‘மிஷன் இம்பாஸிபிள் 7’ படத்தில் டாம் குரூஸ் உடன் இணையும் பிரபாஸ்.?

‘மிஷன் இம்பாஸிபிள் 7’ படத்தில் டாம் குரூஸ் உடன் இணையும் பிரபாஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhas Tom Cruise‘ஆதிபுருஷ்’ மற்றும் ‘சலார்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார் நடிகர் பிரபாஸ்.

கொரோனா ஊரடங்கால் ‘சலார்’ படத்தில் இன்னும் ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாம்.

இந்த நிலையில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிப்பில், வெளியாகியுள்ள ‘மிஷன் இம்பாஸிபிள்’ படத்தில் 6 பாகங்கள் உலக அளவில் சூப்பர்ஹிட்டானது.

தற்போது இந்த ‘மிஷன் இம்பாஸிபிள்’ 7ஆம் பாகம் தயாராகி வருகிறது.

இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல், சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. (நாம் அப்படி ஒரு தவறான பொய் செய்தி போடவில்லை)

இந்த ‘மிஷன் இம்பாஸிபிள்’ குறித்து நெட்டிசன் ஒருவர் படத்தின் இயக்குனரிடம் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளிக்கையில்…

பிரபாஸ் திறமையான நடிகர்.. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் தொடர்பாக அவரை நான் சந்தித்ததே இல்லை’ என பட இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்கோரி கூறியுள்ளார்.

Actor Prabhas to join Mission Impossible 7 ?

ஆசிரமம் தொடங்கினார் லிங்குசாமி..; உதயநிதி & கீர்த்தி சுரேஷ் நேரில் வாழ்த்து

ஆசிரமம் தொடங்கினார் லிங்குசாமி..; உதயநிதி & கீர்த்தி சுரேஷ் நேரில் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. பல உயிர்கள் தினம் இறப்பதை கண்கூடாக பார்த்து வருகிறோம்.

கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றன.

அரசுக்கு உதவிடும் வகையில் தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண நிதியை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தயாரிப்பாளரும் பிரபல இயக்குனருமான லிங்குசாமி, கொரோனா நோயாளிகளுக்காக ஓர் ஆசிரமத்தைத் தொடங்கி உள்ளார்.

மணப்பாக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த ஆசிரமத்தின் தொடக்க விழாவில், உதயநிதி ஸ்டாலின், தா.மோ. அன்பரசன் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவரை பாராட்டினர்.

CIPACA_Official உடன் இணைந்து ஹார்ட்ஃபுல்_நெஸ் ஏற்பாடு செய்த அம்கம்லேஷ்தாஜியின் ஆசிர்வாதத்துடன் இந்த ஆசிரமம் தொடங்கப்பட்டுள்ளது என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்தார்.

Director Lingusamy opens Ashram for covid patients

lingusamy

கொரோனா தேவி என்னை போல இருப்பது எனக்கு கிடைச்ச ஆசி.. அது மூடநம்பிக்கை இல்லை.; வனிதா ஓபன் டாக்

கொரோனா தேவி என்னை போல இருப்பது எனக்கு கிடைச்ச ஆசி.. அது மூடநம்பிக்கை இல்லை.; வனிதா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசுக்கு ஒரு உருவம் கொடுத்து கோவை மாவட்டத்தில் கொரோனா தேவி கோயிலை உருவாக்கியுள்ளனர்.

அதை வணங்கி வழிப்பட்டால் கொரோனா நோய் நம்மை தாக்காது எனவும் புதிய முறையை அங்குள்ளவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து ஒருபக்கம் கொரோனா தேவி சிலையையும் மற்றொரு பக்கம் வனிதா விஜயகுமாரின் படத்தையும் இணைத்து மீம்ஸ்கள் பரவ ஆரம்பித்தன.

இந்த சிலை வனிதா முகச்சாயலில் இருப்பதால் இப்படியான மீம்ஸ்கள் உருவானது.

இதுகுறித்து முன்னணி ஊடகத்திற்கு நடிகை வனிதா விஜயகுமார் பேட்டியளித்துள்ளார்.

அவரின் பேட்டியில்…

“கொரோனா தேவியோடு என் முகத்தை பொருத்தி வந்த மீம்ஸ்களைப் பார்த்தவுடன் நானும் என் குழந்தைகளும் சிரித்தே விட்டோம்.

நான் மூக்குத்தி போடுவேன். கொரோனா தேவி அம்மனுக்கும் மூக்குத்தி போட்டதால் என்னைபோல் தெரிகிறது என நினைக்கிறேன்.

