கார் விபத்தில் நடிகை ரம்பா & குழந்தைகள்.; பிரார்த்தனை செய்ய வேண்டுகோள்

கார் விபத்தில் நடிகை ரம்பா & குழந்தைகள்.; பிரார்த்தனை செய்ய வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2000ம் ஆண்டுகளில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா. தமிழில் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார் ரம்பா.

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் இவர் ஆட்டம் போட்ட ‘அழகிய லைலா…’ பாடல் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்காத பாடலாக இருக்கிறது.

இவர் கனடா நாட்டின் தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் படங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பகிர்வார்.

இந்த நிலையில் நேற்று திடீரென ரம்பா தான் சென்ற கார் விபத்துக்கு உள்ளானதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோவுடன் பகிர்ந்துள்ளார்.

இந்த விபத்தில் தானும் தனது குழந்தைகளும் காயத்துடன் உயிர் தப்பியதாகவும் ஆனால் தனது மற்றொரு குழந்தை சாஷா மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

விரைவில் தன் மகள் குணமாக பிரார்த்தனை செய்யுங்கள் என கேட்டு கொண்டுள்ளார் ரம்பா.

வாடகைத்தாயை சில நடிகைகள் முயற்சி செய்ததால் பெரிதாகி விட்டது.. – வரலட்சுமி

வாடகைத்தாயை சில நடிகைகள் முயற்சி செய்ததால் பெரிதாகி விட்டது.. – வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’-வில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஹரி & ஹரீஷ் இந்தப் படத்தை இயக்க, மூத்த தயாரிப்பாளரான சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்த வருடம் நவம்பர் மாதம் 11ம் தேதி ஐந்து மொழிகளிலும் இந்தத் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.

வரலட்சுமியிடம் சில கேள்விகள்…

*’யசோதா’ கதை கேட்டதும் என்ன நினைத்தீர்கள்?*

முதலில் இதுபோன்ற கதையும் கதாபாத்திரங்களும் எப்படி எழுதினார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதைப் பற்றி நான் இயக்குநர்களிடமும் கேட்டேன். ட்ரைய்லரில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் அமைதியாக இருக்கும்.

கதையின் போக்கில் தான் என்னுடைய எதிர்மறைத் தன்மை வெளிப்படும். எனக்கும் சமந்தாவுக்கும் இடையில் இருக்கும் உறவு பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டுவதாக அமையும்.

*படப்பிடிப்பின் போது என்ன மாதிரியான சவால்களை எதிர்கொண்டீர்கள்?*

பெரிய சவால்கள் எதுவும் இல்லை. சமந்தாவை போல பெரிய ஆக்‌ஷன் காட்சிகள் எனக்கு இல்லை. நடிகையாக மிகவும் அமைதியான கதாபாத்திரம் எனக்கு. நல்ல கதாபாத்திரம் கிடைக்கும்போது எனக்கு நானே சவாலாக எடுத்து கொள்வேன்.

*எந்த ஒரு விஷயம் ‘யசோதா’ படத்திற்கு உங்களை சம்மதிக்க வைத்தது?*

என்னுடைய கதாபாத்திரம் சமந்தாவுக்கு இணையாக கதையில் பயணித்துக் கொண்டே இருக்கும். யசோதாவிற்கு யாருடைய உதவியாவது அவளுடைய வாழ்க்கையில் வேண்டும் என்ற நிலையில் இருக்கும் போதுதான் என்னுடைய கதாபாத்திரம் உள்ளே வரும். இந்தக் கதை ஒரு அறிவியல் புனைவு.

*இந்தக் கதையில் நீங்கள் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்களா?*

இல்லை. ட்ரைய்லரில் நீங்கள் பார்த்தது போல வாடகைத் தாய் மையத்தின் தலைவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

என்னுடைய கதாபாத்திரம் வசதியான பணத்தை விரும்பக்கூடிய ஒருவள். என்னுடைய உண்மையான குணாதிசியம் வாழ்க்கை முறை, நான் உடுத்தும் உடை என பலவற்றில் இருந்தும் இந்தக் கதாபாத்திரம் முற்றிலும் வேறானது.

