ஒரே ஒரு படம் நடித்து 25 ஆண்டு கால சினிமா வாழ்க்கை கிடைத்தது… – அபிஷேக்

ஒரே ஒரு படம் நடித்து 25 ஆண்டு கால சினிமா வாழ்க்கை கிடைத்தது… – அபிஷேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரே ஒரு படம் நடித்து 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது: நடிகர் அபிஷேக் பேச்சு!

‘மோகமுள்’ என்ற ஒரே ஒரு படம் நடித்தேன்.அதன்மூலம் இருபத்தைந்து ஆண்டுகால சினிமா வாழ்க்கை எனக்குக் கிடைத்தது என்று நடிகர் அபிஷேக கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு:

‘மோகமுள்’ திரைப்படமாக உருவாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன .அந்த வகையில் ‘மோகமுள்’ படத்திற்கு இது வெள்ளிவிழா ஆண்டு. அப் படத்திற்காக எழுதிய திரைக்கதையை நூலாக அப்படத்தை இயக்கிய ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ் உருவாக்கியிருக்கிறார்.இந்த நூலைக் காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.’மோகமுள்’ திரைக்கதை நூலின் வெளியீடு ,44வது புத்தகக்காட்சியில் காவ்யா பதிப்பக அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் திரைக்கதை நூலை அந்தப் படத்தின் நாயகனாக நடித்த அபிஷேக் வெளியிட்டார்.ஜெர்மனியிலிருந்து வந்திருந்த பாரம்பரிய மரபுகள் குறித்த ஆய்வாளர் டாக்டர் சுபாஷினி பெற்றுக்கொண்டார்.

நூலை வெளியிட்டு நடிகர் அபிஷேக் பேசும்போது,

” மோகமுள்’ தான் எனக்கு முதல் படம் .மும்பையில் இருந்த என்னைத் தேடிக் கண்டுபிடித்து இயக்குநர் இதில் நடிக்க வைத்தார்.எனக்கு தமிழே தெரியாது. ஆனாலும் தமிழ் பேசி என்னை நடிக்க வைத்தார்.

என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் “எந்த இன்ஸ்டிடியூட்டில் படித்தீர்கள்?” என்பார்கள்.நான் “மோகமுள் இன்ஸ்டிடியூட்டில் படித்தேன்” என்பேன்.
‘மோகமுள்’ படத்தில் நடித்த போது மூன்றாண்டு காலம் கற்றுக்கொண்ட அனுபவத்தில்தான் இன்றுவரை என் பயணம் சென்று கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருந்தது.

மும்பையில் பிறந்து சென்னையில் செட்டில் ஆகி இருக்கும் நான், ‘இது எனக்கு எழுதி வைக்கப்பட்ட விதி ‘என்று நினைக்கிறேன் .அதுவும் இயக்குநர் எழுதி வைத்த விதி என்று நினைக்கிறேன்.
‘மோகமுள்’ என்கிற ஒரே ஒரு படத்தில் நடித்தேன்.அதன்மூலம் எனக்கு 25 ஆண்டுகாலம் சினிமா டிவி என்று நடிக்கிற வாழ்க்கை கிடைத்தது.

தமிழில் பேசத் தெரியாத எனக்கு இந்த படத்திற்குப் பின் தமிழகத்தில் ஓர் இடம் கிடைத்துவிட்டது .தமிழில் பேசவும் படிக்கவும் எழுதவும் கூட கற்றுக்கொண்டு விட்டேன்.அந்த வகையில் இயக்குநருக்கு நன்றி.
இந்தப்படத்தின் நினைவுகள் நூறாண்டு தாண்டியும் இருக்கும் என்று நம்புகிறேன்.
” என்றார்.

நிகழ்வில் படத்தின் இயக்குநரும் நூலாசிரியருமான ஞான ராஜசேகரன் பேசும்போது,

“நான் இயக்கிய முதல் படம் ‘மோக முள்’. அந்தப் படத்தின் மூலம்தான் நான் இயக்குநர் ஆனேன்.நான் வேறொரு துறையில் இருந்தேன். ‘மோகமுள் ‘ இல்லா விட்டால் நான் இயக்குநராக ஆகியிருப்பேனா என்று சந்தேகம்தான்.

