மீண்டும் ஆதிக்ரவி இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ்; போலீஸாக நடிக்கிறார்

gv prakash and adhik ravichandranஆதிக் ரவிச்சந்திரன் இயக்குநராக அறிமுகமான படம் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’.

இதில் இசையமைத்து நாயகனாக நடித்தார் ஜி.வி.பிரகாஷ்.

படம் முழுவதும் இரட்டை அர்த்த வசனங்கள் இருந்ததால் இப்படத்தை பிட்டு படம் என்றே ரசிகர்கள் கூறிவந்தனர்.

இதனையடுத்து சிம்பு, ஸ்ரேயா, தமன்னா நடித்த ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன்.

பிரபல நட்சத்திரங்கள் இருந்தும் படம் படு தோல்வியை தழுவியது.

இந்நிலையில், மீண்டும தன் முதல் பட நாயகனான ஜி.வி.பிரகாஷ் உடன் இணைகிறார் ஆதிக் ரவி.

இதில் சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்க, இப்படம் 3டியில் உருவாகவுள்ளதாம்.

ஃபேண்டஸி லவ் ஸ்டோரியாக இந்தப் படத்தை எடுக்கிறார் ஆதிக்.

விஷன் ஐ மீடியா சார்பில் அரண்மனை படத்தை தயாரித்த தினேஷ் கார்த்திக் இப்படத்தை தயாரிக்கிறார்.

Overall Rating : Not available

Related News

விஜய் தற்போது அட்லி இயக்கும் படத்தில்…
...Read More
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள அச்சம் என்பது…
...Read More

Latest Post