஞானமுத்து தயாரித்து இயக்கும் ‘டிமாண்டி காலனி2’ படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு ஒசூரில் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. 40% படப்பிடிப்பு தற்போது முடிந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அஜய் ஞானமுத்து ‘டிமாண்டி காலனி’ திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.

இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆஃபிஸ் வசூலிலும் சாதனை படைத்தது. ஹாரர் ஜானரில் இந்தத் திரைப்படம் புதிய பென்ச் மார்க்கை உருவாக்கி தமிழ் சினிமாவில் அதுவரை இருந்த வழக்கமான மற்றும் பழமையான விஷயங்களை உடைத்தது.

திறமையான நடிப்பைக் கொடுத்திருந்த நடிகர் அருள்நிதிக்கு இன்னொரு மகுடமாக இந்தப் படம் அமைந்தது. படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆன போதிலும் இப்போது பார்த்தாலும் புது அனுபவத்தையே பார்வையாளர்களுக்கு கொடுத்து வருகிறது.

அருள்நிதி & அஜய் ஞானமுத்துவின் வெற்றிக் கூட்டணி தற்போது ‘டிமாண்டி காலனி2’ படத்திற்காக மீண்டும் இணைந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போது படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு ஒசூரில் மிகக்குறைந்த நாட்களுக்குள் நிறைவடைந்துள்ளது. இது படத்தின் 40% படப்பிடிப்பும் முடிந்துள்ளது என படக்குழு மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளது.

இதை முடிக்க சாத்தியப்படுத்திய தன்னுடைய படக்குழுவின் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான அஜய் ஞானமுத்து நன்றி தெரிவித்துள்ளார். மேலும், படம் நன்றாக வந்திருப்பதையும் தெரிவித்து இருக்கிறார்.

‘டிமாண்டி காலனி2- Vengeance of the Unholy’ என்ற டேக்லைன் கொண்ட இந்தப் படத்தில் அருள்நிதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார்.

*படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:*

எழுத்து, இயக்கம் & தயாரிப்பு: அஜய் ஞானமுத்து,
இசை: சாம் சிஎஸ்,
ஒளிப்பதிவு: தீபக் டி மேனன்,
படத்தொகுப்பு: குமரேஷ் டி,
கலை இயக்கம்: ரவி பாண்டி,
சண்டை: கணேஷ்,
ஆடை வடிவமைப்பு: நவதேவி ராஜ்குமார் & மாலினி,

ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து ‘டிமாண்டி காலனி2’ படத்தைத் தயாரிக்கிறார்கள். அடுத்தக் கட்டப்படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

2 நாட்களில் 2 ரிலீஸ்.: இரண்டிலும் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

2 நாட்களில் 2 ரிலீஸ்.: இரண்டிலும் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்த 2 படங்கள் அடுத்தடுத்து நாட்களில் புத்தாண்டு விருந்தாக ரிலீசாகிறது. அதன் விவரம் இதோ…

மலையாளத்தில் இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.

நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இது தமிழிலும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற அதே பெயரில் தயாராகி வருகிறது.

ஆர். கண்ணன் இயக்க இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவீந்திரன் இருவரும் முக்கிய கேரக்டர.களில் நடிக்கின்றனர்.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை ஆர்டிசி மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.

பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்ய ஜெரி சில்வஸ்டர் வின்செண்ட் இசையமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் தமிழக வெளியீடு உரிமையை பிரபல நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை டிசம்பர் 29ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

——

18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இந்த திரைப்படத்தை ‘வத்திக்குச்சி’ படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார்.

இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

ஏற்கெனவே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் தற்போது புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

தற்போது டிசம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

#TheGreatIndianKitchen ( Tamil )

https://t.co/rymYiXFA21

@Dir_kannan #DurgaramChoudhary #NeelChoudhary @RDCMediaPvtLtd @23_rahulr @balasubramaniem

The wait is Over. Join the thrilling trip as @aishu_dil’s #DRIVERJAMUNA worldwide release on Dec 30.

#DriverJamunaFromDec30

@kinslin @SPChowdhary3 @18Reels_ @GhibranOfficial @gokulbenoy @thinkmusicindia @ThatsKMS @ahatamil @Synccinema @gobeatroute @knackstudios_ @proyuvraaj https://t.co/X9Hmxc82Zh

FIFA World Cup அன்பு மெஸ்சியே.. உன் கால்களை முத்தமிடுகிறேன்.; மிஷ்கின்

FIFA World Cup அன்பு மெஸ்சியே.. உன் கால்களை முத்தமிடுகிறேன்.; மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

FIFA World Cup 2022 – அர்ஜென்டினா- பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டி நேற்று முன்தினம் பரபரப்பாக நடந்து முடிந்தது.

இதில் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த அணி வெற்றி பெற்றது.

அந்த அணியைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் மெஸ்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர் மிஷ்கின் அது குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், ‛‛சிறு வயதில் நான் விளையாடிய புல்பால் விளையாட்டை மறந்து இன்று மீண்டும் மெஸ்சியின் மூலமாக புதிதாக புரிந்து கொண்டேன்.

அர்ஜென்டைனாவுக்கு மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்திற்கே சொந்தமானவர் மெஸ்ஸி.

பந்திற்கும் அவரின் காலுக்கும் நடுவில் பெரும் புவியீர்ப்பு விசை இயங்குகிறது.

ஒரு நொடியில் நூறு முடிவுகளை அந்த மனிதரின் அசாத்திய மூளை எடுக்கிறது. இவரி அசைவில் இசை பிறக்கிறது.

புருஸ்லீ, மைக்கேல் ஜாக்சன் போல மெஸ்சியும் நம் மனதுகளில் விளையாடுகிறார்.

வான்காவை போல் நெருடாவை போல, பீத்தோவனை போல் மெஸ்சியும் ஒரு மகா கலைஞன். அன்பு மெஸ்சியே, உன் கால்களை முத்தமிடுகிறேன் – மிஷ்கின்” என பதிவிட்டு இருக்கிறார்.

பிரியா அட்லீ வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் என்ன கொடுத்தார்.?

பிரியா அட்லீ வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் என்ன கொடுத்தார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கியவர் அட்லி.

இதன்பின்னர் நேரடியாக ஹிந்தியில் படம் இயக்க பாலிவுட் சென்றார்.

ஷாருக்கான் நயன்தாரா விஹய்சேதுபதி நடிக்கும் ‘ஜவான்’ என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார்.

கடந்த 2014ம் ஆண்டு அட்லீக்கும் பிரியாவுக்கும் காதல் திருமணம் நடைபெற்றது.

தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு பிரியா கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார் அட்லீ.

இந்த நிலையில் பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில் நடிகர் விஜய் கலந்து கொண்டு அட்லீ மற்றும் பிரியாவை வாழ்த்தினார்.

அதோடு அவர்களுக்கு ப்ரியா அட்லி ஓவியத்தை பரிசாக கொடுத்து அசத்தினார்.

இதுதொடர்பான போட்டோ, வீடியோ வெளியாகி வைரலானது.
Displaying IMG_20221220_184745.jpg.

More Articles
Follows