என்னை இயக்குநராக்கி
இன்றுவரை எனக்கு அடையாளமாக இருப்பதும் ‘மோகமுள்’ தான் என்று சொல்வேன்.மூன்றாண்டு ஆண்டுகாலம் சிரமப்பட்டு இந்தப் படத்தை எடுத்தோம்.இந்த படத்திற்குக் கிடைத்த விருதுகள், பாராட்டுகள் போன்ற அங்கீகாரம் தான் எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.இந்தப் படத்தில் அறிமுகமான அபிஷேக் பெரிதாக வளர்ந்திருக்கிறார் . குறிப்பாகத் தொலைக்காட்சியில் சிறந்து விளங்குகிறார்.
படத்தில் நான் அறிமுகப்படுத்திய அர்ச்சனா ஜோக் லேக்கரும் வளர்ந்து புகழ் பெற்றார். அறிமுகப்படுத்தியவன் என்ற வகையில் இது எனக்கு மகிழ்ச்சி.’மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’ என என் படங்களுக்குத் தன் ஒளிப்பதிவின் மூலம் பெரிய பலமாக இருந்த தங்கர்பச்சான் இங்கே வந்திருப்பது மகிழ்ச்சி.படத்தைப் பார்த்துவிட்டு எழுத்தாளர் வாஸந்தி கூறினார் “இது தி. ஜானகிராமனுக்கான சிறந்த அஞ்சலி ” என்று .அதை இப்போது உணர்கிறேன்.

இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்த்தவர்களை விட உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் ஏராளமான பேர் பார்த்திருக்கிறார்கள்.

படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. தி ஜானகிராமன் அவர்களின் நூற்றாண்டில் படத்துக்கான வெள்ளி விழா ஆண்டு வருவது மகிழ்ச்சி. அதனால் இந்நிகழ்வு கவனம் பெறுகிறது.எனக்கு ஒரு 50 பேராவது தொலைபேசி விசாரித்து இருப்பார்கள் “படத்திற்கான வெள்ளிவிழா கொண்டாட வில்லையா?எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?” என்று. அந்த அளவுக்கு ‘மோகமுள்’ இன்றும் ஒரு பேசுபொருளாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது”என்றார்.

இயக்குநர் தங்கர்பச்சான் பேசும்போது ,

” இயக்குநரின் படங்களில் பணியாற்றியது ஒரு வகை மகிழ்ச்சி என்றால் இது மாதிரியான தருணங்களில் ஒருவரை ஒருவர் சந்திப்பது பெரிதும் மகிழ்ச்சியான அனுபவம் .நோய்த்தொற்றுக் காலத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி” என்றார்.

ஜெர்மனியிலிருந்து வந்திருந்த ஆய்வாளர் டாக்டர் சுபாஷினி பேசும்போது,

” இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமையடைகிறேன். இந்த வாய்ப்பு அமைந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மோகமுள் நான் பார்த்து ரசித்த படம் .அந்தப் படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனாலும் இப்போது பார்த்தாலும் இந்தக் காலத்திற்கு ஏற்றது போல் இந்த படத்தின் போக்கு இருக்கும். இன்றைய தலைமுறைக்கும் பொருத்தமாக இருக்கும்படி இந்தப் படம் இருக்கும்.

தலைமுறை தாண்டி ரசிக்கும்படி இந்த படத்தின் கூறுகள் இருக்கும். அந்த நாவலை மிகச் சிறப்பாக எடுத்து இருப்பார் இயக்குநர். குறிப்பாக இறுதிக் கட்ட காட்சிகள் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று நினைக்க முடியும்.ஏனென்றால் அப்படி புரட்சிகரமாகக் காட்சிகள் நாவலில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி ரசிக்கும்படி படத்தில் அமைத்திருப்பார். அதேபோல் அவர் இயக்கிய பாரதி, பெரியார் படங்களும் சிறப்பாக இருந்தன. நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன் “என்றார்.

இதே விழாவின் மற்றொரு பகுதியாக ‘பாரதி’ படத்தின் திரைக்கதை நூலும் வெளியிடப்பட்டது. ‘பாரதி’ திரைக்கதையை இயக்குநர் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் வெளியிட்டார்.திருமதி சகுந்தலா ராஜசேகரன் பெற்றுக்கொண்டார்.
அந்த நிகழ்வில் விருந்தினராகப் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கலந்து கொண்டார். நிறைவாக காவ்யா சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

Actor Abhisek speech at recent event in chennai

விஷ்ணு & ஐஸ்வர்யா இணையும் ‘மோகன்தாஸ்’ படப்பூஜையுடன் சூட்டிங் தொடக்கம்

விஷ்ணு & ஐஸ்வர்யா இணையும் ‘மோகன்தாஸ்’ படப்பூஜையுடன் சூட்டிங் தொடக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலை நிறுத்தியவர் விஷ்ணு விஷால்.

தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

‘எஃப்.ஐ.ஆர்’ படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார் விஷ்ணு விஷால்.

இதையும் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மூலமாக தயாரிக்கவுள்ளார்.

‘மோகன்தாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அறிமுக டீஸர் கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே வெளியிடப்பட்டது.

அப்போதே பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான த்ரில்லரைக் காணவுள்ளோம் என்பதை உணர்த்தியது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர்களின் அறிவிப்புகள் என அனைத்திலுமே எதிர்பார்ப்பை அதிகரித்து வந்தது.

‘மோகன்தாஸ்’ படத்தை ‘களவு’ படத்தின் மூலம் ஆச்சரியப்படுத்திய முரளி கார்த்திக் இயக்கவுள்ளார். இந்தப் படம் ஒரு எமோஷனல் த்ரில்லர் பாணியிலான கதையாகும்.

பார்வையாளர்களுக்குக் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்கிறது படக்குழு. இதில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கவுள்ளார்.

அவருக்கு நாயகியாக தன் நடிப்பால் ஆச்சரியப்படுத்தி சமீபத்தில் கலைமாமணி விருதினை வென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.

வித்தியாசமான கதைகள் வந்தால் தமிழில் நடிக்கும் இந்திரஜித் சுகுமாரன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர்களுடன் பூர்ணிமா பாக்யராஜ், கருணாகரன், அக்‌ஷய் ராதாகிருஷ்ணன்,ஷாரிக், லாலு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று விமரிசையாக நடைபெற்றது.

இதில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். ‘மோகன் தாஸ்’ படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள விஷ்ணு விஷாலுக்கு அவருடைய திரையுலக நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

‘களவு’ படத்தில் தன்னுடைய பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களுடனே இந்தப் படத்திலும் பணிபுரியவுள்ளார் முரளி கார்த்திக்.

த்ரில்லர் படங்களின் ரசிகர்களுக்கு விரைவில் ஒரு அறுசுவை விருந்து காத்திருக்கிறது என்று நம்பலாம்.

‘மோகன்தாஸ்’ படக்குழுவினர் விவரம்

கதை, திரைக்கதை இயக்கம்: முரளி கார்த்திக்

தயாரிப்பு நிறுவனம்: வி.வி ஸ்டுடியோஸ்

தயாரிப்பாளர்: விஷ்ணு விஷால்

ஒளிப்பதிவாளர்: விக்னேஷ் ராஜகோபாலன்

இசை: சுந்தரமூர்த்தி கே.எஸ்

எடிட்டர்: கிருபாகரன்

வசனங்கள்: அரவிந்த் முரளி, முரளி கார்த்திக்

சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு: அன்பறிவ்

ஆடை வடிவமைப்பாளர்: பூர்த்தி ப்ரவீன்

கலை இயக்குநர்: அருண்சங்கர் துரை

கிரியேடிவ் தயாரிப்பாளர்: அனிதா மகேந்திரன்

நிர்வாக மேலாளர்: ஏ.ஆர். சந்திரமோகன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்கள்: சீதாராமன், ஷர்வாந்தி சாய்நாத், தினேஷ் கண்ணன்

இணை தயாரிப்பாளர்: ருத்ரா

போஸ்டர்கள் வடிவமைப்பு: தண்டோரா

ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா

மேலாளர் : தங்கதுரை

பி.ஆர்.ஓ: யுவராஜ்

விளம்பரம் & மார்க்கெட்டிங்: சித்தார்த் ஸ்ரீனிவாஸ், அஞ்சல் குடாவலா

ஆன்லைன் விளம்பரங்கள்: டிவ்வோ

Vishnu Vishal’s Mohan Das kick starts today with pooja

விஜய்யின் ‘தளபதி 65’ பட நாயகிக்கு நயன்தாராவுக்கு இணையான சம்பளம்..?

