தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மார்டின் ப்ராகாட் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த மலையாள படம் ‘சார்லி’.
இவருடன் பார்வதி, அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
ஃபைண்டிங் சினிமா என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.
மலையாளத்தில் பெரும் ஹிட்டடித்த இப்படத்திற்கு தமிழ் ரீமேக்குக்கு கடும் போட்டி நிலவியது.
தற்போதுதான் அதற்கான நேரம் கைகூடியுள்ளது போலும்.
துல்கர் சல்மான் வேடத்தில் மாதவன் நடிக்க, இயக்குநர் விஜய் இப்படத்தை இயக்குகிறாராம்.
நவம்பர் 15ஆம் தேதி முதல் இதன் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்கள்.