தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான ‘சோலையம்மா’ படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் கரிகாலன்.
அதற்கு பிறகு தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் 70 படத்திற்கும் மேல் நடித்திருந்தார்.
அதில் ‘ரமணா’, ‘அரவான்’, ‘அடிமைசங்கிலி’, ‘நிலாவே வா’, ‘கருப்பி’, ‘ரோஜா’ படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் இயக்கி நடித்த படம் ‘வைரவன்’.
சில காலம் நடிப்பு இயக்கம் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்து உச்சத்தை தொட்டார்.
தற்போது மீண்டும் கலைத்துறையில் கால் பதிக்கிறார்.
காமராஜர் மீது அதிக பற்று கொண்டவர் கரிகாலன். அதனால் காமராஜர் கனவுக் கூடம் என்கிற பெயரில் ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
இதன் மூலம் சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் ஆபாசம் இல்லாத குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் விதமாக் கலாச்சாரம் மீறாமல் நல்ல கதைகள் கொண்ட படமாக வருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க உள்ளோம்.
நான் கெட்டவனாக நடித்து நல்லவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் எனக்கு ஒரு ஆசை.
என்னை சுற்றி எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று. அதற்காக நிறைய முயற்சிகளை எடுக்கிறேன்” என்றார் நடிகர் கரிகாலன்.
இவர் தயாரித்து நடிக்கும் முதல் படத்திற்கு பெருந்தலைவன் என பெயரிட்டுள்ளார்.
Karikalan going to produce 10 movies in Kamarajar Kanavuk Kudam banner