அரசியலில் ரஜினி-கமல்; யாருக்கு ஆதரவு..? பாரதிராஜா பதில்

actor bharathi rajaஇயக்குனர் இமயம் பாரதிராஜா விரைவில் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்.

எனவே சில பகுதிகளை பார்வையிட புதுச்சேரி சென்றார்

அதன்பின்னர் முதல்வர் நாராயணசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது…

ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வருகின்றனர்.

அவர்களுக்கு கடைசி காலத்தில் நாட்டுக்கு ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் வந்திருக்கலாம். அதான் அவர்கள் வந்திருக்கிறார்கள்.

அவர்கள் கட்சி ஆரம்பித்து தங்கள் கொள்கைகளை அறிவித்த பிறகு யாருக்கு ஆதரவு என்பதை தெரிவிப்பேன்.

நான் கடைசி வரைக்கும் கலைஞனாகவே இருப்பேன்’ என்று பேசினார்.

Overall Rating : Not available

Latest Post