*ஹரி & ஹரிஷூடன் வேலை பார்த்த அனுபவம் எப்படி இருந்தது?*

இரண்டு இயக்குநர்களும் மிகவும் அமைதியானவர்கள். இதுபோன்ற அமைதியான இயக்குநர்களை இதற்கு முன்பு நான் பார்த்தது இல்லை. ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் அவர்கள் வலுவான ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதும் தெரியும். ‘யசோதா’ படத்தில் இருக்கும் பல கதாபாத்திரங்களை பெண்கள் தங்களோடு ஒப்பிட்டுக் கொள்வார்கள்.

*படத்தின் தொழில்நுட்பக் குழு பற்றி சொல்லுங்கள்?*

படத்தின் ஒளிப்பதிவை மிக அழகாக சுகுமார் கையாண்டிருக்கிறார். இந்தப் படத்தில் இசை மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. மணிஷர்மா சார் அதைத் திறமையாக செய்திருக்கிறார். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு படம் நிச்சயம் மதிப்பு மிக்கதாக அமையும்.

திரையில் பார்த்து அனுபவிக்கும் வகையிலான காட்சிகளும் கதையும் இருக்கிறது. எங்கள் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் சார் மிகப்பெரிய அளவிலான பட்ஜெட்டை இந்தப் படத்திற்காகக் கொடுத்திருக்கிறார். படத்தில் அசோக்கின் செட் பார்க்கும் போதே தெரிய வரும்.

*வாடகைத்தாய் குறித்தான நிறைய விவாதங்கள் தற்போது இந்தியாவில் போய்க் கொண்டிருக்கிறது. படம் அதை பற்றியதாக இருக்குமா?*

வாடகைத்தாய் முறை என்பது அத்தனை சிக்கலானது கிடையாது. சில நடிகர்கள் அதை முயற்சி செய்ததால் அது மிகப் பெரிய விஷயமாக மாறி விட்டது.

வாடகைத்தாய் என்பது படத்தில் ஒரு வரிதான். அதன் நன்மை தீமை பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. இது கற்பனைக் கதை என்று நினைப்பவர்களுக்கு இது போன்ற சில மனிதர்களும் உண்மையில் இருக்கிறார்கள் என்பதை காண்பித்து இருக்கிறோம்.

*’யசோதா’ படத்தில் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் எது?*

என்னுடைய கதாபாத்திரத்தின் ஆழம் பிடிக்கும். யசோதா கதாபாத்திரம் மிகவும் வலுவானது. சமந்தா அதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார். எனக்குப் படத்தில் எல்லாக் கதாபாத்திரங்களும் பிடிக்கும். ஏனென்றால் கதைதான் படத்தின் ஹீரோ.

*சமந்தாவுடன் முதல் முறையாக வேலைப் பார்த்த அனுபவம் எப்படி இருந்தது?*

சமந்தாவை சென்னையில் சந்தித்ததில் இருந்து கடந்த பத்து- பன்னிரெண்டு வருடங்களாகவே எனக்குத் தெரியும். செட்டில் ஜாலியாக இருந்தோம். அவர் ஒரு வலுவான பெண்மணி. இந்தக் கதாபாத்திரத்தில அவர் வாழ்ந்திருக்கிறார்.

*உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?*

‘க்ராக்’ படத்தில் ஜெயாம்மா கதாபாத்திரத்திற்குப் பிறகு எனக்கு நடிப்பதற்குப் பல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தது. எனக்காக சிறப்பான கதாபாத்திரங்களை எழுதுகிறார்கள் என்பது மகிழ்ச்சியான ஒன்று. தெலுங்கு படங்களுடன் இப்போது நான் நன்றாக ஒன்றி விட்டேன். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது இல்லை என்பதும் ஆறுதல்.

*உங்களுடைய அடுத்த படங்கள் என்னென்ன?*

‘சபரி’ படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நந்தமூரி பாலகிருஷ்ணா சாரின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தில் முக்கிய கதாபாத்தில் நடிக்கிறேன் மற்றும் சில படங்கள் கைவசம் இருக்கிறது.

நல்ல படத்திற்கு அதுவே புரோமோசன்தான்.; அஜித் செய்திகளுக்கு ஆப்பு வைத்த மேனஜர்

நல்ல படத்திற்கு அதுவே புரோமோசன்தான்.; அஜித் செய்திகளுக்கு ஆப்பு வைத்த மேனஜர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இதன் டிவி உரிமையை கலைஞர் டிவி பெற்றுள்ளது. ஓடிடி டிஜிட்டல் உரிமையை நெட் ப்ளிக்‌ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

அஜித்தின் ‘துணிவு’ பட தமிழ்நாடு வெளியிட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘துணிவு’ திரைப்படம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாகிறது.

