தனுஷ்-யுவன் பாடல் சாதனையை முறியடித்த விஜய் சிவகார்த்திகேயன் அனிருத்

தனுஷ்-யுவன் பாடல் சாதனையை முறியடித்த விஜய் சிவகார்த்திகேயன் அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் சினிமா வசூல் பேசப்பட்டாலும் மறுபக்கம் சோஷியல் மீடியாவில் படைக்கும் சாதனைகளும் தற்போது சாதனையாக பார்க்கப்படுகிறது.

அதில் முக்கியமானது யூடியுப் சாதனைகள்.

ஐஸ்வர்யா இயக்கத்தில் அனிருத் இசையில் தனுஷ் நடித்த படம் ‘3’. இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் யூடியூப்பில் முதன்முறையாக 100 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. இதற்கு சில வருடங்கள் ஆனது.

இதன்பின்னர் தான் யுவன் இசையமைத்த தனுஷின் ‘மாரி 2’ பட பாடலான ‘ரவுடி பேபி’ பாடல் ஜஸ்ட் 16 நாட்களில் 100 மில்லியன் சாதனையை படைத்தது.

அதன்பின்னர் பல பாடல்கள் 100 மில்லியன் சாதனைகளை கடந்தாலும் இதுபோன்ற குறைவான நாட்களில் அந்த சாதனையை படைக்கவில்லை.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் இசையமைத்து பாடிய விஜய்யின் பீஸ்ட் பட பாடல் ‘அரபிக்குத்து’ பாடல் வெறும் 12 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரு பக்கம் ரவுடி பேபி பாடல் சாதனையை முறியடித்துள்ளது எனலாம்.

ஆனால் ‘ரவுடி பேபி’ பாடல் யுடியுப்பில் வெளியாகி கடந்த மூன்று வருடங்களில் 1300 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனையை முறியடிக்கும் பாடல் ஏதோ..? காத்திருப்போம்.

Arabic Kuthu beats Rowdy Baby records

AK 61 பட அப்டேட்: அஜித்துடன் இணையும் பிக்பாஸ் பிரபலம்

AK 61 பட அப்டேட்: அஜித்துடன் இணையும் பிக்பாஸ் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து அஜித் வினோத் போனிகபூர் ஆகியோரின் கூட்டணி மீண்டும் இணையவுள்ள படம் அஜித் 61,

இந்த மாதம் மார்ச்சில் இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. சென்னை மவுண்ட ரோடு போல பிரம்மாண்ட செட்டை அங்கு போட்டு வருகின்றனர்.

அஜித்தின் 61ஆவது படத்தில் நடிகர்கள் மோகன்லால், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாலிவுட் நடிகை தபு இணைகிறார்.

இந்த செய்திகளை நம் தளத்தில் FILMISTREET தளத்தில் ஏற்கெனவே பார்த்துள்ளோம்.

இந்த நிலையில் டிவியில் பிரபலமான நடிகரும் பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்றவருமான கவின் முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Bigg Boss star joins AK 61 ?

ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் இத்தனை படங்களா? பிசியாகும் புரொடியூசர் நயன்தாரா

ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் இத்தனை படங்களா? பிசியாகும் புரொடியூசர் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் பிஸியாகவுள்ள நடிகை நயன்தாரா தற்போது தான் தயாரிக்கும் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகின்றனர்.

Rowdy Pictures நிறுவனம், தமிழ் சினிமாவில் பல முக்கிய திரைப்படங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

இவர்களின் தயாரிப்பில் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘கூழாங்கல்’ (Pebbles) ஏற்கனவே ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவு உட்பட சர்வதேச அங்கீகாரங்களை பெற்றுள்ளது. இந்த படம் தியேட்டர்களில் வெளியாகவில்லை.

இத்தயாரிப்பு நிறுவனத்தின் மற்றொரு திரைப்படமான ‘ராக்கி’ அண்மையில் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் சில ரசிகர்களும் ஒரு சில பிரபலங்கள் படத்தை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவன தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் ஏப்ரல் 28, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர் ஆகியோர் நடிப்பில் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திகில் படம் ‘கனெக்ட்’.