விஜய்யின் ‘தளபதி 65’ பட நாயகிக்கு நயன்தாராவுக்கு இணையான சம்பளம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pooja hegde‘மாஸ்டர்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்க உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இப்படத்தின் நாயகி யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பார் என சொல்லப்படுகிறது.

தற்போது பிரபாஸுடன் ‘ராதே ஷ்யாம்’ என்ற படத்தில் நடித்துள்ளார் பூஜா. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

‘முகமூடி’ படத்திற்கு பின் தமிழ் படங்களில் நடிப்பதை விட்ட பூஜா தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் என்கின்றனர்.

இப்படத்தில் நடிக்க நடிகை பூஜா ஹெக்டேவுக்கு 3.25 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

இது நயன்தாராவுக்கு இணையான சம்பளம் எனவும் சொல்லப்படுகிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்

Thalapathy 65 heroine to receive whopping amount of Rs. 3.5 crore

‘நடமாடும் நகைக்கடை’ ஹரி நாடார் & வனிதா இணையும் படம் கள்ளக்காதல் கதை?

‘நடமாடும் நகைக்கடை’ ஹரி நாடார் & வனிதா இணையும் படம் கள்ளக்காதல் கதை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும்பாலான பெண்கள் கூட 1 கிலோ நகையை அணிந்து வெளியே செல்ல மாட்டார்கள்

ஆனால் ஹரி நாடார் என்பவர் சுமார் 3 கிலோ தங்க நகைகளை எப்போதும் அணிந்திருப்பார்.

இதனால் இவரை பலரும் நடமாடும் நகைக்கடை என்றே அழைப்பர்.

இவருக்கும் சினிமாவில் நடித்து வேர்ல்ட் பேமஸ் ஆக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.

இயக்குனர் முத்தமிழ் வர்மா இயக்கத்தில் ‘2கே அழகானது காதல்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

நாயகியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார்.

இந்த படத்தை ஹரி நாடாரே தயாரிக்கிறார்.

ஹரி நாடார் நடிக்கும் 2கே அழகானது காதல் படத்தின் கதை என்ன? என பேச்சுக்கள் கோலிவுட்டில் எழுந்தன.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த பூஜையில் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்த பூஜையின் போது, இந்த படம் ‘கள்ளக்காதல்’ தவறு இல்லை என்று கூறும் கதைய? என ஒருவர் கேட்டுள்ளார்.

“உங்களையெல்லாம் எங்கிருந்து புடுச்சிட்டு வந்தார்கள்”? என்று அந்த நபரிடம் கமெண்ட் அடித்தாராம் வனிதா.

Hari Nadar and Vanitha joins for a new film

விமல் மீது மோசடி புகார்..; பதறிய நடிகர் திடீர் அறிக்கை..

விமல் மீது மோசடி புகார்..; பதறிய நடிகர் திடீர் அறிக்கை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விமல் அறிக்கை…

என்னை பற்றிய தவறான செய்திகளை சமூகஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன்.

அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திநாவுக்கரசு என்பவர் என்மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்.

திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்போ பணம் பரிமாற்றமோ இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்வதோடு மேலும் அவர் மீது இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பறிப்பதே ஆகும்.

மேலும் என்னைப் பற்றிய தகவல்களை என்னிடம் நேரடியாகவோ அல்லது என் செய்தி தொடர்பாளர் (PRO) பிரியாவிடமோ கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் என்று திட்டவட்டமாக நடிகர் விமல் கூறி இருக்கிறார்.

Actor Vimal’s statement on rumours

‘கர்ணன்’ டீசரை விட சொல்லுங்க..; ரசிகர்களின் கோரிக்கைக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்

‘கர்ணன்’ டீசரை விட சொல்லுங்க..; ரசிகர்களின் கோரிக்கைக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் & ரெஜிஷா விஜயன் நடித்துள்ள படம் ‘கர்ணன்’.

இவர்களுடன் யோகிபாபு, லால், கவுரி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘கண்டா வரச் சொல்லுங்க’ மற்றும் ‘பண்டாரத்தி புராணம்’ ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில் இதன் டீசரை வெளியிட சொல்லி ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இப்பட டீசர் குறித்த முக்கிய அப்டேட்டை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

‘கர்ணன்’ டீசர் மிக விரைவில் வெளியாகும் என தனுஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Most awaited Karnan teaser will be released soon

More Articles
Follows