தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் விளையாடும் காலம் இது. அப்படி ஒரு வித்தியாசமான நல்ல முயற்சி தான் ‘6 அத்தியாயம்’. பல குறும் படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டிருப்பார்கள்.
ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவின் சமீபத்திய ஹிட் ட்ரெண்டான ஹாரர் பாணியில் அமைந்திருப்பது படத்தின் வெற்றியை பறை சாற்றுகிறது. ‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார்.
இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்பட உலகில் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரும் மீதி நான்கு அத்தியாயத்தை இயக்கியுள்ளார்கள்.
பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ‘தொட்டால் தொடரும்’ நாயகன் தமன், ‘விஜய் டிவி புகழ்’ விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத்,பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் இந்த ஆறு அத்தியாயங்களிலும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், பிரபல புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இந்த அத்தியாயங்களுக்கு இசையமைத்துள்ளனர்.
படத்தின் ப்ரோமோ சாங்கை ‘விக்ரம் வேதா’புகழ் சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். இந்தப்பாடலை விஜய் டிவி புகழ் மா.கா.ப ஆனந்த் மற்றும் கவிதா தாமஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
‘6 அத்தியாயம்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.
விழாவில் நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குனர்கள் சேரன், வெற்றிமாறன், எஸ் எஸ் ஸ்டான்லி, சசி, ரவிக்குமார், மீரா கதிரவன், அறிவழகன், ஏ வெங்கடேஷ், தாமிரா, தயாரிப்பாளர் இயக்குனர் சுரேஷ் காமாட்சி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
‘6 அத்தியாயம்’ படத்தின் இசைத்தகட்டை இந்த படத்தின் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன் அவர்களின் தாயார் பிரேமாவதி வெளியிட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டனர்.
படத்தின் டெக்னிஷியன்கள் பேசியவை…
படத்தின் தயாரிப்பாளரும் படத்தில் இடம்பெற்ற ஒரு குறும்படத்தின் இயக்குநருமான சங்கர் தியாகராஜன்
இதழ்களில் சிறு சிறு துணுக்குகள் எழுதியது என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. 12 ஆண்டுகள் அமெரிக்காவில் பணிபுரிந்தவன் சினிமா மீதான காதலால் மீண்டும் வந்தேன்.
கேபிள் சங்கருடன் பேசியபோது குறும்படம் எடுக்க ஐடியா கொடுத்தார்.
பின்னர் அது அந்தாலஜி படமாக மாறியது. 6 வெவ்வேறு வகையான குறும்படங்களை இணைப்பது என்றும் அந்த ஆறையும் ஆறு டீம்களை வைத்து எடுப்பது என்றும் திட்டமிட்டோம்.
அனைத்தையும் ஒரு அமானுஷ்ய விஷயத்தால் இணைப்பது என்று முடிவானது.
ஒவ்வொரு அத்தியாயத்துக்குமான க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியோடு நிற்கும். எல்லா படங்களுக்குமான ஒரே க்ளைமாக்ஸாக முடியும். இவர்களில் கேபிள் சங்கர் தவிர மற்ற அனைவருமே அறிமுக இயக்குநர்கள்.
இந்த படத்தில் இடம்பெற்ற மூவருமே இங்கே வந்து கலந்துகொள்ள முடியவில்லை. என் கதையின் ஹீரோ ஒளிப்பதிவாளர் சிஜே.ராஜ்குமார் தான்.
ராஜ்குமார் எனக்கு நீண்டகால நண்பர். இந்த படத்தை ஒளிப்பதிவு செய்ததை விட கலர் கரெக்ஷன் செய்தது தான் பெரிய சவால். வெவ்வேறு ஒளிப்பதிவுகளை ஒரே படமாக்குவது என்பது எவ்வளவு சிரமம் என்று எல்லோருக்கும் தெரியும். என்றார்
இயக்குனர் கேபிள் சங்கர்
இந்த படத்தில் முதல் குறும்படம் என்னுடையதாக வருகிறது. சிறந்த இயக்குநரான எஸ் எஸ் ஸ்டான்லியை இயக்கியது மகிழ்ச்சி.
என்னுடைய முதல் பட ஹீரோ தமன் குமார், எனது ஒளிப்பதிவாளர் சிஜே ராஜ்குமார் இருவருமே இதில் முக்கிய பங்கு வகித்தனர்.
இந்த படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவருமே சம்பளத்தை எதிர்பார்க்காமல் ஒரு வாய்ப்பாக எண்ணி பணிபுரிந்தனர். நீங்கள் பார்த்த இந்த பாடலின் வீடியோ அனிமேஷன் மட்டுமல்ல.
முதலில் டான்ஸ் பண்ணி வீடியோ எடுத்து பின்னர் மனிதர்களை அனிமேஷன்களாக மாற்றினார். இந்த சிங்கிளுக்கு இசையமைத்தது ‘விக்ரம் வேதா’ புகழ் சி எஸ் சாம். அவரால் வரமுடியாத சூழல். பாடல் எழுதியது கார்க்கி பவா.
இயக்குனர் EAV சுரேஷ்
என்னுடைய குரு கேபிள் சங்கருக்கு நன்றிகள். தாம்பரம் தாண்டி ஒரு குடிசைக்குள் எடுத்தோம். முதல் நாள் காலை 7 மணி முதல் மறுநாள் மதியம் 11 மணி வரை தொடர்ந்து எடுத்தோம்.
தாஜ்நூர் எனக்காக இசையமைக்க ஒப்புக்கொண்டதோடு அருமையான பின்னணி இசையை தந்தார். நான் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர். சினிமாவில் முயற்சி எடுத்தபோது ஊரே திட்டியது. ஆனால் எனக்கு பக்கபலமாக இருந்தது என் தந்தை தான். அவருக்கு என் நன்றிகள்.
இயக்குனர் லோகேஷ் ராஜேந்திரன்
இந்த படத்தில் கமிட் ஆனபோது மகிழ்ச்சியை விட ஆச்சர்யமாக தான் இருந்தது. 6 இயக்குநர்கள் எப்படி ஒரு படத்தை இயக்கப்போகிறோம் என்று. 50 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து 20 ஓவர் கிரிக்கெட் வந்தது போன்றது தான் இந்த படம்.
இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன்
நான் உதவி இயக்குநராக இருந்ததில்லை. குறும்படங்கள் தான் இயக்கியிருந்தேன். என்னை நம்பி இந்த பொறுப்பை கொடுத்ததற்கு நன்றிகள். என் அம்மாவுக்காக இன்னும் ஐடி துறையில் வேலை பார்த்துக்கொண்டே தான் படத்தை இயக்கினேன்.
6 Directors directed 6 stories but has 1 climax titled 6 Athiyayam