தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால் வித்தியாசமான மாறுபட்ட கதைகளில் படங்கள் வெளியாவது என்பது மிக மிக குறைவு.
அந்த வரிசையில் இந்த வருடம் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வித்தியாசமான கதை களத்ளோடு வெளியாக உள்ளது சியான்கள் என்ற திரைப்படம்.
இந்த படத்தை வைகறை பாலன் இயக்க கரிகாலன் ஹீரோவாக நடித்துள்ளார்.
மேலும் அவரே கேஎல் ப்ரொடக்சன் நிறுவனத்தின் சார்பாக இந்த படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார்.
முத்தமிழ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்க பாபு குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மப்பு ஜோதிகுமார் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
தற்போது இந்த படத்திலிருந்து வீடியோ பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
Actor Karikalan made his acting debut with Chiyaangal