தமிழக முதல்வருக்கு ‘அடங்காமை’ படக்குழு நன்றி தெரிவிக்க இதான் காரணமா.?

தமிழக முதல்வருக்கு ‘அடங்காமை’ படக்குழு நன்றி தெரிவிக்க இதான் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொன். புலேந்திரன் ஏ.என்.மைக்கேல் ஜான்சன் வழங்கும் வொர்ஸ் பிக்ஸர்ஸ் தயாரிப்பில்
இயக்குநர் ஆர். கோபால் எழுதி இயக்கி விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘அடங்காமை’.

திருக்குறளின் 13வது அதிகாரமான அடக்கமுடைமை அதிகாரத்தில் இடம்பெறும் அடங்காமை இயல்பால் வரும் விளைவுகளைக் கூறும் கதையாக இது உருவாகியுள்ளது.

ஈழச் சிக்கலை மையக் கருத்தாகக் கொண்ட இத்திரைப்படத்தில்
ஈழத் தமிழரான ஷெரோன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார் .

இத்திரைப்படத்தில்“ உள்நாட்டில நடந்த சண்டையிலே சிக்கி சீரழிஞ்ச பரதேசிகள் நாங்கள்” என்ற வசனங்களோடு அகதி முகாம் சம்பந்தப்பட்ட பல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இன்றும் கடந்தகால போரின் வடுக்களோடு தமிழ்நாட்டில் ஈழமக்கள் அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈழத் தமிழர்களை அங்கீகரிக்கும் வகையில் “ஈழத்தமிழர்களின் ‘அகதி முகாம்கள்’ இனி ‘மறுவாழ்வு முகாம்கள் ” என அறிவித்தமைக்காக ‘அடங்காமை’ திரைப்படக் குழுவினர் உலகத் தமிழர்களின் சார்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி முதல்வர் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

அகதிகள் என்றால் கதியற்றவர்கள் , ஏதிலிகள், ஆதரவற்றவர்கள் நிராதரவானவர்கள் என்று கருதப்பட்டதை மாற்றி இந்த அவலத்தைத் துடைக்கும் வகையில் மறுவாழ்வு முகாம்கள் என்று பெயரிட்டு ஈழத்தமிழர்களை அங்கீகரித்துள்ளார் என்று கூறித் தமிழக முதல்வரை நன்றியுடன் பாராட்டுகிறது ‘அடங்காமை’ படக்குழு.

Adangamai movie team thanked TN government

சிவரஞ்சனி மகளும் நடிக்க வருகிறார்.; மகளுக்கு ஜோடி தேடும் நட்சத்திர தம்பதிகள்

சிவரஞ்சனி மகளும் நடிக்க வருகிறார்.; மகளுக்கு ஜோடி தேடும் நட்சத்திர தம்பதிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் ஆரம்பத்தில் நிறைய படங்களில் நாயகியாக நடித்தவர் பூனைக் கண்ணழகி சிவரஞ்சனி.

தமிழில் பிரபு, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்தி, அரவிந்த்சாமி ஆகியோருடன் நடித்திருக்கிறார்.

‘சின்ன மாப்ள’ படத்தில் சுகன்யாவின் தங்கையாக நடித்திருந்தார்.

தமிழ் தவிர கன்னடம், மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கில் ஊஹா எஎன்ற பெயரில் 1994-ல் “ஆமி” என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான “நந்தி” விருதை பெற்றார்.

தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தை 1997-ல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் தன்னுடைய மகள் மேகா என்பவரை சினிமாவில் நாயகியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் சிவரஞ்சனி.

எனவே சூப்பரான கதை & இயக்குனர் மற்றும் ஹீரோவை தேடி வருகிறார்களாம் இந்த நட்சத்திர தம்பதிகள்.

ருத்ரமாதேவி என்ற திரைப்படத்தில் மேகா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Sivaranjani’s daughter to debut as heroine

ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்த ரஜினிகாந்த் & மகள்கள்

ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்த ரஜினிகாந்த் & மகள்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்தை பாராட்டுபவர் யாராக இருந்தாலும் அவரை ஆன்மிகவாதி என குறிப்பிட தவறுவதில்லை.

எவருமே எதிர்பாராத வகையில் 2017 இறுதியில் “ஆன்மிக அரசியலை இந்த தமிழகம் விரைவில் பார்க்கும்” என தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார்.

அதன் பிறகு 2020 இறுதியில் அரசியலுக்கு வர மாட்டேன் என அறிவித்தார் ரஜினி.

எனவே எப்போதும் போல ஆன்மிகத்தை மட்டுமே பின்பற்றி வருகிறார்.

அந்த வகையில் இனி ரஜினியையும், ஆன்மிகத்தையும் இனி எப்போதுமே பிரிக்க முடியாது.

மன அமைதிக்காக அடிக்கடி இமயமலை செல்வதும் இவரது வாடிக்கைகளில் ஒன்று.

