தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல பாடகி ராஜலட்சுமி செந்தில் முதன்முறையாக நாயகியாக நடித்துள்ள படம் ‘லைசென்ஸ்’.
இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை அபி நட்சத்திரா பேசும்போது…
“நான் நடித்த அயலி வெப் சீரிஸ்க்கு முன்பாகவே இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டேன். ராஜலட்சுமி அக்காவின் மிகப்பெரிய ரசிகை நான். அயலிக்கு கொடுத்த ஆதரவு போல இந்தப் படத்திற்கும் உங்கள் ஆதரவு வேண்டும்” என்றார்.
படத்தொகுப்பாளர் வெரோனிகா பிரசாத் பேசும்போது, “எடிட்டர் ஆண்டனியை குருவாக ஏற்றுக்கொண்டு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் படத்தொகுப்பை கற்றுக்கொண்டேன். இந்தப் படம் தமிழ் சினிமாவில் எனக்கான ஒரு லைசென்ஸ் ஆக இருக்கும்” என்றார்.
இயக்குனரும் சினிமா விமர்சகருமான கேபிள் சங்கர் பேசும்போது..
“இருப்பதிலேயே சின்ன படம் பண்ணுவது தான் கஷ்டமான விஷயம். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் வியாபாரம் எப்படி பண்ணுவது என்பது பற்றி எல்லாம் கவலைப்படாமல், நல்ல கதை வைத்திருக்கிறேன் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்.
அந்த நம்பிக்கைக்கு கிடைத்த முதல் பரிசாக தான் இந்த படத்தின் இசை உரிமையை எம் ஆர் டி நிறுவனம் வாங்கியிருக்கின்றனர். இது ஒரு பாசிட்டிவ்வான படம்” என்று கூறினார்.
எடிட்டர் ஆண்டனி பேசும்போது…
“இந்த படம் சின்ன படம் என்று சொன்னார்கள். ஆனால் இதை பார்க்கும்போது கொஞ்சம் பெரிய படமாகவே தெரிகிறது. முதன் முதலில் ஒரு பெண், சினிமாவில் படத்தொகுப்பாளராக வருவது பெருமையாக இருக்கிறது” என்று கூறினார்.
துரிதம் பட நாயகன் ஜெகன் பேசும்போது…
“தயாரிப்பாளர் ஜீவானந்தம் எனக்கு நல்ல நண்பர். ஆனால் இப்படி ஒரு படம் தயாரிக்கிறேன் என அவர் சொன்ன போது இயக்குனர் கணபதி பாலமுருகன் மீது எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. ஏனென்றால் இரண்டு படங்களில் நடித்து அனுபவப்பட்டதால் அந்த சந்தேகம் வந்தது.
ஆனால் போகப்போக அவரது திறமையும் கதை மீது தயாரிப்பாளர் வைத்திருக்கும் நம்பிக்கையையும் தெரிந்து கொண்டேன்” என்று கூறினார்.
ayali abi natchatra says I am a big fan of singer Rajalakshmi