இதனையடுத்து மற்றும் சூரரைப் போற்று புகழ் கிருஷ்ண குமார், பின்னணிப் பாடகி ஜோனிதா காந்தி, பிரபல கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் சகோதரி மால்தி சாஹர் ஆகியோர் நடிக்க, அறிமுக இயக்குனர் விநாயக் இயக்கும் “வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்” என்ற ரோம்-காம் திரைப்படமும் தயாரிப்பில் உள்ளது.

மேலும் அறிமுக இயக்குனர் அருண் இயக்கத்தில் கவின் நடித்து வரும் ‘ஊர்குருவி’ படமும் உருவாகி வருகிறது.

இத்துடன் விஜய்சேதுபதி நடித்து தமிழில் சூப்பர் ஹிட்டான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தை குஜராத் மொழியில் ரீமேக் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த ரீமேக் திரைப்படத்தில் குஜராத்தி சூப்பர் ஸ்டார் மல்ஹர் தாக்கர் மற்றும் மோனல் கஜ்ஜார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

Actress Nayanthara is busy producing films

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் : ரஜினி கமல் பாரதிராஜா அமீர் வாழ்த்து மழை

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் : ரஜினி கமல் பாரதிராஜா அமீர் வாழ்த்து மழை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் இன்று மார்ச் 1ல் தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இவர் தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொண்டர்கள் மக்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் ரஜினி கமல் பாரதிராஜா அமீர் ஆகியோரின் வாழ்த்துக்கள் இதோ…

ரஜினியின் வாழ்த்து…

இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

கமலின் வாழ்த்து…

மனதிற்குகந்த நண்பர், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க. https://t.co/JGt9KWwdrt

பாரதிராஜாவின் வாழ்த்து…

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்.

வரலாற்று சிறப்புமிக்க தமிழ் நாட்டின் முதல்வராக மகுடம் சூட்டப்பட்டதிலிருந்தும், உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி வாகை சூடியதிலிருந்தும் மக்களின் நம்பிக்கை நீங்கள் எனத் தெளியத் தெரிகிறது.
அந்நம்பிக்கையை பொய்யாக்கிவிடாமல் நல் அறிவிப்புகளோடு , சிறந்த செயல்பாடுகளின் மூலம் நாளும் மகிழ்வை மக்களுக்கு திரும்பத் தந்துகொண்டிருக்கிறீர்கள்.

எங்கள் திரைத்துறையையும் கனிவோடு கவனித்துக் கொள்கிறீர்கள். மகிழ்ச்சி!

அதேபோல தங்கள் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். மக்கள் அபிமான முதல்வராக, தமிழகம் பார்த்த நல் முன்னோடிகளின் பட்டியலில் தாங்களும் ஒருவராக காலத்தால் என்றும் நிலைத்திருக்க அந்த இறைவன் அருள் புரியட்டும். திராவிட வளர்ப்பு நீங்கள்.

கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையான்னு தெரியாது. ஆனால் அடுத்தவர்களின் மனதை மதிப்பவர் என்பதை திருமதி. துர்க்கா அம்மா அவர்களின் இறை நம்பிக்கைக்கு மதிப்பளித்திருப்பதின் மூலம் தெரிந்திருக்கிறேன்.
எனவே என் இறை வேண்டுதலையும் ஏற்பீர்கள் என நினைக்கிறேன்.

நலமுடன், நிறைந்த மக்கள் பலத்துடன் தமிழகத்தின் முதல் மகனாக என்றும் வீற்றிருக்க வாழ்த்துகிறோம்.
இப்பிறந்த நாளில் நீங்கள் ஆசிக்கும் எல்லா வரமும் வாய்க்கட்டும்.
என் சார்பாகவும், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாகவும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.. நீடூழி வாழ்க.

உங்கள் பாசத்திற்குரிய

இயக்குநர் பாரதிராஜா.
தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கம்

அமீரின் வாழ்த்து…

இதுவரை பொதுவெளியில் யாருக்கும் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லாத நான், ”சமூகநீதிக் காவலரின் வாரிசு”க்கு முதன் முறையாக இதயம் திறந்த வாழ்த்து மடல்.

