சந்தானம் பட டீஸர் வெளியானது.. அடுத்து கன்னட இயக்குனருடன் கூட்டணி

சந்தானம் பட டீஸர் வெளியானது.. அடுத்து கன்னட இயக்குனருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜனவரி 21.. இன்று நடிகர் சந்தானம் தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதனை முன்னட்டு இவர் ஹீரோவாக நடித்துள்ள ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் டீசர் காலை வெளியானது.

இந்த படத்தின் டீசரை நடிகர்கள் ஆர்யா மற்றும் ஜீவா தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர்.

‘வஞ்சகர் உலகம்’ படத்தை இயக்கிய மனோஜ் பீதா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் நடிகை ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராம்தாஸ், இந்துமதி, மதன் தட்சிணாமூர்த்தி, ஆதிரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நவீன் பாலிஷெட்டி மற்றும் ஸ்ருதி ஷர்மா தெலுங்கில் வெளியான ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ (2019) என்ற திரைப்படம் தமிழ் ரீமேக் இதுவாகும்.

விரைவில் கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் என்பவர் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சந்தானம்.

கன்னடத்தில் லவ்குரு, ஆரஞ்ச் ஜூம் ஆகிய படங்களை இயக்கியவர் பிரசாந்த் ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Santhanam’s new film teaser released

JUST IN ‘ஆர்ஆர்ஆர்’ பட புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தார் ராஜமெளலி

JUST IN ‘ஆர்ஆர்ஆர்’ பட புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தார் ராஜமெளலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி படங்களை தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள மிகப்பிரம்மாண்ட படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’.

இதனை சுருக்கமாக ஆர்ஆர்ஆர் என அழைக்கின்றோம்.

இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடுகின்றனர்.

இப்படம் வரும் கடந்த 2022 ஜனவரி 7ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்து பின்னர் ஒத்தி வைத்தது.

இந்தியா முழுவதும் படக்குழு பயணம் செய்து பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமலாகி வருகிறது.

எனவே தேதி குறிப்பிடாமல் படத்தின் ரிலீசை ஒத்தி வைப்பதாக படக்குழு அறிவித்தது.

இந்திய சினிமாவின் பெருமையைச் சரியான நேரத்தில் நாங்கள் வெளியிடுவோம்” என அப்போது தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

அந்த அறிவிப்பில்…

கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்றால் மார்ச் 18ஆம் தேதி படத்தை வெளியிடுவோம். அல்லது மற்றொரு தேதியாக ஏப்ரல் 28ல் படத்தை வெளியிடுவோம் என படக்குழு அறிவித்துள்ளது.

அந்த சமயத்தில் தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

New release date announced for RRR movie

கொரோனா பரவல் எதிரொலி.: தள்ளிப் போகும் விஷால்-சூர்யா படங்கள்

கொரோனா பரவல் எதிரொலி.: தள்ளிப் போகும் விஷால்-சூர்யா படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமலில் உள்ளது. இரவு 10 முதல் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு உள்ளது.

மேலும் கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.

வருகிற 23.01.2022 ஞாயிறு அன்றும் முழு ஊரடங்கு என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இது அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு விஷால் தயாரித்து நடித்துள்ள வீரமே வாகை சூடும் படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையால் வீரமே வாகை சூடும் படம் தள்ளிப்போகும் என தெரிய வந்துள்ளது.

அதுபோல் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீசாகும் என முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது இந்த படமும் தள்ளிப் போகும் எனத் தெரிய வந்துள்ளது.

எனவே இதற்கான அறிவிப்பை விரைவில் இரு தரப்பு தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

Vishal and Suriya films postponed due to covid

ஆஸ்கர் விருது தகுதி பட்டியலில் ஒரே தமிழ்ப் படம் ‘ஜெய்பீம்’

ஆஸ்கர் விருது தகுதி பட்டியலில் ஒரே தமிழ்ப் படம் ‘ஜெய்பீம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2022 ஆம் ஆண்டு இப்போதுதான் துவங்கியது, திரைப்பட விருதுகளின் சீசனும் துவங்கிவிட்டது. திரைத்துறையின் மிக உயரிய ஆஸ்கர் விருது குழு, இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க விருது கௌரவத்திற்குத் தகுதியான இருநூற்று எழுபத்தாறு திரைப்படங்களின் பெயர்களை இன்று அறிவித்தது.

தகுதியான 276 படங்களில், இந்த மதிப்புமிக்க விருதுக்கு போட்டியிட நடிகர் சூர்யா நடித்த “ஜெய்பீம்” திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தகுதி பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த ஆண்டு சூர்யாவின் “சூரரைப் போற்று” 93வது அகாடமி விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ஜெய்பீம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியான நொடியிலிருந்தே, பழங்குடியினர், அதிகார வர்க்கத்தினரால் ஒடுக்கப்பட்டதை அருமையாக கையாண்டததற்காக அனைவராலும் பாராட்டப்பட்டது. சமீபத்தில் ஆஸ்கர் அகாடமி குழுவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இத்திரைப்படத்தின் பின்னணி வீடியோ வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வு இது சர்வதேச திரைப்பட அரங்கில் பெரும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. ஆங்கிலம் அல்லாத அயல்மொழித் திரைப்படப் பிரிவில் மதிப்புமிக்க கோல்டன் குளோப்ஸ் 2022க்கான அதிகாரப்பூர்வ நுழைவையும் இந்தத் திரைப்படம் பெற்றுது குறிப்பிடத்தக்கது.

