தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா ஊரடங்கு விஷயத்தில் பிரதமர் மோடி எடுத்த பல நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்திருந்தார் கமல்ஹாசன்.
மேலும் மோடிக்கு தன் கண்டனங்களை நீண்ண்ண்ண்ட கடிதம் எழுதியிருந்தார்.
மோடியின் அரசு பால்கனி அரசு. அடித்தட்டு மக்களை கண்டுக்கொள்வதில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.
கமல்ஹாசனின் கருத்துக்களுக்கு சில தினங்கள் கழித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பதிலடியை கொடுத்துள்ளார்.
அவர் இதுகுறித்து கூறியதாவது:
பால்கனி அரசு? இந்த அரசு 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் ஒரு பால்கனி பையன், தனது 65 ஆண்டு வரை பிஸியாக பணம் சம்பாதித்துவிட்டு தற்போது திடீரென ஏழை மக்களுக்காக ரூ.1.7 லட்சம் கோடி வழங்கிய அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சாட்டுகிறார். வெட்கம்’ என்று கூறியுள்ளார்.
Balcony Boy Kamal earned for 65 years says BJP H Raja