கொரோனா தேவி அம்மனை பார்க்கும்போது பலருக்கும் என்னை பார்க்கிற மாதிரி தோன்றியிருப்பது ஆச்சரியமான விஷயம் தான்.

இது எனக்கு கிடைத்த ஆசி. இந்த கருத்தை பாசிட்டிவாக எடுத்துக்கொள்கிறேன்.

நமக்கு அம்மை வந்தால் நம் ஐதீகத்தின்படி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று நம்பிக்கையோடு கூழ் ஊற்றுவார்கள்.

இப்போதுவரை மக்கள் அதை செய்து வருகின்றனர்.

இதனை மூட நம்பிக்கை என்று சொல்ல முடியாது. அதே போலத்தான் இதுவும்..

கொரோனா சூழலில் மக்கள் நம்பிக்கையோடு கொரோனா தேவி சிலையை அமைத்துள்ளனர்.”

இவ்வாறு வனிதா பேசியுள்ளார்.

Vanitha Vijayakumar responds netizens comparison with corona devi with her

corona devi

சூப்பர் ஹிட் டிவி சீரியல்களை தயாரித்த அபிநயா கிரியேஷன்ஸ் ஜேகே காலமானார்

சூப்பர் ஹிட் டிவி சீரியல்களை தயாரித்த அபிநயா கிரியேஷன்ஸ் ஜேகே காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer JKகும்பகோணத்தைச் சேர்ந்த ஜேகே அவர்கள் (அவருடைய முழுபெயர் ஜே. கிருஷ்ணசாமி) கல்லூரிப் படிப்பை முடித்ததும் சுங்க இலாகாவில் முக்கிய அதிகாரியாக பணியாற்றிவர்

சன் டிவி தொடங்கிய காலம்.

ஜே.கே. அவர்களின் மகன்கள் விஜய், ஆனந்த், பிரசன்னா ஆகியோருடன் இணைந்து ஜே.கே. அவர்களின் மனைவி திருமதி ராதா கிருஷ்ணசாமி அவர்கள், அபிநயா கிரியேஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, தயாரிப்பில் இறங்கினார்.

1996 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி கோவை அனுராதா இயக்கத்தில் ‘காஸ்ட்லி மாப்பிள்ளை’ என்கிற தொடர் உருவாகி சன் டிவியில் ஒளிபரப்பானது.

அதிக ரசிகர்களை கவர்ந்து பெரும் புகழ் பெற்ற அந்த தொடர், சன் டிவியின் நம்பர் ஒன் தொடராக விளங்கியது.

அபிநயா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் தொடர் என்றால், குழந்தைகளுடன் அனைவரும் பார்த்து ரசிக்கலாம் என்கிற நன்மதிப்பை காஸ்ட்லி மாப்பிள்ளை தொடர் ஏற்படுத்தியிருந்தது.

அடுத்து மாண்புமிகு மாமியார், மகாராணி செங்கமலம், க்ரீன் சிக்னல், செல்லம்மா, மங்கள அட்சதை, கேள்வியின் நாயகனே, என் பெயர் ரங்கநாயகி என எட்டு வார தொடர்கள் அபிநயா கிரியேஷன்ஸ் தயாரித்து சன் டிவியில் ஒளிபரப்பானது. அனைத்து தொடர்களும் ரசிகர்களிடம் பேராதரவை பெற்றது.

அதன் பிறகு, தனது சுங்க இலாகா பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஜே.கே. அவர்கள் அபிநயா கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் கதை இலாக்கவை தொடங்கி, பத்ரி இயக்கிய மாங்கல்யம் மெகா தொடரில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டார்.

330 பகுதிகள் ஒளிபரப்பான மாங்கல்யம் மெகாத்தொடர், மெகா தொடர்களை தொடர்ந்து தயாரிக்கும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அபிநயா கிரியேஷன்ஸ்க்கு வழங்கியது.

அதன்பிறகு ஆடுகிறான் கண்ணன், தீர்க்கசுமங்கலி, செல்லமடி நீ எனக்கு, திருப்பாவை, அனுபல்லவி, வெள்ளைத் தாமரை, தேவதை என்று ஏழு மெகாத் தொடர்கள் அபிநயா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாக்கி சன் டிவியில் ஒளிபரப்பாகின.

இதில் திருப்பாவை மெகா தொடரை கதை, வசனம் எழுதி ஜே.கே. இயக்கினார்.