சூரிய நெருப்பில் உதித்து..
காரிய இருளைத் தகர்த்து..
ஆருடத்தை பொய்யாக்கி
ஆரியத்தை பொடியாக்கி..

ஆட்சிக் கட்டிலை
அடித்தட்டு மக்களுக்கே..
அர்ப்பணித்த
இந்திய முதல்வனே..!

இன்னும் பல காலம் நீயிருக்க
எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கிறேன் – அது
காலத்தின் தேவை..

சமூக நீதி தழைக்க..
சமய நீதி ஓழிக்க..
சமுதாயம் செழிக்க..
சனநாயகம் சிறக்க..

அன்புடன்

அமீர்
சென்னை – மார்ச் 01” 2022

Celebrities wishes to Tamil Nadu cm MK Stalin on his birthday

கமலுக்கு பதிலாக நான் பண்ணல.. அவர ரொம்ப மிஸ் பண்றேன்.. – சிம்பு பீலிஃங்ஸ்

கமலுக்கு பதிலாக நான் பண்ணல.. அவர ரொம்ப மிஸ் பண்றேன்.. – சிம்பு பீலிஃங்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக ஹாட் ஸ்டார் டிஸ்னி ஓடிடி தளத்தில் 24 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை சுரேஷ், சுஜா, ஷாரிக் மற்றும் அபினய் ஆகிய 4 பேர் எவிக்சன் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்பின்னர் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதாவும் வெளியேறினார்.

இதனிடையில் விக்ரம் பட சூட்டிங் பிசியாக இருப்பதால் தற்காலிகமாக விலகுவதாக அறிவித்தார் கமல்ஹாசன்.

இதனையடுத்து நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்குகிறார் என்ற செய்தியை நம் filmistreet தளத்தில் பார்த்தோம்.

அதன்படி சிம்புவின் புரோமோவும் வெளியானது.

இந்த நிலையில் கமல் விலகியது குறித்தும் தான் தொகுத்து வழங்குவது குறித்தும் நடிகர் சிம்பு கூறியதாவது…

“கமல் சார்க்கு பதிலாக நான் இங்க வரலங்க அத தெளிவா இங்க சொல்றேன், அவரால திடீர்ன்னு பண்ண முடியலன்னு சொன்னாங்க அவர் மேல உள்ள மரியாதையால இந்த ஷோவை பண்ண வந்திருக்கேன், சார் ஐ லவ் யூ & உங்கள ரொம்ப மிஸ் பண்றேன்” என சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

Bigg Boss Ultimate: Simbu revealing his reason behind accepting the show

கமலின் நாயகன் நஷ்டம்.. புரொடியூசருக்கு ரஜினி உதவி செய்யல.. தற்கொலை செஞ்சுக்க துப்பாக்கி கேட்டார்..; குமுறிய K.T. குஞ்சுமோன்

கமலின் நாயகன் நஷ்டம்.. புரொடியூசருக்கு ரஜினி உதவி செய்யல.. தற்கொலை செஞ்சுக்க துப்பாக்கி கேட்டார்..; குமுறிய K.T. குஞ்சுமோன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் ராபின்சன் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில், விஜய் டிவி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் “கடல போட ஒரு பொண்ணு வேணும்”. ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையை கவரும் அழகான காதல் கதையாக, ஒரு இரவில் நடக்கும் கதையில், காமெடி நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று 27.02.2022 தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில் தயாரிப்பாளர் ராபின் பேசியதாவது…

ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது எவ்வளவு கஷ்டம் என்பதை இந்தப்படத்தில் தான் தெரிந்து கொண்டேன். நிறைய பேர் படமெடுத்து ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். இங்கு மேடையில் இருக்கும் பெரியவர்கள் அந்த கஷ்டங்களை அறிந்தவர்கள், அவர்கள் இங்கு எங்களை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. எங்கள் குழு மிக கடினமாக உழைத்து இப்படத்தை எடுத்துள்ளோம், அடுத்த படத்தை இன்னும் பெரிதாக செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அடுத்த மாதம் இப்படத்தை திரையரங்கில் வெளியிடவுள்ளோம், இந்த படத்திற்கு உங்கள் ஆதரவை தந்து எங்களை வாழ்த்தி வெற்றி பெறச் செய்யுங்கள் நன்றி.

அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது…

இங்கு என்னை நடிகர் என்று இங்கு மேடைக்கு அழைத்த போது, எனக்கு கூச்சமாக இருந்தது. நான் நடிகன் அல்ல. தமிழ் நாட்டில் தலை சிறந்த பேச்சாளர்களில் ஒருவனாக என்னை வளர்த்து கொண்டவன். நான் இரண்டு திரைப்படங்களில் தான் நடித்து இருக்கிறேன். இந்தப்படத்திலும் நடித்துள்ளேன். இந்தப்படத்தில் தம்பி அசாரின் நடிப்பும் பாட்டும் உற்சாகம் கொள்ள வைக்கிறது. காட்சிகளை பார்க்க பிரமிப்பாக குதூகலம் தருவதாக அமைந்துள்ளது. ஒரு படத்தை எடுத்து வெளியிட கோடிக்கணக்கில் தேவைப்படும் எனும் நிலையை ரசிகர்கள் மாற்றிக்காட்ட வேண்டும், தம்பி அசாரின் நடிப்பில் இப்படம் அதனை மாற்றிக்காட்டும். இந்தப்படம் காதலை நகைச்சுவையுடன் ரசிக்கும் படி சொல்லியிருக்கிறது. கடலை போட பொண்ணு வேணும் படம் பற்றி பேச எனக்கு தகுதி இல்லை, ஏனெனில் நான் கடலை போட்டதில்லை. காதலுக்கு கடலை போடுவதை தாண்டி நிறைய இருக்கிறது என நம்புபவன் நான். காதல் புனிதமானது, மகத்தானது அதை சமகாலத்தில் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் தம்பி ஆனந்த ராஜன் சொல்லியுள்ளார். அனைவரையும் கவரும் படமாக இப்படம் இருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

தயாரிப்பாளர் ராஜன் பேசியதாவது…

இப்படத்தின் பாடல்கள் பார்த்தேன் ரொம்பவும் அருமையாக இருந்தது. தம்பி அசார் அழகான நடிப்பில் ஈர்க்கிறார். தயாரிப்பாளர் இல்லாமல் சினிமா இல்லை தயாரிப்பாளரை ஏமாற்றாதீர்கள், அனைவரும் இணைந்து ஈகோ இல்லாமல் வேலை பார்த்தால் சினிமா ஒரு அருமையான தொழில், ஆனால் இங்கு அது நடப்பதில்லை. தயாரிப்பாளர் குஞ்சுமோன் வந்துள்ளார் இயக்குநர் ஷங்கரை உருவாக்கியவர், ஆனால் அவர் இப்போது படமெடுப்பது இல்லை , கோடிகளை கொட்டும் தயாரிப்பாளர்களுக்கு இங்கு மரியாதை இல்லை. தயாரிப்பாளருக்கு லாபம் வந்தால் மீண்டும் படம் தான் எடுப்பார்கள் ஆனால் ஹீரோவுக்கு கொடுக்கும் பணம் என்னவாகிறது?, திரும்ப வருவதே இல்லை. கடலை போட பொண்ணு வேணும் ஆனால் இந்த காலத்தில் பெண்ணிடம் கடலை போட்டுட்டு, கடலில் போட்டு விடுகிறீர்களே ? காதல் செய்து ஏமாற்றாதீர்கள். கடினமாக உழைத்து படமெடுத்துள்ளார்கள் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். வாழ்த்துக்கள்

நடிகை ரிஷா
இந்த படத்தில் ஒரு பாடல் நான் ஆடியிருக்கிறேன் தீனா மாஸ்டர் கோரியோகிராபி செய்துள்ளார். இயக்குநர் ஆனந்த்ராஜ் சார் தான் இந்த வாய்ப்பை தந்தார். உங்கள் எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்கும் நன்றி.

தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் பேசியதாவது…
திரைப்பட விழாக்களை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. மீண்டும் விழாக்கள் நடப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தின் பாடல்கள் பார்த்தேன் அருமையாக இருக்கிறது. தயாரிப்பாளர் நிறைய செலவு செய்துள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் நிறைய படங்கள் நான் விநியோகம் செய்திருக்கிறேன். கேரளாவில் பண்ணியிருக்கிறேன், ஒரு படம் எப்படி வியாபாரம் ஆகிறது என்பது தெரியும், மணிரத்னம் உடைய நாயகன் படத்தை முதலில் நான் விநியோகம் செய்ய மாட்டேன் என சொன்னேன், அவரது அண்ணன் ஜீவி நீங்கள் தான் பண்ண வேண்டும் என்றார். அதற்காக பண்ணினேன்.

நாயகன் படம் எனக்கு லாபம் இல்லை. கேரளாவில் ரிலீஸ் செய்தேன். கமல் நடிப்பு பிரமாதம். ஆனால் படம் கமர்ஷியலாக ஓடல..

இங்கு தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை, யாரும் உதவுவதில்லை, மணிரத்னம், ரஜினி யாரும் ஜீவிக்கு கடைசி நேரத்தில் உதவி செய்யவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டார். என்னிடம் கூட ஒருமுறை துப்பாக்கி கேட்டார். நான் கொடுக்கல.

இந்த நிலை தான் இங்கு இருக்கிறது, தயாரிப்பாளர் இல்லை என்றால் சினிமா இல்லை.

இயக்குநர்கள், நடிகர்கள் இல்லை, தமிழ் மக்கள் தான் என்னை வாழவைத்தார்கள். எனக்கு கமர்ஷியல் படங்கள் தான் பிடிக்கும் இந்த படத்தில் நல்ல கமர்ஷியல் அம்சங்கள் இருக்கிறது இந்தப்படம் ஜெயிக்க வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது…
கடலை போட ஒரு பொண்ணு வேணும் டைட்டில் நன்றாக இருக்கிறது. இப்படியெல்லாம் டைட்டில் வைத்தால் தான் இளைஞர்கள் சினிமாவுக்கு வருகிறார்கள். நான் ராஜாதிராஜா, குலோத்துங்க சோழன் பட டைட்டில் வைத்த போது, எல்லோரும் திட்டினார்கள் ஆனால் அந்தப்படம் ஜெயித்தது. இப்போதெல்லாம் பெரிய படத்திற்கு தான் கூட்டம் வருகிறது. விஜய் பீஸ்ட்டுக்கு வெயிட் பண்ணுகிறார்கள். அனிரூத் சிவகார்த்திகேயன் கலக்குகிறார்கள். பெரிய படமெடுத்தால் தான் மக்கள் பார்க்க வருகிறார்கள். சின்ன படத்திற்கு வருவதில்லை. மத்திய அரசு மக்களிடம் வரி போட்டு எல்லாவற்றையும் பிடுங்கி விடுகிறது. மக்களிடம் பணமில்லை, மக்கள் சந்தோஷமாக இருந்தால் தானே படத்திற்கு வருவார்கள், விஜய்யை ஷீட்டிங்கிலிருந்து வரி ஏய்ப்பு விசாரணை என கூட்டி போனார்களே அதை யாராவது கேட்டார்களா? நான் மட்டும் தான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். எல்லோரும் இணைந்து போராட வேண்டும், ஹீரோ ஹீரோயின் நன்றாக நடித்துள்ளார்கள், இந்த கடலை போட பொண்ணு வேண்டும் ஜெயிக்க வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் ஜிபின் பேசியதாவது..
இந்த படத்தில் ஷங்கர் மகாதேவன் ஒரு பாடல் பாடியிருக்கிறார், அதற்காக மும்பை போய் வந்தோம், தயாரிப்பாளர் செலவு பற்றி கவலை படாமல் நன்றாக வர வேண்டும் என்றார். சங்கர் மகாதேவன் பாடும்போதே இந்தப்பாடல் ஜெயிக்கும் என்றார். இந்தபடத்தில் யுக பாரதி மூன்று பாடல் எழுதியுள்ளார். நான் இரண்டு பாடல் எழுதியுள்ளேன், இந்தப்படத்திற்காக எல்லோரும் கடினமாக உழைத்துள்ளோம். இந்தப்படத்தை கொண்டு வந்ததற்கு ராபின் சாருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். டைட்டிலை தப்பாக நினைக்காதீர்கள், காதல் செய்ய பொண்ணு வேணும் என்பது தான் கதை. இந்தப்படம் உங்களுக்கு பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் கூல் சுரேஷ் பேசியதாவது…
கடலை போட ஒரு பொண்ணு வேணும் இந்தப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி, ஆனந்த்ராஜ் சாரின் அடுத்த படத்திலும் நடித்திருக்கிறேன், அவர் நிறைய படங்கள் எடுக்க வேண்டும், அதில் நான் நடிக்க வேண்டும் நன்றி

