பெயரை மாத்தியாச்சு; சான்ஸ் இல்ல; மீண்டும் இயற்பெயரில் அனுஷா நாயர்.

பெயரை மாத்தியாச்சு; சான்ஸ் இல்ல; மீண்டும் இயற்பெயரில் அனுஷா நாயர்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anusha Nairஆலப்புலாவில் பிறந்து பெங்களூரில் படித்து வளர்ந்தவர் அனுஷா நாயர்.

மூன்றாவது வயதிலேயே காலில் சலங்கை கட்டி நடனமாடிக்கொணடிருந்தவர் பிரபலமான மலையாள டெலிஃபிலிம்களிலும் கதா நாயகியாக வலம் வரவே, சுரேஷ்கோபி ஹீரோவாக நடித்த ‘தாவளம்’ படத்தில் நெடுமுடி வேணுவின் மகளாக சிறந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

இதுவே அனுஷா நாயருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்க காரணமாய் அமைந்தது.

அனுஷா நாயர் ‘மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி’ படக்குழுவினர்களின் கண்ணில் பட அவர்களது அடுத்த படமான ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி ‘யில் மாலினி என்று பெயரை மாற்றி கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

அதை தொடர்ந்து மலையாளத்தில் பகத்ஃபாசில் நடித்த ‘அன்னயும் ரசூலும்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

தமிழில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால் நடனத்தில் கவனத்தை செலுத்தினார்.

பரதம்,குச்சுப்புடி நடனத்தில் தேர்ச்சி பெற்று மேடை நடனத்தில் கவனம் செலுத்தி வந்தவருக்கு பிரபல மலையாள இயக்குநர் ராஜீவ் ரவியிடமிருந்து மீண்டும் நடிக்க அழைப்பு வர மேடை நடனத்துடன் சினிமாவிலும் கவனம் செலுத்த தயாராகி விட்டார் அனுஷா நாயர்.

சினிமாவில் தன் நிஜப் பெயரிலேயே புகழ் பெற விரும்பும் அனுஷா நாயருக்கு தன்னை கதாநாயகியாக்கிய தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமாக வேண்டும் என்பதே ஆசை.

தன்னால் எவ்வளவு சவாலான கதாபாத்திரமானாலும் அதை ஏற்று நடித்து பெயர் வாங்க முடியும் என்ற தன்னம்பிக்கையோடு காத்திருக்கும் அனுஷா நாயர்,

’’நடனமும் நடிப்பும் எனக்கு இரு கண்கள் மட்டுமல்ல, உயிரும் கூட” என்கிறார்.

மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்-நயன்தாரா; டைரக்டர் தெரிஞ்சிருக்குமே

மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்-நயன்தாரா; டைரக்டர் தெரிஞ்சிருக்குமே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and vignesh shivanபொன்ராம் இயக்கும் படத்தில் சமந்தாவுடன் டூயட் பாடி வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் திடீரென ஞானவேல்ராஜா தயாரிக்க, விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.

இதில் நயன்தாராவை நாயகியாக ஒப்பந்தம் செய்ய விக்னேஷ் சிவன் முயற்சித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

விக்னேஷ் சிவனின் நெருங்கிய தோழி நயன்தாரா என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இது உண்மையானால் விக்னேஷ்சிவனின் இந்த செயலில் வியப்பில்லை என்கிறீர்களா? அட. அதுவும் சரிதான்.

வேலைக்காரன் படத்திலும் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைஞர்-ஜெயலலிதா வரிசையில் ஸ்டாலின்; காரணமான கமல்-ரஜினி

கலைஞர்-ஜெயலலிதா வரிசையில் ஸ்டாலின்; காரணமான கமல்-ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

celebrities at murasoli functionதிரைப்பட விருதுகள் அல்லது சினிமா சார்ந்த விழாவில் தமிழக முதல்வர் கலந்துக் கொள்ளும்போது அதில் நிச்சயம் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்துக் கொள்வார்கள்.

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் இதுபோன்ற பல விழாக்களில் ரஜினியும் கமலும் கலந்துக் கொண்டுள்ளனர்.

முதல்வர் நடுவில் நிற்க, இவர்கள் இருபுறமும் நிற்பார்கள்.

நேற்று நடந்த முரசொலி பவளவிழாவில் திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் ரஜினிக்கு நினைவுப் பரிசை வழங்கினார்.

அப்போது மேடையில் அமர்ந்திருந்த கமலை அருகில் நிற்குமாறு அழைத்தார்.

கூடவே தன் மகன் உதயநிதியையும் நிற்க அழைத்தார் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம்-த்ரிஷா-கீர்த்திசுரேஷ் இணையும் சாமி2 அப்டேட்ஸ்

விக்ரம்-த்ரிஷா-கீர்த்திசுரேஷ் இணையும் சாமி2 அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

saamy 2 stillsவிக்ரம் நடித்து சூப்பர் ஹிட்டான படங்களில் முக்கியமான படம் சாமி.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல்பாக இயக்குனர் ஹரி இயக்கவிருக்கிறார்.