ஜெய்பீம் திரைப்படம் 90 களில் தமிழ்நாட்டில் (கடலூர் மாவட்டம்) நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்ட தமிழ் மொழித் திரைப்படமாகும். இது இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜகண்ணு மற்றும் செங்கேனி ஆகியோரின் கதையை விவரிக்கிறது. ராஜகண்ணு உள்ளூர் காவல்துறையினரால் செய்யாத குற்றத்திற்கு காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் சம்பவத்தால், அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாறுகிறது.

இயக்குநர் T.J.ஞானவேல் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்துள்ளனர். இப்படத்தில் சூர்யா மற்றும் லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ் இவர்களுடன் மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை வாக்களிப்பு ஜனவரி 27, 2022 வியாழன் அன்று தொடங்குகிறது, பரிந்துரைகள் முடிவு பிப்ரவரி 8, 2022 செவ்வாய் அன்று அறிவிக்கப்படும். விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 27, 2022 அன்று ஹாலிவுட் & ஹைலேண்டில் உள்ள டால்பி®️ தியேட்டர் ஹாலிவுட் மற்றும் ஏபிசி மற்றும் உலகெங்கிலும் 200 க்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Suriya’s critically acclaimed movie Jai Bhim enters the 94TH ACADEMY AWARDS

மம்மூட்டியை அடுத்து கொரோனா பாதிப்பில் துல்கர் & ‘பிக்பாஸ்’ பாவ்னி

மம்மூட்டியை அடுத்து கொரோனா பாதிப்பில் துல்கர் & ‘பிக்பாஸ்’ பாவ்னி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாமானியர் முதல் பிரபலங்கள் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கமல் மம்மூட்டி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமான கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டார்.

தற்போது நடிகர் மம்மூட்டி தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இவர்கள் வரிசையில் தற்போது மம்மூட்டி மகனும் நடிகருமான துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதுபோல் பிக்பாஸ் 5 நிகழ்ச்சி பிரபலம் பாவ்னிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாம்.

பிக்பாஸ் சீசன் 5 போட்டியில் இறுதிவரை இருந்து 3வது இடத்தை பிடித்தவர் பாவ்னி என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் விரைவில் குணமாகி நலம் பெற வேண்டும் என இவர்களது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Dulquer Salman and Pavni Reddy tested positive for Covid 19

ரஜினி-தனுஷ் பட பதிப்புரிமை தருவதாக விஜய் பட தயாரிப்பாளர் மோசடி

ரஜினி-தனுஷ் பட பதிப்புரிமை தருவதாக விஜய் பட தயாரிப்பாளர் மோசடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலேசியாவில் இயங்கி வரும் தனது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் (Malik Streems Corporation) என்கிற நிறுவனம் வாயிலாக தமிழ் திரைப்படங்களை முறைப்படி உரிமம் பெற்று வெளிநாடுகளில் வெளியிடும் தொழில் செய்து வருபவர் டத்தோ அப்துல் மாலிக். கபாலி போன்ற பல படங்களை இந்த நிறுவனம் தான் வெளியிட்டது.

இவரது நிறுவனத்தை அணுகி, ரஜினிகாந்த்தின் ‘பேட்ட’ ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா-3’ மற்றும் தனுஷின் ‘நான் ருத்ரன்’ ஆகிய மூன்று படங்களுக்கான பதிப்புரிமை தன்னிடம் இருப்பதாக கூறி அவர்களை நம்பவைத்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி ராமசாமி, அவற்றை தருவதாக கூறி அந்த நிறுவனத்திடம் இருந்து 30 கோடி ரூபாய் பெற்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் அவரிடம் பேட்ட படத்தின் பதிப்புரிமை இல்லை என்று தெரியவந்து, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் அதுகுறித்து கேட்டபோது, 15 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்து அப்போதைக்கு சமாளித்துள்ளார் முரளி ராமசாமி.

அதன்பின்னர் ‘காஞ்சனா-3’ மற்றும் ‘நான் ருத்ரன்’ ஆகிய படங்களின் பதிப்புரிமையும் அவரிடம் இல்லை என்பதும் தங்களை மோசடியாக ஏமாற்றி பணம் பெற்றிருக்கிறார் என்பதும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து முரளி ராமசாமியிடம் கேட்டபோது, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை திருப்பி தர மறுத்ததுடன், அலட்சியமாகவும் பதிலளித்துள்ளார். ஒருகட்டத்தில் தமிழ்நாட்டில் என்னை மீறி உங்கள் உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டலும் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி மீது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன், சென்னை மூலம் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர் மீது தற்போது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய் 3 வேடங்களில் நடித்த ‘மெர்சல்’ படத்தை தங்கள் 100வது படைப்பாக தயாரித்தது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Case filed against Mersal producer Murali Ramasamy

More Articles
Follows