தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்ய லக்ஷ்மி.
இவரது சமீபத்திய படங்களான பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஸ்தி ஆகிய இரு படங்களும் ரசிகர்களின் மகத்தான வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டார்.
இதனையடுத்து இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வலம் வந்தன .
எனவே தற்போது இதற்கு விளக்கம் அளித்து ஒரு புதிய பதிவை பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.
அந்தப் பதிவில்.. நான் நடிகர் அர்ஜுன் தாஸை சந்தித்தேன்.. போட்டோ எடுத்தேன். வேறு எதுவும் இல்லை.. அவர் எனது நண்பர் மட்டுமே.. அவர் உங்களுக்கானவர்..” என விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார்.
Actress Aishwarya Lakshmi explains about her relationship with actor Arjun Das