‘பாக்யராஜ் இல்லன்னா அய்யனார் வீதி இல்லை’ – ஜிப்ஸி ராஜ்குமார்

Bhagyaraj helped lot in Ayyanar Veethi project says Jipsy Rajkumarஜிப்ஸி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அய்யனார் வீதி.

சாட்டை யுவன் நாயகனாகவும், ஷாரா ரெட்டி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

கே.பாக்யராஜ் மற்றும் பொன்வண்ணன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சிங்கம்புலி, மீரா கிருஷ்ணன், முத்துக்காளை உள்ளிட்டோரும் உண்டு.

யு.கே.முரளி இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஸ்ரீசாய் சண்முகா பிக்சர்ஸ் சார்பில் செந்தில்வேல் தயாரித்திருக்கிறார்.

இப்படம் குறித்து ஜிப்ஸி ராஜ்குமார் கூறியதாவது…

“நான் ஒரு பத்திரிகையாளன். ஜிப்ஸி தியேட்டர் என்ற பெயரில் தெரு நாடகங்கள் நடத்தி வருகிறேன். அந்த அனுபவத்தில் சினிமா இயக்க வந்திருக்கிறேன்.

இப்படத்தை என் சொந்த ஊரான ராஜபாளையத்தில் இயக்கியிருக்கிறேன்.

ஒரு ஐய்யர், அய்யனாராவதுதான் இப்படத்தின் ஒன்லைன்.

கே.பாக்யராஜை படமாக்கியது என் பாக்கியம். அவர் ஸ்கிரிப்ட், வசனத்தில் நிறைய உதவிகளை செய்தார்.

அவர் இல்லாவிட்டால் இந்த அய்யானர் வீதி இல்லை” என்றார் ஜிப்ஸி ராஜ்குமார்.

Overall Rating : Not available

Related News

ஜிப்ஸி ராஜ்குமார் இயக்கத்தில் பாக்யராஜ், பொன்வண்ணன்…
...Read More
ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு உலகளவில்…
...Read More

Latest Post