தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் திரை உலகில் தொடர்ந்து நாயகிகள் ஆதிக்கம் செலுத்தும் காலக் கட்டம் இது. Holly wood மற்றும் ஹிந்தி திரைப் படங்களின் பாணியில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் பட்டு வரும் படங்களின் எண்ணிக்கை தமிழ் திரை உலகில் வெகுவாக வளர்ந்து வருகிறது. நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் படும் இந்த வகை படங்கள் பெரும்பாலும் action படங்களே.
பிக் பாஸ் சீசன் 3 மூலம் புகழின் உச்சத்துக்கு சென்ற சாக்ஷி அகர்வால் பெயரிடப் படாத ஒரு புதிய படத்தின் மூலம் action அவதாரம் எடுக்க இருக்கிறார். “களிறு” என்ற படத்தை இயக்கிய ஜி ஜே சத்யா இயக்கும் இந்தப் படத்துக்காக சாக்ஷி சிறப்பு சண்டை பயிற்சிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிட தக்கது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள பெயரிடப்படாத இந்த படத்தை பற்றி இயக்குனர் ஜி ஜெ சத்யா கூறியதாவது ” பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் திடமான மன உறுதியை வெளிப் பட செய்தார் என்றால் மிகை ஆகாது. அந்த மன உறுதியும், திடமும் என் கதையின் நாயகி அவரே என தீர்மானிக்க உதவியது. அவரை அணுகிய போது சற்றே தயங்கினாலும் பின்னர் முழு மனதுடன் ஒப்புக்கு கொண்டார். நாயகியின் பாத்திர தன்மைக்கு ஏற்ப தீவிர சண்டை பயிற்சியில் ஈடுப் பட்டு தன் திறமையை மெருகேற்றிக் கொண்டார். இந்த அர்ப்பணிப்பு இவரை மென்மேலும் உயர்த்தும் என்பதில் எனக்கு பெரிய நம்பிக்கை. கதைக்கு ஏற்ப சில தலைப்புகளை நாங்கள் பரிசீலனை செய்து வருகிறோம். ஒரு சில நாட்களில் ஒரு சிறப்பான தலைப்பை வெளி இடுவோம். படத்தில் மேலும் இரண்டு முக்கிய கதா பாத்திரங்கள் உள்ளன, அதற்காக பல்வேறு பெயர்கள் பரிசீலனை செய்து வருகிறோம். விரைவில் மற்ற நடிக, நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரங்களையும் வெளி விடுவோம்” என்றார்.