மெக்கானிக்கல் இன்ஜினியரிடம் விவசாயம் கற்கும் கார்த்தி குடும்பத்தார்

மெக்கானிக்கல் இன்ஜினியரிடம் விவசாயம் கற்கும் கார்த்தி குடும்பத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karthi family learing Agricultureகடந்த சில நாட்களில் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்று ரசிகர்களால் அழைக்ககூடிய நடிகர் கார்த்தி சமூக வலைதளங்களில் தனது விவசாயம் சார்ந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.

கார்த்தி சென்ற வாரம் தனது குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள திரு. வேணுகோபால் அவர்களின் விளைநிலங்களுக்கு சென்றுள்ளார்.

தனது விளைநிலங்களில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது முயற்சி பற்றி மிகவும் பெருமையாக கூறுகிறார். இவரின் முக்கிய குணநலன்களை பார்த்து வியந்து போன கார்த்தி தனது உறவுகளுடன் செங்கல்பட்டு சென்றுள்ளார்.

நடிகர் கார்த்தி தனது புதுமையான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இயற்கை விவசாயத்தை பார்த்து பல புதுமையான விஷயங்கள் கற்றுக்கொண்டேன்.

இது எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத சில அர்த்தங்களை தந்தது. நமது ஆணிவேரான விவசாயத்தை அனைவரும் காப்போம்.

அங்கே கிடைத்த இயற்கையான காற்று, அங்கு சந்தித்த மனிதர்கள், கால்நடை, கோழி அனைத்து காட்சிகளும் கண்முன் வந்து செல்கின்றன.

ஒவ்வொருவரும் கட்டாயம் இங்கு வந்து பல விஷயங்களையும் கற்றுக்கொள்ளவேண்டும்.

மெக்கானிக்கல் இஞ்சினீயரான திரு. வேணுகோபால் அவர்கள் இயற்கை விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் வேளாண்மை தொழிலை பேரார்வத்துடனும் நம்பிக்கையோடும் தனது விளைநிலங்களில் விவசாயம் செய்துவருகிறார்.

இந்த விளைநிலத்தின் உரிமையாளரான வேணுகோபால், நடிகர் கார்த்தி பற்றி கூறினார்.

நான் ஆனந்தவள்ளி பள்ளியில் விவசாயம் சார்ந்த பணிகளை குழந்தைகளுக்கு கற்று தருகிறேன். அப்பள்ளியின் தாளாளர் , நடிகர் கார்த்தியின் குடும்பம் வந்து உங்களிடம் விவசாயம் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் விரும்புகின்றனர் என்று கூறினார்.

மறுநாளே கார்த்தி சார் குடும்பத்தாரிடம் தொடர்பு கொண்டு அவர்களை என் பண்ணைக்கு அழைத்தேன். கார்த்தி சாரை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர் மிகுந்த ஈடுபாடுடன் சின்ன சின்ன விஷயங்களை கூட பொறுமையாக கேட்டு தெரிந்து கொண்டார்.

அவர்கள் குடும்பத்துடன் இங்கு வந்தது எனக்கு பேரின்பமாக இருந்தது .அவரின் வேலைப்பளுவிற்கு இடையில் இங்கு வந்தது பாரட்ட வேண்டியவையாகும்.

பல மக்கள் இந்த இடத்திற்கு வருகிறார்கள். இயற்கைக்கு மாறாக செயற்கை பொருட்களை பயன்படுத்தினால் ஆபத்து நமக்குதான் என்பதை உணர வேண்டும்.

எனவே செயற்கையானவற்றை தவிர்த்து இயற்கை தரும் பலன்களை பற்றி தெரிந்து கொண்டு அதன்படி வாழ முயற்சிசெய்வோம்.

மேலும், செலவில்லா விவசாயம் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாய் உள்ளவர்கள் இந்த இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் www.ilearnfarming.com

Actor Karthi family learing Agriculture

students agriculture

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 100% ரஜினி ஸ்டைல் பார்முலா

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 100% ரஜினி ஸ்டைல் பார்முலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthik subbaraj going to give Rajini formula movie again

சூப்பர் ஸ்டார் ரஜினி படம் என்றாலே அதற்கு ஒரு பார்முலா இருக்கும். அவருக்கான ஸ்டைல், ஆக்சன், பாடல், சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்து மாஸாக இருக்கும்.