இதில் விக்ரமுடன் த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கின்றனர்.
வில்லனாக பாபி சிம்ஹா நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

சண்டைக்காட்சிகளை கனல் கண்ணன் மேற்கொள்கிறார்.

வருகிற செப்டம்பர் முதல் இப்படத்தின் சூட்டிங்கை தொடங்கி, சென்னை, நெய்வேலி, ஜெய்ப்பூர், நொய்டா, ஆக்ரா, காத்மண்டு ஆகிய பகுதிகளில் படமாக்கவிருக்கிறார் ஹரி.

2018 ஜனவரிக்குள் இதன் முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்காப்பை விட தன்மானமே முக்கியம்; கமல் பேச்சால் ரஜினி ரசிகர்கள் கவலை

தற்காப்பை விட தன்மானமே முக்கியம்; கமல் பேச்சால் ரஜினி ரசிகர்கள் கவலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal speech at Murasoli 75th year Rajini fans disappointedமுரசொலி நாளிதழின் 75 ஆம் ஆண்டு பவளவிழா சென்னையில் நடைபெற்றது.

இதில் பத்திரிகையாளர்கள் மற்றும் கமல், ரஜினி, வைரமுத்து, பிரபு உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் ரஜினி கலந்துக் கொண்டாலும் நான் மேடையில் ஏறி பேசமாட்டேன். பார்வையாளர்களில் ஒருவராகவே அமர்வேன் என ஸ்டாலினிடம் நிபந்தனை விதித்திருந்தாராம்.

ஆனால் ரஜினியை அழைத்து அவருக்கு நினைவுப் பரிசை ஸ்டாலின் வழங்கினார்.

அதன்பின்னர் விழாவில் கமல் பேசும்போது…

“நான் கற்ற தமிழ் எல்லாம் செவி வழியே கற்றவைதான். செவிவழி கற்றத்தில் இரண்டாவது குரல் கருணாநிதியுடையது. ஏன் இரண்டாவது என்று சொல்கிறேன் என்று சொன்னால் நான் கேட்டு வளர்ந்த முதல் குரல் நடிகர் சிவாஜியுடையது.

இவ்விழாவில் ரஜினியை போல் நானும் மேடையில் பேசாமல் இருந்துவிடலாம் என்றிருந்தேன்.

ஆனால் என் வீட்டில் கண்ணாடியில் பார்த்தபோது, “தற்காப்பு அல்ல முக்கியம்; தன்மானமே முக்கியம்” என்று முடிவு செய்தேன். அதனால் இதுபோன்ற மேடையில் பேச நினைத்தேன்.” என்று பேசினார்.

இவ்வாறு கமல் பேசியதால் ரஜினி ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தலைவர் ரஜினி அந்த விழா மேடையில் பேசாமல் இருந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் நண்பரான கமல் அவர்கள் ஏன்? இப்படி பேசினார்? என ரஜினி ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Kamal speech at Murasoli 75th year Rajini fans disappointed

எதிர்பார்ப்பு எகிற தரமணி தயாரிப்பாளர் செய்த தந்திரம்

எதிர்பார்ப்பு எகிற தரமணி தயாரிப்பாளர் செய்த தந்திரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Taramani movie producer JSK done different types of promotionsசௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள விஐபி2 படம் உலகமெங்கும் இன்று ஆக. 11ஆம் தேதி வெளியாகிறது.

தமிழகத்தில் மட்டும் 400க்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது.

இதனையடுத்து தளபதி பிரபு இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி நடித்துள்ள பொதுவாக எம்மனசு தங்கம் படம் 300க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகிறதாம்.

இப்படங்கள் இரண்டிற்கும் அதிகமான எதிர்பாப்பு எழ, இப்படத்தின் ஹீரோக்களே காரணம்.

இந்த படங்களும் இயக்குனர் ராம் இயக்கி, ஜேஎஸ்கே தயாரித்துள்ள தரமணி படமும் வெளியாகிறது.

இப்படத்திற்கு 200 தியேட்டர்களே கிடைத்துள்ளது என கூறப்படுகிறது.

ஆனால் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் விளம்பரங்களில் இப்படக்குழுவினர் கையாண்ட் யுக்திகளே காரணம் என தெரிய வந்துள்ளது.

இதன் விளம்பரங்களில் நாட்பு நடப்புகளை நக்கலடித்தும், சென்சாரை கிண்டலடித்தும் செய்திகளை வெளியிட்டனர்.

மேலும் இப்படம் இளைஞர்களை குறிவைத்தே எடுக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகளவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Taramani movie producer JSK done different types of promotions

taramani release

More Articles
Follows