தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற படத்தை தயாரித்தவர் நடிகர் சூர்யா. 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்த இந்த படத்தில் சூர்யாவும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தன் தம்பியை வைத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளார் சூர்யா. இதில் கார்த்திக்கு வில்லனாக அரவிந்தசாமி நடிக்கிறார் என தெரிய வந்துள்ளது.
இந்த படத்தை 96 பட புகழ் இயக்குனர் பிரேம் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
பெரும் வெற்றி பெற்ற 96 படத்திற்கு பிறகு எந்த படத்மையும் பிரேம் இயக்கவில்லை. தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் ஒப்புக்கொண்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Again Suriya and Karthi teamsup Arvindsamy as baddie