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவை ரசிகர்கள் மத்தியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்தவுள்ளதாகவும் அஜித் அதில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வந்தன.

ஆனால் இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன் ட்விட்டர் பக்கத்தில்… ” நல்ல படத்திற்கு அந்த படமே ப்ரமோஷன் தான்” என அஜித் பெயரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

“A good film is promotion by itself!! – unconditional love!
Ajith

ரஜினி ராஜ்யத்தில் முதன்முறையாக நுழையும் விஜய்.!

ரஜினி ராஜ்யத்தில் முதன்முறையாக நுழையும் விஜய்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவை தாண்டியும் நடிகர் ரஜினிகாந்துக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர்.

முக்கியமாக மலேசியா சிங்கப்பூர் ஜப்பான் நாடுகளிலும் ரஜினிக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன.

ஒரு இந்திய நடிகருக்கு அதுவும் ஒரு தமிழ் நடிகருக்கு ஜப்பானில் ரசிகர் மன்றம் உள்ளது என்றால் அது ரஜினிக்கு மட்டுமே.

1990 களில் வெளியான ‘முத்து’ திரைப்படம் முதல் கடந்தாண்டு வெளியான ‘அண்ணாத்த’ படம் வரை ரஜினிகாந்தின் படங்களுக்கு ஜப்பானில் பெரும் வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் & விஜய்சேதுபதி இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் விரைவில் ஜப்பானில் வெளியாக உள்ளது.

ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ள இப்படத்திற்கு சென்செய் (Sensei) என பெயரிட்டுள்ளனர். சென்செய் என்றால் ஜப்பானிய மொழியில் வாத்தி என பொருள்.

இப்படம் வருகிற நவம்பர் 18-ந் தேதி அங்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கார்த்தி நடிப்பில் லோகேஷ் இயக்கிய கைதி படமும் ஜப்பானிய மொழிகள் டப் செய்யப்பட்டு அங்கு வெளியானது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ரஜினிக்கு அடுத்து விஜய்க்கு நல்ல சினிமா மார்க்கெட் உள்ளது.

தற்போது முதன்முறையாக ஜப்பானில் ரஜினி ராஜ்ஜியத்தில் நுழையும் விஜய்க்கு வரவேற்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நான் தொலைந்தபோது நீ வந்தாய்.; உருக உருக காதலை கன்பார்ம் செய்த கௌதம் – மஞ்சிமா

நான் தொலைந்தபோது நீ வந்தாய்.; உருக உருக காதலை கன்பார்ம் செய்த கௌதம் – மஞ்சிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நாயகியாக நடித்தவர் மஞ்சிமா மோகன்.

அதன் பின்னர் ‘தேவராட்டம்’ படத்தில் நடித்த போது அப்பட நாயகன் கௌதமுடன் காதல் கொண்டார்.

இவர்களின் காதல் பற்றிய செய்திகளை நாமும் நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் தங்கள் காதலை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கௌதம் கார்த்திக்… ” சரியான நபர் உங்கள் வாழ்வில் வந்தால் என்ன நடக்கும்?பெரும்பாலானவர்கள் சொல்வார்கள், நீங்கள் அவர்கள் மீது உங்கள் கண்களை வைத்த நொடியில் நீங்கள் அன்பினால் நிறைந்திருப்பீர்கள்.

உங்கள் இதயத்தில் பட்டாம்பூச்சிகள் பறந்து செல்வது போல் உணரும்..

மஞ்சிமா… எங்கள் பயணம் வித்தியாசமானது, lol. நாங்கள் எப்போதும் ஒருவரையொருவர் கேலி செய்வதன் மூலம் தொடங்கினோம், எப்போதும் சச்சரவு செய்துகொண்டு, முட்டாள்தனமான விஷயங்களைப் பற்றி வாதிட்டோம்.

எங்கள் நண்பர்களால் கூட எங்கள் வாதங்களைத் தாங்க முடியவில்லை.