படிக்காதவன், மாப்பிள்ளை, அண்ணாமலை, பாட்ஷா முதல் படையப்பா வரை அப்படியே இருந்தன.

ஆனால் அண்மை காலமாக ரஜினி படங்கள் அப்படியில்லை.

எந்திரன், லிங்கா மற்றும் கபாலி ஆகிய படங்களில் ரஜினியை வேறு கோணத்தில் காண்பித்தனர்.

இந்நிலையில் ரஜினி அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்காக ரஜினிகாந்த் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து டைரக்டர் கூறுகையில்…

ரஜினியை மனதில் வைத்து தான் ஜிகர்தண்டா படத்தில் பாபிசிம்ஹாவின் கேரக்டரை உருவாக்கியிருந்தேன். அது அவருக்கான வேடம் தான்.

அதனால்தான் அந்த கேரக்டரில் ரஜினி தாக்கம் அதிகமிருந்தது.

ரஜினி சாரும் அந்த படத்தைப் பார்த்து விட்டு, என்னை பார்த்த மாதிரியே இருந்தது என்றார்.

அந்த அசால்ட் சேது கேரக்டர்தான் எனக்கு இந்த வாய்ப்பை பெற்று தந்துள்ளது.

ரஜினிக்கான இந்த ஸ்கிரிப்ட்டை நான் ரொம்பவே நேசிக்கிறேன்.

அவரை மனதில் வைத்துக் கொண்டே ஒவ்வொரு காட்சியையும் வைத்துள்ளேன்.

இது முழுக்க முழுக்க ரஜினி ஸ்டைல் படமாக இருக்கும்.

ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற என் கனவு விரைவில் நனவாகப்போகிறது.” எனக் கூறினார்.

அப்படியென்றால் மீண்டும் ரஜினியின் ஸ்டைல் பார்முலாவில் ஒரு படம் உருவாகிறதோ..?

Karthik subbaraj going to give Rajini formula movie again

மீண்டும் வடிவேலுக்கு தந்தையாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி

மீண்டும் வடிவேலுக்கு தந்தையாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Again Vadivelu and Dindigul i leoni joins for new projectதிமுகவின் ஆஸ்தான பேச்சாளரான திண்டுக்கல் ஐ. லியோனி இதுவரை ஒரு படத்தில்தான் நடித்துள்ளார்.

கங்கா கௌரி என்ற படத்தில் அருண்விஜய் மற்றும் வடிவேலுக்கு கஞ்ச கருமியான அப்பாக நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் அவருக்கு சினிமா வாய்ப்பு வந்துள்ளதாக அவரே தன் மேடை பேச்சில் தெரிவித்துள்ளார்.

அந்த படத்திலும் வடிவேலுக்கு அப்பாவாக நடிக்க கேட்டிருக்கிறார்களாம்.

அதில் வடிவேலு, ரோபோ சங்கர், சூரி ஆகிய மூவரும் சகோதரர்களாக நடிக்கிறார்களாம்.

இதனையடுத்து இயக்குனர் சீனு ராமசாமியுடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம்.

Again Vadivelu and Dindigul i leoni joins for new project

I refuse to act with Rajini says Dindigul i Leoni

தனுஷுக்கு பதிலாக சிம்பு; மீண்டும் வாலு டைரக்டருடன் இணைகிறார்

தனுஷுக்கு பதிலாக சிம்பு; மீண்டும் வாலு டைரக்டருடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu and Vijay chandar join again for Needi Naadi Oke Katha Tamil remakeதெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘நீடி நாடி ஒகே கதா’ என்ற படத்தின் தமிழ் ரீ-மேக்கில் தனுஷ் நடிக்கிறார் என்ற செய்தி வெளியானது.

இப்படத்தை தாணு தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இதை தாணு முற்றுலும் மறுத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் சிம்பு நடிக்க போவதாக செய்திகள் வந்துள்ளன.