அவருக்குள் உள்ள எழுத்தாளனை இந்த தொடர் பயன்படுத்திக் கொண்டது. மற்ற தொடர்களும் அவருக்குள் இருந்த படைப்பாளனை பயன்படுத்திக் கொண்டன.

இன்று முன்னணி இயக்குனராக விளங்கும் சமுத்திரக்கனி, இசையமைப்பாளர் சத்யா உட்பட ஏராளமான கலைஞர்களை தமிழ் திரை உலகிற்கும், சின்னத்திரை உலகிற்கும் தந்த நிறுவனம், ஜே.கேயின் அபிநயா கிரியேஷன்ஸ்….

ஜீ தமிழில் அடுத்தடுத்து ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி தொடரின் இயக்குநர் பிரியன், செம்பருத்தி தொடரின் இயக்குனர் நீராவி பாண்டியன் ஆகியோரும் அபிநயா கிரியேஷன்ஸ் அறிமுகப்படுத்திய இயக்குநர்களே….

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு வாரமாக குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜே.கே. நேற்று இரவு 11 மணிக்கு காலமானார்.

இன்று மாலை பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்கு நடைபெறுகிறது.

Abinaya creations founder JK died due to corona

பர்ஸ்ட் லுக் ஓல்டு ஆச்சு.. ப்ரீ லுக் ட்ரெண்டை ஆரம்பித்தார் அல்லு சிரிஷ்

பர்ஸ்ட் லுக் ஓல்டு ஆச்சு.. ப்ரீ லுக் ட்ரெண்டை ஆரம்பித்தார் அல்லு சிரிஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Allu Sirishஅல்லு சிரிஷ் அவரது அடுத்தப் படத்தின் ப்ரீ லுக்கை வெளியிட்டார்.

இந்தப் படத்தில் அல்லு சிரிஷுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார்.

ப்ரீ லுக் போஸ்டர் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதற்காக அல்லு சிரிஷின் ரசிகர்கள் காத்திருந்ததால் எதிர்ப்பார்ப்பை ஈடு செய்த அந்தப் போஸ்டரை #Sirish6 என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரின் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

விஜேதா படப் புகழ் ராகேஷ் சசி இப்படத்தை இயக்கியிருக்கிறார். GA2 பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தை அல்லு அரவிந்த் வழங்குகிறார்.
ப்ரீ லுக் வெளியீட்டோடு ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 30ல், அல்லு சிரிஷின் பிறந்தநாளன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது.
ரசிகர்களுக்கு விருந்துபடைக்கும் வகையில், ஃப்ர்ஸ்ட் லுக்குக்கு முன்னதாக இன்னொரு ப்ரீ லுக் போஸ்டரும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது டோலிவுட்டில் புதிய ட்ரெண்டை உருவாக்கியுள்ளது.

அல்லு சிரிஷின் ABCD திரைப்படம் வெளியாகி இரண்டாண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக அல்லு சிரிஷ் இந்தியில் டான்ஸ் ஆல்பம் ஒன்றில் தோன்றினார் அந்த வீடியோ ரிலீஸான சில நாட்களிலேயே யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தது.

தெலுங்கு, மலையாள மொழிகளில் அல்லு சிரிஷின் படங்களைப் பார்த்து ரசிகர்கள் அவர் மீது அளவற்ற எதிர்பார்ப்பை வைத்து புது வரவுக்காகக் காத்திருக்கின்றனர்.

Actor Allu Sirish announces his next

‘ராட்சசன்’ பட இன்பராஜை விட அவர்கள் மோசமானவங்க.. – டைரக்டர் ராம்குமார்

‘ராட்சசன்’ பட இன்பராஜை விட அவர்கள் மோசமானவங்க.. – டைரக்டர் ராம்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director ram kumarராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் & அமலா பால் நடிப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கிய படம் ‘ராட்சசன்’

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இன்பராஜ் கேரக்டர் உடன் PSBB ஆசிரியர் ராஜகோபாலனை தொடர்புபடுத்தி பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பள்ளி வகுப்பிலேயே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் கேரக்டர் தான் இன்பராஜ் கேரக்டர்.

இதனை PSBB ராஜகோபாலனுடன் ஒப்பிட்டு் பேசப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், இது குறித்து பேசியுள்ளார் அந்த திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார்..

அவரின் பதிவில்….

ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யபடவில்லை. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள்!
#PSBB

இவ்வாறு பதிவிட்டுள்ளார் ராம்குமார்.

Ratsasan director Ram Kumar on PSBB issue

More Articles
Follows