தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஈஷான் – ப்ரணாலி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அரியவன்’. மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கிய இந்த படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.
பிப்ரவரி 3ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இசை & ட்ரைலர் வெளியீட்டு சென்னையில் நடைபெற்றது.
அப்போது நாயகன் ஈஷான் பேசியதாவது….
“இங்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இப்படிப்பட்ட பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததே ஆசீர்வாதம் தான். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்திற்கும், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் அவர்களுக்கும் நன்றி.
பொதுவாக இயக்குநர் மித்ரன் R ஜவஹர் படங்கள் கருத்துச் சொன்னாலும், குடும்பத்தோடு அனைவரும் பார்க்கும் படமாக இருக்கும். இந்தப்படம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை, அவர்கள் எப்படித் தவிர்க்கலாம் என்பதைச் சொல்கிறது. அதை அனைவரும் ரசிக்கும் வகையில் படம் சொல்லியுள்ளது.
இந்தப்படம் பார்த்துவிட்டு வரும்போது ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். எல்லோரும் இந்தப்படத்திற்கு ஆதரவு தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
Ariyavan will give you positive energy says Ishaan