இந்த பந்தத்திற்கு முதலில் ‘நட்பு’ என்று பெயர் வைக்க முடிவு செய்தேன்.
ஆனால் அதை விட பந்தம் வலிமையாக இருந்தது…

நீ அதை வளர்த்துக் கொண்டே இருந்தாய்…
நான் அதற்கு ‘சிறந்த நண்பர்கள்’ என்று பெயரிட்டேன்.

ஆனால் அது அதைவிட வலுவாக வளர்ந்தது… நீ அதை நாளுக்கு நாள் வலுவாக வளர்த்தாய்.

நான் மோசமான நிலையில் இருந்தபோது நீ என் பக்கத்தில் நின்றாய்.
நீ எப்போதும் என்னை வாழ்க்கையில் முன்னோக்கி தள்ளுகிறாய், என்னை விட்டுக்கொடுக்க விடமால், எப்போதும் எனக்காக நேர்மறையாக இருக்கிறாய், என் சுயத்தையோ அல்லது என் சுய மதிப்பையோ சந்தேகிக்க விடாமல் இருக்கிறாய்.

என் வாழ்க்கையில் நீ இருப்பதால் தான் இதுவரை நான் உணராத ஒரு அமைதி இப்போது என் இதயத்தில் இருக்கிறது. இந்த பிணைப்பை விவரிக்க ‘காதல்’ என்ற வார்த்தை கூட போதுமானது என்று நான் நம்பவில்லை.

நீ என் பக்கத்தில் இருந்தால், வாழ்க்கை என் மீது வீசக்கூடிய எதையும் என்னால் எதிர்கொள்ள முடியும்.

இந்த சிறப்பு பந்தத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ள நீ தேர்ந்தெடுத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

நாங்கள் ஒன்றாக சேர்ந்து எங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு என்னால் காத்திருக்க முடியாது!” என கௌதம் கார்த்திக் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான மஞ்சிமா மோகன் பதிவில்…

“மூன்று வருடங்களுக்கு முன்பு நான் முற்றிலும் தொலைந்து போன போது நீ என் வாழ்வில் ஒரு காவல் தேவதை போல வந்தாய்.

வாழ்க்கையைப் பற்றிய என் கண்ணோட்டத்தை மாற்றி, நான் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர வைத்தாய்!

நான் குழப்பமாக இருந்த போதெல்லாம் நீ என்னை தெளிவடைய செய்தாய். என் குறைகளை ஏற்றுக்கொள்ளவும், அடிக்கடி நானாக இருக்கவும் நீ எனக்குக் கற்றுக் கொடுத்தாய்.

நான் உன்னிடம் நேசிக்கும் சிறந்த விஷயம் என்னவென்றால், நான் யார் என்பதற்காக நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய் என்பதுதான்.

நீ எப்போதும் எனக்கு பிடித்த எல்லாவற்றிலும் இருப்பாய்” என மஞ்சிமா மோகன் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CkYLNwBvDF9/?igshid=YmMyMTA2M2Y=

https://www.instagram.com/p/CkYLNznSHFy/?igshid=YmMyMTA2M2Y=

96 & ‘பிகில்’ பட நடிகை வர்ஷாவின் காதல்.; இப்படியொரு பதிலை எதிர்பார்க்கவே இல்ல?!

96 & ‘பிகில்’ பட நடிகை வர்ஷாவின் காதல்.; இப்படியொரு பதிலை எதிர்பார்க்கவே இல்ல?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

’96’ படத்தில் விஜய்சேதுபதியின் மாணவியாக நடித்தவர் வர்ஷா மொல்லம்மா.

இவர் விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பிராமண பெண்ணாகவும் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின் மகனை காதலிப்பதாகவும், திருமணம் செய்யபோவதாகவும் தகவல்கள் வந்தது.

இந்த செய்தி அதிகளவில் பரவியதால் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் வர்ஷா .

இது பற்றிய அவர் கூறுகையில்…

“நான் யாரையும் காதலிக்கவும் இல்லை. எனது முழு கவனம் சினிமாவில் மட்டுமே. ஒருவேளை நீங்கள் யூகத்தின் அடிப்படையில் சொல்லும் அந்த நபர் யார் என்று எனக்கு தெரிவித்தால் எனது குடும்பத்தாரிடம் சொல்லி நானே பேச சொல்லுவேன்’ என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் வர்ஷா.

More Articles
Follows