நடிகர் ராதாரவி பேசியதாவது…
இந்த படத்தின் நாயகன் அசார் டிவியிலிருந்து வந்தவர் உனக்கு உதாரணமாக பலரை சொல்லுவார்கள் அதை கேட்க கூடாது. உனக்கு என்று தனியாக பெயர் கிடைக்கும், இந்தப்படத்தின் ஒரிஜினல் டைட்டில் தெரியும், ஆனால் சொல்ல மாட்டேன், இந்தப்படம்
கண்டிப்பாக வெற்றிபெறும், நாஞ்சில் சம்பத் நான் நடிகன் இல்லை ஆனால் இரண்டு படம் இருக்கு என்றார், ஆனால் இங்கு நடிகனுக்கு படமே இல்லை, உங்களுக்கு படமிருக்கு என்று சந்தோசப்படுங்கள், சினிமாவில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும், அதற்காக தான் நான் இன்றும் டிரெண்டிங்கில் இருக்கிறேன். வசதி இலவசமாக வருவது சினிமாவில் தான். தயாரிப்பாளர்களால் தான் சினிமா வாழ்கிறது. இந்தப்படம் பாடல் எல்லாம் அற்புதமாக உள்ளது ஒளிப்பதிவாளர் மிரட்டியிருக்கிறார். நான் ஆறுபடம் எடுத்தேன், கடனாகி தான் விட்டேன். சினிமா வாழ வேண்டுமானால் இந்த மாதிரி சின்ன படங்கள் ஓட வேண்டும். நான் அடுத்ததாக 10 சின்ன படங்கள் எடுக்க போகிறேன். ஒரு நல்ல செய்தி தயாரிப்பாளர்களுக்கும் பெப்சிக்கும் அமைச்சர் முன்னால் ஒப்பந்தம் உருவாக போகிறது. அதனால் சினிமா கண்டிப்பாக வளரும், இந்தப்படம் டைட்டிலுக்கே ஓடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நாயகன் அசார் பேசியதாவது..,

இங்கு பேசுவது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. பிக்பாஸ் மாதிரி குடும்பத்தில் நிறைய சண்டை வரும், ஆனால் கடைசியில் வீடு ஒன்றாக இருக்கும், அதே மாதிரி தான் எங்கள் குடும்பமும், பெரிய படங்களில் நடிக்கும் யோகி பாபு அண்ணன் எங்கள் சின்ன படத்தில் இருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் ஆனந்த் நடித்து காட்டுவதை தான் இதில் நான் செய்துள்ளேன், அவரது சொந்தக்கதையை படமாக எடுத்துள்ளார். இந்தப்படத்தில் நிறைய நல்ல அனுபவம் இருக்கிறது., இந்தப்படம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

இயக்குநர் ஆனந்த்ராஜ் பேசியதாவது…
ராபின்சன் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும், நான் மிக கஷ்டமான சூழ்நிலையில் இருந்த போது எனக்கு இந்த வாய்ப்பு தந்தார். அவருக்கு நான் டைட்டில் சொன்னவுடனேயே பிடித்துவிட்டது. இப்படம் முழுக்க முழுக்க ஜாலியான படமாக இருக்கும் ஒரு இரவில் நடக்கும் கதை ஒரு காமெடியான டிராவலாக இருக்கும். உங்கள் எல்லோருக்கும் படம் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

KT Kunjumon controversy speech at recent event

More Articles
Follows