இப்படத்தை வாலு மற்றும் விக்ரமின் ஸ்கெட்ச் படங்கள் இயக்கிய விஜய் சந்தர் இயக்குவார் என தகவல்கள் வந்துள்ளன.

வாலு படம் சிம்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எனவே இந்த கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Simbu and Vijay chandar join again for Needi Naadi Oke Katha Tamil remake

தன் குழந்தைகளுக்காக காரையும் வீட்டையும் மாற்றிய விஜய்

தன் குழந்தைகளுக்காக காரையும் வீட்டையும் மாற்றிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vijay Changed his home and Carநடிகர் விஜய்க்கு சொந்தமான ஒரு வீடு சாலிக்கிராமத்தில் இருக்கிறது.

அந்த வீட்டில்தான் தன் அலுவலகத்தை நடத்தி வாடகை கொடுத்து வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி.

இந்த வீட்டை காலி செய்த நடிகர் விஜய் தற்போது சென்னை ஈசிஆர் ரோட்டில் உள்ள நீலாங்கரை வீட்டில் குடியேறிவிட்டார்.

தற்போது அந்த வீட்டில் வசதி குறைவாக இருப்பதாலும் குடும்பத்தினரின் விருப்பத்திற்காகவும் வீட்டை கொஞ்சம் மாற்றி வருகிறாராம்.

இதனால் பனையூரில் உள்ள மற்றொரு வீட்டுக்கு மாறியிருக்கிறார் விஜய்.

இதுபோல் தான் பயன்படுத்தும் காரையும் மாற்றிவிட்டாராம்.

பெரும்பாலும் மாருதி ஸ்விப்ட் காரில் ஷூட்டிங்க்கு வரும் விஜய், தற்போது இன்னோவா காரில்தான் வருகிறாராம்.

Actor Vijay Changed his home and Car

அழகென்ற சொல்லுக்கு அமுதா மீண்டும் ரிலீஸ் ஏன்.? ரிஜன்சுரேஷ் விளக்கம்

அழகென்ற சொல்லுக்கு அமுதா மீண்டும் ரிலீஸ் ஏன்.? ரிஜன்சுரேஷ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Azhahendra Sollukku Amudha movie re release on 30th Marchகடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட முடியாது.

மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்தது அன்றைய தினம் தான்.

அதேசமயம் அந்த துயரத்துடன் சேர்ந்து ரலப் புரொடக்சன்ஸ் சார்பில் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ரபேல் சல்தானாவுக்கு இன்னொரு துயரமும் சேர்ந்துகொண்டது..

ஆம்.. மாண்புமிகு ஜெயலலிதா மறைவதற்கு முன்பு சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார் அல்லவா..?

இந்த சமயத்தில் அவர் எப்படியும் உயிர் பிழைத்து விடுவார் என்கிற நம்பிக்கையுடன், சினிமா உலகமும் வாரந்தோறும் படங்களை வழக்கம்போல ரிலீஸ் செய்து வந்தது..

அந்த நம்பிக்கையில் தான், தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி டிச-2ஆம் தேதி தனது தயாரிப்பில் உருவான ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தையும் கிறிஸ்டல் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் ரிலீஸ் செய்தார் தயாரிப்பாளர் ரபேல் சல்தானா.

படம் பார்த்த ரசிகர்களிடமும் பத்திரிகையாளர்களிடமும் நல்ல படம், பொழுதுபோக்கான நகைச்சுவை படம் என்கிற விமர்சனத்தை பெற்ற இந்தப்படம் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்தது.

ஆனால் டிச-4ஆம் தேதியே அம்மா மறைந்துவிட்டார் என ஒரு வதந்தி பரவ ஆரம்பித்ததும் தியேட்டர்களில் படங்களை திரையிடுவதையும் நிறுத்திவிட்டனர்.

தொடர்ந்து டிச-5ஆஅம் தேதி அம்மா காலமானதையடுத்து அந்தவாரம் முழுதுமே தியேட்டர்கள் பக்கம் செல்வதற்கு பொதுமக்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை.

அதற்கடுத்த வாரத்தில் வேறு படங்கள் ரிலீஸாக ஆரம்பித்த நிலையில், நல்லபடம் என பெயரெடுத்து இருந்தாலும் வெறும் மூன்று நாட்கள் ஓட்டத்துடன் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படம் தியேட்டர்களை விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவானது.

