24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’

24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sanam shettyதமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது.

எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை.

இன்று இரவு தொடங்கி நாளை இரவுக்குள் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களே விறுவிறுப்பான திரைக்கதையாகி உள்ளது. சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை அந்த நபரின் அனுமதியுடன் படமாக்கி இருக்கிறார்கள்.

படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும், அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர். கதைக்கு மிகவும் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்துள்ளார்.

இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். மேலும் சம்பத்ராம், அனுபமா குமார், ஜீ டிவி மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இசை – ஷெரீப் (அருவி புகழ் வேதாந்த் பரத்வாஜ் இசையில் ஒரு மெல்லிசை பாடல் உருவாகி இருக்கிறது)
ஒளிப்பதிவு – மனோஜ் நாராயணன்
படத்தொகுப்பு – சந்திர சேகரன்
கலை – பாலா ஓம் பிரகாஷ்
தயாரிப்பு – தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ்
இயக்கம் – அலெக்ஸ், இளமைதாஸ்

BREAKING ஒரே நாளில் விஜய்-கார்த்தி மோதல்; பிகில் ரிலீஸ் தேதி இதோ

BREAKING ஒரே நாளில் விஜய்-கார்த்தி மோதல்; பிகில் ரிலீஸ் தேதி இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigil and Kairthi movies clash on 25th October 2019இந்தாண்டு தீபாவளி திருநாள் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 27ல் வருகிறது. எனவே தீபாவளி ஸ்பெஷலாக வரும் படங்களின் ரிலீஸ் தேதி பற்றிய குழப்பம் நீடித்து வந்தது.

சற்றுமுன் கைதி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்தனர். அதாவது அக்டோபர் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் என மாலை 5 மணிக்கு அறிவித்தனர்.

எனவே பிகில் ரிலீஸ் தேதி அக். 24ல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதுவும் அக்டோபர் 25ல் ரிலீஸ் என ஒரு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

அட்லி இயக்கியுள்ள பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கைதி படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Bigil and Kaithi movies clash on 25th October 2019

BREAKING அக்டோபர் 25ல் கார்த்தியின் ‘கைதி’ கன்பார்ம்

BREAKING அக்டோபர் 25ல் கார்த்தியின் ‘கைதி’ கன்பார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthis Kaithi movie release date is confirmed மாநகரம் பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கைதி.

மலையாள நடிகர் நரேன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பாடல்களும் இல்லை நாயகியும் இல்லை.

Dream Warrior Pictures சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு மற்றும் Vivekananda Pictures சார்பில் திருப்பூர் விவேக் இணைந்து தயாரித்துள்ளனர்.

சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய சாம் CS இசையமைத்துள்ளார்.

இப்படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தீபாவளிக்கு திரைக்கு வரும் என இப்படம் தயாரிப்பாளர்கள் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன் கைதியின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிதுள்ளனர்.

தீபாவளி திருநாள் அக். 27ல் வருகிறது. அதற்கு முன்னதாகவே அதாவது அக். 25ல் வெள்ளியன்று வெளியாகவுள்ளதாக போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Karthis Kaithi movie release date is confirmed

‘டெடி’ படத்தில் ஆர்யா-சாயிஷாவுடன் இணையும் சாக்‌ஷி அகர்வால்

‘டெடி’ படத்தில் ஆர்யா-சாயிஷாவுடன் இணையும் சாக்‌ஷி அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sakshi Agarwal joins Arya and Sayyeshas Teddyதிருமணத்திற்கு முன் கஜினிகாந்த் என்ற படத்தில் ஆர்யா – சாயிஷா இணைந்து நடித்தனர்.

கல்யாணத்திற்கு பின் காப்பான் படத்தில் இணைந்தனர்.

தற்போது, மீண்டும் ‘டெடி’ என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இவர்களுடன் சதீஷ், கருணாகரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

`டிக் டிக் டிக்’ படத்தை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் `டெடி’ படத்தை இயக்கி வருகிறார்.

தற்போது பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான சாக்‌ஷி அகர்வால் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

Sakshi Agarwal joins Arya and Sayyeshas Teddy

teddy movie spot

‘ஓ மை கடவுளே’ படத்தில் அசோக் செல்வன்-ரித்திகா சிங்-வாணிபோஜன்

‘ஓ மை கடவுளே’ படத்தில் அசோக் செல்வன்-ரித்திகா சிங்-வாணிபோஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vani Bhojan team up with Ashok Selvan in Oh My Kadavulaeஅசோக் செல்வன் நாயகனாகவும், ரித்திகா சிங் நாயகியாகவும் நடித்து வரும் படம் ‘ஓ மை கடவுளே’.

அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி வரும் இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் சீரியலில் நடித்து புகழ் பெற்ற வாணி போஜன் இணைந்துள்ளார்.

ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

Vani Bhojan team up with Ashok Selvan in Oh My Kadavulae

தர்பாரில் தன் குடும்ப பெயர்களை ரஜினிக்கு சூட்டிய முருகதாஸ்

தர்பாரில் தன் குடும்ப பெயர்களை ரஜினிக்கு சூட்டிய முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthலைகா தயாரிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’.

முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரஜினி மகளாக நிவேதா தாமஸ் நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் யோகிபாபு, பேபி மானஸ்வி நடித்துள்ளனர்.

அடுத்தாண்டு 2020 பொங்கலுக்கு படத்தை வெளியிட உள்ளனர்.

இந்த நிலையில் படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயர் தகவல் வெளியாகியுள்ளது.

ஆதித்யா அருணாச்சலம் தான் ரஜினியின் பெயர்.

ஆதித்யா என்ற பெயர் முருகதாஸின் மகன் பெயராம். அதுபோல் அருணாச்சலம் என்பது முருகதாஸின் அப்பா பெயராம்.

More Articles
Follows