ரஜினி-கமல்-விஜய்-அஜித் ஆகியோரின் அரசியல் பற்றி ஜோதிடர் பாலாஜிஹாசன்

New Projectதமிழ் சினிமாவிலும் சரி அரசியல் உலகிலும் சரி ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உள்ளவர்களே உள்ளனர்.

இதனால் பெரும்பாலான ஜோதிடர்கள் காட்டில் நல்ல மழை.

சேலம் மாவட்டம் செவ்வாய்ப் பேட்டையைச் சேர்ந்தவர் ஜோதிடர் பாலாஜிஹாசன். இவர் தான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக் ஜோசியர்.

சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து இவர் கூறியது கிட்டதட்ட பலித்துள்ளது.

அரை இறுதிக்கு இந்தியா – நியூசிலாந்து தகுதி பெறும், இறுதி போட்டிக்கு இந்தியா செல்லாது என்று ஒரு பேட்டியில் முன்பே கூறியிருந்தார். அதுபோலவே நடந்தது. ஆனால் உலக்கோப்பையை நியூசிலாந்து வெல்லாது எனவும் ஒரு புதிய அணி முதன்முறையாக வெல்லும் என கூறியிருந்தார்.

அதன்படியே நடந்துள்ளதால் தற்போது இவரது வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

அவர் மேலும் தன் குறிப்பில் ரஜினி, கமல், விஜய், அஜித்தின் அரசியல் பிரவேசம் குறித்து கூறியுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருவார். ஆனால் பெருவாரியான மக்கள் ஆதரவு அவருக்கு இருக்காது. கமல் தவறுகளை சுட்டிக்காட்டும் அரசியல் தலைவராக இருப்பார்.

விஜய், அஜித் அரசியலுக்கு வரமாட்டார்கள். அஜித் சர்வதேச அளவில் படங்களை கொடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Overall Rating : Not available

Latest Post