முதன்முறையாக ‘1 ஷூட் 2 பிக்சர்ஸ்’ கருத்துருவாக்கத்தில் ஜெய்வந்த் நடிப்பில் #அசால்ட் & #ஃபால்ட்

Actor Jaivanthவைட் ஹார்ஸ் சினிமாஸ்’ VG ஜெய்வந்த் மற்றும் ஃப்ரீ ஆப் காஸ்ட் புரொடக்ஷன்ஸ்’ பூபதி ராஜா தயாரிப்பில், இயக்குனர் பூபதி ராஜா இயக்கத்தில், ”1 ஷூட் 2 பிக்சர்ஸ்’ கருத்துருவாக்கத்தில் ஜெய்வந்த் நடிக்கும் #அசால்ட் & #ஃபால்ட்.

‘மத்திய சென்னை’, ‘காட்டுப்பய சார் இந்த காளி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து திரைப்படத் தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் என பன்முகங்கொண்ட நடிகர் ஜெய்வந்த், இப்படத்தை தயாரித்து, நாயகனாகவும் நடித்திருக்கிறார்.

#அசால்ட் ஒரு சாமானியன் விதிவசத்தால் ஒரு ரவுடியை எதிர்க்க நேருகின்ற கதையை சொல்ல, #ஃபால்ட் ஒரு முற்றிலும் புதிய கதையை #அசால்ட் திரைப்படத்தின் மேக்கிங் காட்சிகளில் இருந்தே நமக்கு சொல்கிறது.

இப்படத்தில் நாயகன் ஜெய்வந்த் உடன் முக்கிய வேடங்களில் சரவணன், சென்றாயன், ராமர், கோதண்டம் நடிக்க, அவர்களுடன் சோனா, ரிஷா, தேவி, நாகு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ராஜேஷ் குமார் NS ஒளிப்பதிவு செய்ய, அருண் கல்லுமூடு கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்று இருக்கிறார்.

‘V2′ புகழ் விஜய் & விக்கி இசையமைக்க, மெட்ராஸ் மீரான், துப்பாக்கிஸ் மற்றும் பூபதி பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

SP ராஜா சேதுபதி & R சத்தியமூர்த்தி படத்தொகுப்பை கவனிக்க, நடன அசைவுகளுக்கு பூபதி பொறுப்பேற்க, டான் அஷோக் சண்டை காட்சிகளுக்கு விறுவிறுப்பேற்றுகிறார்.

வைட் ஹார்ஸ் சினிமாஸ்’ VG ஜெய்வந்த் மற்றும் ஃப்ரீ ஆப் காஸ்ட் புரொடக்ஷன்ஸ்’ பூபதி ராஜா தயாரிப்பில், இயக்குனர் பூபதி ராஜா இயக்கத்தில், ”1 ஷூட் 2 பிக்சர்ஸ் ‘ கருத்துருவாக்கத்தில் ஜெய்வந்த் நாயகனாக நடித்திருக்கும் #அசால்ட் & #ஃபால்ட் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:

ஜெய்வந்த்
சரவணன்
சென்றாயன்
கோதண்டம்
ராமர்
சோனா
ரிஷா
தேவி
நாகு
சதீஷ் பாபு
ஞானம்
ஜிந்தால் கோபி மற்றும் பலர்.

தயாரிப்பு: வைட் ஹார்ஸ் சினிமாஸ் சார்பாக VG ஜெய்வந்த் & ஃப்ரீ காஸ்ட் ஆப் புரொடக்ஷன்ஸ் சார்பாக பூபதி ராஜா
இயக்கம்: பூபதி ராஜா
ஒளிப்பதிவு: ராஜேஷ் குமார் NS
படத்தொகுப்பு: SP ராஜா சேதுபதி & R சத்தியமூர்த்தி
கலை: அருண் கல்லுமூடு
இசை: ‘V2′ புகழ் விஜய் & விக்கி
பாடல்கள்: மெட்ராஸ் மீரான், துப்பாக்கிஸ் மற்றும் பூபதி
சண்டை பயிற்சி: டான் அஷோக்
நடனம்: பூபதி
விஎஃப்எக்ஸ்: ஆகாஷ் ஆசோம்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Actor JaiVanth’s next film announcement is here

Overall Rating : Not available

Related News

Latest Post