பாரதிராஜா இயக்கும் ஜெயா படத்தில் எம்ஜிஆராக கமல் / மோகன்லால்..?

kamal and mohan lalமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக்குவதாக ஏற்கனவே 2 தயாரிப்பாளர்கள் அறிவித்து இருந்தனர். இப்போது இன்னொரு தயாரிப்பாளரும் களத்தில் இறங்கி உள்ளார். முதலில்

ஜெயல்லிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க போவதாக விஜய் அறிவித்தார்.

இந்த படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிப்பதாக கூறப்பட்டது.

இவர் என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையையும் படமாக்கி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு உலக கிரிக்கெட் கோப்பையை வென்றதை மையமாக வைத்து 83 வேல்டு கப் என்ற படத்தையும் தயாரிக்கிறார்.

ஜெயலலிதா வாழ்க்கை கதை படப்பிடிப்பு அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இவரை அடுத்து ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப்போவதாக பெண் இயக்குனர் பிரியதர்ஷினியும் அறிவித்தார். இவர் டைரக்டர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

தற்போது வரலட்சுமியின் சக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவர்களை அடுத்து 3வதாக பிரபல டைரக்டர் பாரதிராஜா அவர்களும் ஜெயலலிதா வாழ்க்கையை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்த படத்தை மும்பையை சேர்ந்த ஆதித்யா பரத்வாஜ் தயாரிக்கிறாராம்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜெயலலிதா வாழ்க்கையை பாரதிராஜா இயக்கத்தில் படமாக்க ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே திரைக்கதையை உருவாக்கி வருகிறோம்.

இதற்கு தற்காலிகமாக புரட்சித்தலைவி என்று தலைப்பு வைத்துள்ளோம். அந்த தலைப்போடு அம்மா என்ற பெயரையும் சேர்க்கும்படி சிலர் கூறியுள்ளனர்.

இளையராஜாவிடம் இசையமைக்க பேசி உள்ளோம். ஜெயலலிதா வேடத்துக்கு ஐஸ்வர்யாராய், அனுஷ்கா ஆகியோரில் ஒருவரை பரிசீலிக்கிறோம்.

எம்.ஜி.ஆர் வேடத்துக்கு கமல்ஹாசன், மோகன்லால் ஆகியோரிடம் பேசி வருகிறோம்” என்றார்.

இது ஒரு புறமிருக்க மற்ற ஜெயலலிதா வேடத்தில் நடிக்க பலத்து போட்டி உருவாகியுள்ளதாம்.

நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, வித்யாபாலன் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளது எனவும் தகவல்கள் கூறுகின்றன.

Overall Rating : Not available

Related News

Latest Post