இந்த நிலையில் வரும் மார்ச்-3௦ஆம் தேதி இந்தப்படம் மீண்டும் தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது.

திரையுலகில் புதிய படங்களை திரையிடக்கூடாது என வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், ரிலீஸ் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இந்தப்படத்தின் நாயகன் ரிஜனை சந்தித்து நம் கேள்விகளை முன் வைத்தோம்.

“மாண்புமிகு அம்மா அவர்கள் மறைந்த துயர நிகழ்வுடன் எங்களுக்கு இன்னொரு பேரிடியாக அமைந்துவிட்டது இந்தப்படத்தின் ரிலீஸ். அழகான, அருமையான, நல்ல படத்தை தயாரித்துள்ளோம் என தயாரிப்பாளர் சந்தோஷத்துடன் இந்தப்படத்தை ரிலீஸ் செய்தார்.

எங்களது திரையுலக பயணத்தில் நல்லதொரு திருப்புமுனையாக இருக்கும் என நான், இயக்குனர் நாகராஜன் உள்ளிட்ட அனைவரும் நம்பிக்கையாக இருந்தோம்.

தியேட்டர்களில் இருந்தும் பத்திரிகையாளர்களிடம் இருந்து படம் நன்றாக இருக்கிறது.. விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பாணியில் கலகலவென படம் நகர்கிறது என பாசிடிவான விமர்சனங்கள் வர ஆரம்பித்தன.

ஆனால் மூன்றாம் நாளே முதல்வர் மறைவின் காரணமாக, இந்தப்படம் ஒரு வாரத்தில் தியேட்டரை விட்டு வெளியேறவேண்டிய நிலை உருவானது.

படம் நன்றாக இருந்தாலும், அப்போது செல்லாத நோட்டு விவகாரத்தால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்திருந்தது ஒரு பக்கம், ஜல்லிக்கட்டு போராட்டம், பெரிய படங்கள் ரிலீஸ் என அடுத்து வந்த நாட்களில் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய முயற்சித்தும் அதற்கான வாய்ப்பு எங்களுக்கு சரியாக அமையவில்லை.

ஆனாலும் இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்வதற்காக தேதியை பார்த்துவந்தோம்.

இந்தநிலையில், தற்போது புதிய படங்களை ரிலீஸ் செய்வதில்லை என தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது.

எங்களுடைய படமும் புதிய படம் இல்லை. கால சூழலால் அதற்கான நேர்மையான வசூலைக்கூட சம்பாதிக்க முடியாமல், இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட படம்.

அந்தப்படத்திற்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கிறதே, அதனால் ஏற்கனவே நொ(டி)ந்துபோய் இருக்கும் தயாரிப்பாளருக்கு அவர் இழந்ததை எப்படியாவது மீட்டுக்கொடுத்து விடலாமே என்கிற எண்ணத்தில் தான் இந்தசமயத்தில் ரிலீஸ் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளோம்.

வரும் மார்ச்-3௦ஆம் தேதி இந்தப்படம் சுமார் 125 திரையரங்குகளில் ரிலீசாகிறது.

வரும் வாரம் முதல், மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை துவங்க இருப்பதாலும், கலகலப்பான படங்களை பார்க்க ஆர்வத்துடன் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு இந்த ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்கிற நம்பிக்கையிலும் தான் ரிலீஸ் செய்கிறோம்” என விளக்குகிறார் நாயகன் ரிஜன் சுரேஷ்.

ரிஜன் சுரேஷ், ஆர்ஷிதா, பட்டிமன்றம் ராஜா, போராளி திலீபன், வளவன், தாட்சாயணி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படத்தை நாகராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு கிடைக்கும் வெற்றி தங்களது திரையுலக பயணத்தில் ஒரு புதிய பாதையை அமைத்துக்கொடுக்கும் என திடமாக நம்புகின்றனர் படக்குழுவினர்.

Azhahendra Sollukku Amudha movie re release on 30th March

Azhagendra Sollukku Amudha movie stills (11)

More Articles
Follows