பவர் ஸ்டாருக்கு ஜோடியாகும் சிம்பு – ஜெயம் ரவி பட ஹீரோயின்

niddhi agerwal‘முன்னா மைக்கேல்’ என்ற ஹிந்தி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நிதி அகர்வால்.

பின்னர் சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு படங்களில் நடித்தாலும்
பிரபலமாகவில்லை.

இதனை அடுத்து பூரி ஜெகநாத் இயக்கிய ‘ஐஸ்மார்ட் சங்கர்’ என்ற படத்தில் நடித்தார்.

இந்தப் படம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் நிதிக்கு வாய்ப்புகள் வந்தன.

பொங்கலுக்கு ரிலீசான சிம்புவின் ’ஈஸ்வரன்’ & ஜெயம் ரவியின் ‘பூமி’ ஆகிய 2 படங்களிலும் ஹீரோயினாக நிதி அகர்வால் நடித்திருந்தார்.

இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாணின் 27-வது படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார் நிதி அகர்வால்.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகும் இப்படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகிறது.

கிரிஷ் இயக்கும் இந்தப் படம், தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் உருவாகவுள்ளது.

Actress Nidhhi Agerwal to play female lead in Power Star’s next film

Overall Rating : Not available

Latest Post