தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஞ்சித் இயக்கிய ‘அட்டகத்தி’ படம் மூலம் நாயகன் ஆனார் தினேஷ்.
திருடன் போலீஸ், குக்கூ, விசாரணை, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரஜினியுடன் ‘கபாலி’ படத்திலும் நடித்திருந்தார்.
தினேஷ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘நானும் சிங்கிள் தான்’.
இந்நிலையில் “வயிறுடா” என்கிற படத்தை இயக்குகிறார் தினேஷ்.
இப்படம் தொடர்பான போஸ்டர்களை தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் தினேஷ்.
அந்த போஸ்டரில் ‘வயிறுடா என்கிற படத்தலைப்பும், அதற்கு கீழ் Director V.R.Dinesh என்ற பெயரும் இடம் பெற்றுள்ளது.
பொதுவாக தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்தால் டா என்ற வார்த்தை அதிகம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Attakathi Dinesh turns director ?