அவ்வப்போது ஆன்மிக குருக்களை சந்தித்து ஆசிப்பெறுவதும் ரஜினியின் வழக்கம்.

இந்த நிலையில் ரஜினி தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகியோருடன் ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்திருக்கிறார்.

இது தொடர்பான புகைப்படத்தை சௌந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் அவரது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி சந்திப்பு குறித்து பகிர்ந்துள்ளார்.

Rajinikanth Aishwarya Soundarya met Gurudev Sri Sri Ravi Shankar

Renowned actor @rajinikanth, @soundaryaarajni, @ash_r_dhanush met Gurudev @SriSri Ravi Shankar.

With the one who has dedicated his life towards service to humanity , with his holiness @SriSri Gurudev … an evening to remember forever #divinity #spirituality #peace https://t.co/qF4eDr3TEO

விஷால் பர்த் டே : காப்பக குழந்தைகளுடன் உணவருந்திய விஷால்.; ‘வீரமே வாகை சூடும்’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

விஷால் பர்த் டே : காப்பக குழந்தைகளுடன் உணவருந்திய விஷால்.; ‘வீரமே வாகை சூடும்’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் & ஆர்யா இணைந்து நடித்து வரும் படம் ‘எனிமி’.

இந்த படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதில் நாயகியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார்.

தற்காலிகமாக ‘விஷால் 31’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இன்று ஆகஸ்ட் 29 விஷால் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என நடிகர் விஷால் தெரிவித்து இருந்தார்.

அதன்படி ’வீரமே வாகை சூடும்’ என அப்படத்திற்கு பெயரிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் விஷால் தன் 44வது பிறந்த நாளையொட்டி கீழ்பாக்கத்தில் உள்ள மெர்சி ஆசிரமம் & சென்னை மாநகராட்சி நகர்ப்புற காப்பகத்தில் உள்ள குழந்தைகள், முதியவர்களுக்கு பிரியாணி வழங்கினார். அவர்களுடனே அமர்ந்து பிரியாணி சாப்பிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது.. “ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Veerame Vaagai Soodum first look released Vishal Birthday treat to his fans

Vishal 31
Vishal 31
தன் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விஷால்

தன் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் & ஆர்யா இணைந்து நடித்து வரும் படம் ‘எனிமி’.

இந்த படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்துவருகிறார்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதில் நாயகியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார்.

தற்காலிகமாக ‘விஷால் 31’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நாளை ஆகஸ்ட் 29 விஷால் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இந்த படத்திற்கான சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.

எனவே ஃபிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal 31 first look and title release tomorrow

ரகுராமின் பேரன்கள் நடிக்க ‘டேக் இட் ஈசி’ படம் மூலம் ஹாலிவுட்டில் இயக்குநராக சுஜா.

ரகுராமின் பேரன்கள் நடிக்க ‘டேக் இட் ஈசி’ படம் மூலம் ஹாலிவுட்டில் இயக்குநராக சுஜா.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடன இயக்குநர்கள் ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராமின் மகள் சுஜா ரகுராம் மனோஜ், தனது தந்தையிடம் நடனம் மற்றும் இயக்குநர் பயிற்சி பெற்றவராவார்.

பல்வேறு இந்திய மொழிப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

கமல்ஹாசன், பிரபுதேவா, கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் மற்றும் பல்வேறு பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றி உள்ளார்.

தொழிலதிபர் மனோஜ் வேணுகோபாலை மணந்த பின்னர் அமெரிக்காவுக்கு சென்ற சுஜா, அங்கு ஹாலிவுட் இயக்குநர்களான பென் & ஜூடி லெவின், பாயு பென்னட் மற்றும் டேனியல் லிர் ஆகியோருடன் பணிபுரிந்துள்ளார்.

தற்போது இவர், ரகுராமின் பேரக் குழந்தைகளான திரிஷுல் ஆர் மனோஜ் மற்றும் சனா மனோஜ் ஆகியோரை தான் தயாரித்து இயக்க உள்ள படத்தில் நடிகர்களாக அறிமுகப்படுத்த உள்ளார்.

இசையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள இத்திரைப்படத்திற்கு டேக் இட் ஈசி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஹாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார் சுஜா.

நட்பைப் பற்றிப் பேசும் இத்திரைப்படத்தில், சாம் சி எஸ் இசையமைத்து பென்னி தயாள் மற்றும் சனா மனோஜ் பாடியுள்ள ஒரு சிறப்பு பாடல் இடம்பெறுகிறது.

திரிஷுல் ஆர் மனோஜ், சனா மனோஜ் மற்றும் நிகில் மகேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

திரைப்படத்துறையில் நுழைவதன் மூலம், கே சுப்பிரமணியம் அவர்களின் புகழ்மிக்க பாரம்பரியத்தை அவரது கொள்ளு பேரக்குழந்தைகள் தொடர்கிறார்கள்.

Master Raghuram grandson debut film in hollywood

More Articles
Follows