நடிகர் மன்சூர் அலிகான் ஆஸ்பத்திரியில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.!

mansoor ali khan tamil actorவிஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரள செய்தவர் மன்சூர் அலிகான்.

பல படங்களில் வில்லனாக நடித்த இவர் பின்னர் படங்களை தயாரித்தும் இயக்கியும் ஹீரோவாக நடித்தார்.

சமீப காலமாக காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியுற்றார்.

இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் சென்னை அமைந்தகரை பில்ரோத் மரு‌த்துவமனை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் கிட்னியில் பெரிய சைஸ் கல் அடை‌ப்பு ஏற்பட்டு மிகுந்த அவதிப்பட்டுள்ளார்.

எனவே உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருக்கிறார்.

நடிகர் மன்சூர் அலிகானுக்கு கொரோனா டெஸ்ட் எடுத்ததில், அவருக்கு ‘கொரோனா நெகட்டிவ்’ என ரிசல்ட் வந்துள்ளது!

இதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவருக்கு கிட்னி கல் அகற்றும் அறுவை சி‌கி‌ச்சை நடைபெற உள்ளது.

Actor Mansoor Ali Khan admitted in private hospital

Overall Rating : Not available

Latest Post