டைரக்டர் ரெடி… இளையராஜா இசையில் ஹீரோவும் ரெடி.; தயாரிப்பாளரை தேடி அலையும் சம்பத்ராம்

டைரக்டர் ரெடி… இளையராஜா இசையில் ஹீரோவும் ரெடி.; தயாரிப்பாளரை தேடி அலையும் சம்பத்ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானார் சம்பத் குமார்.

இவர் முதலில் ஸ்டண்ட் நடிகராக தான் சினிமா உலகில் நுழைந்தார்.

தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

காஞ்சனா 3 படத்தில் அகோரியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஹீரோவாக அதுவும் திருநங்கை வேடத்தில் நடிக்க தயாராகவுள்ளார் சம்பத் ராம்.

கள்ளத் துப்பாக்கி எனும் படத்தை இயக்கிய லோகியாஸ் புதிய படத்தை இயக்க தயாராகவுள்ளார்.

இந்த படத்திற்கு ‘சர்வதேசம்’ எனும் தலைப்பிட்டுள்ளனர். இதில் தான் சம்பத் ராம் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என விரும்புகிறாராம் இயக்குனர்.

ஆனால் அனைத்தும் ரெடியாக இருந்தும் தயாரிப்பாளர் இல்லை என சம்பத்ராம் தெரிவித்துள்ளார்.

Actor Sampath Ram’s next with Maestro Ilayaraja

நாக சைதன்யா விவாகரத்து.; நீதிமன்றத்தில் வழக்கு தொடர சமந்தா முடிவு.

நாக சைதன்யா விவாகரத்து.; நீதிமன்றத்தில் வழக்கு தொடர சமந்தா முடிவு.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா சினிமாவில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். ஒரு சில (போட்டோ)/படங்களில் கவர்ச்சியாகவே வருகிறார்.

இதனால் சமீப காலமாகவே தம்பதியரிடையே பிரச்சினை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நடிகை சமந்தா தன் ட்விட்டர் பக்கத்தில் தன் பெயரை S என்று மாற்றினார்.

இதனையடுத்து சமந்தாவும், நாக சைதன்யாவும் விரைவில் விவாகரத்து பெறுகிறார்கள் என சர்ச்சைகளும், வதந்திகளும் சோசியல் மீடியாவில் வலம் வருகின்றன.

இதனிடையில் ஹைதராபாத்தில் நாகர்ஜுனா குடும்பத்தினர் நடிகர் ஆமீர் கானுக்கு விருந்து அளித்தபோது அந்த விருந்தில் நாகர்ஜுனா, அவரது மனைவி அமலா, மகன்கள் நாக சைதன்யா, அகில் மற்றும் லவ் ஸ்டோரி பட இயக்குனர் சேகர் கம்முலா, பட நாயகி சாய்பல்லவி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஆனால், அந்த விருந்தில் நடிகை சமந்தா கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் நடிகை சமந்தா…” தன்னை பற்றி தேவையில்லாத வதந்திகளும், அவதூறு செய்திகளும் வெளியாவதை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Actress Samantha will approach court for divorce

‘ஆன்டி இண்டியன்’ படத்தலைப்புக்கு சென்சார் எதிர்ப்பு தெரிவித்தால் அதை விட மோசமான டைட்டிலுடன் ரெடியான ப்ளூசட்டை மாறன்

‘ஆன்டி இண்டியன்’ படத்தலைப்புக்கு சென்சார் எதிர்ப்பு தெரிவித்தால் அதை விட மோசமான டைட்டிலுடன் ரெடியான ப்ளூசட்டை மாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குனர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.. சினிமா விமர்சகராக இருந்து, இயக்குனராக மாறியுள்ள மாறன் இயக்கிய படம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.

அதே சமயம் இந்தப்படம் சென்சார் சான்றிதழ் வாங்குவதற்கு கூட போராட வேண்டிய சூழ்நிலையும் உருவானது. இறுதியாக நீதிமன்றமே தலையிட்டு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நிலையில், தற்போது இந்தப்படத்திற்கு வெறும் மூன்று கரெக்சன்களுடன் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

எதனால் இந்த போராட்டம், இதற்கு பின்னால் யாரவது அழுத்தம் கொடுத்தார்களா என்பது குறித்து இயக்குனர் புளூ சட்டை மாறனும் தயாரிப்பாளர் ஆதம் பாவாவும் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பகிர்ந்துகொண்டார்கள்.

புளூ சட்டை மாறன் பேசும்போது,…

“சென்னையில் தணிக்கை குழுவினருக்கு படத்தை திரையிட்டு காட்டினோம். படத்தை பார்த்துவிட்டு பாராட்ட போகிறார்கள் என நினைத்தால், எந்தவித காரணமும் சொல்லாமல் படத்திற்கு சான்றிதழே தர மறுத்துவிட்டனர். இதையடுத்து ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்ப முடிவு செய்தோம்.

அதில் முக்கிய உறுப்பினராக உள்ள நடிகை கவுதமி சென்னையில் இந்தப்படத்தை பார்ப்பார் என சொல்லப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக பெங்களூரில் நாகபரணா என்பவர் தலைமையில் படத்தை பார்த்தனர். படம் பார்த்துவிட்டு படத்தில் 38 இடங்களில் கட் பண்ணவேண்டும் என்றும் அதற்கு ஒப்புக்கொண்டால் சான்றிதழ் தருகிறோம் என்றும் சொன்னார்கள்.

அவர்கள் குறிப்பிட்ட 38 இடங்களில் உள்ள வசனங்கள், காட்சிகளை வெட்டினால் கிட்டத்தட்ட 200 கட்டுகள் விழும். அந்தப்படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்தால் நிச்சயம் பிளாப் தான். தயாரிப்பாளரும் நானும் அதை விரும்பவில்லை.

அதனால் அடுத்த முயற்சியாக ட்ரிபியூனலில் முறையிடுவது என முடிவெடுத்தோம்.. ஆனால் எங்களது துரதிர்ஷ்டமோ என்னமோ, எங்கள் படத்தை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமயத்தில் தான் அத்தனை வருடங்களாக இயங்கிவந்த அந்த அமைப்பையே கலைத்து விட்டார்கள்.

இறுதியாக ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தை நாடினோம். எங்களது தரப்பு நியாயங்களை கேட்ட நீதிமன்றம், அதற்கு முன்னதாக தணிக்கை குழு மற்றும் ரிவைசிங் கமிட்டி என இரண்டு தரப்பிலும் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்ய உத்தரவிட்டது.. மேலும் புதிதாக ஒரு கமிட்டி ஒன்றை அமைக்க கூறிய நீதிமன்றம், முறையான கட்டுக்களுடன் கூடிய சான்றிதழை வழங்கவும் உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து படத்தை பார்த்த புதிய கமிட்டியினர் வெறும் மூன்றே இடங்களில் சிறிய கரெக்சன்களை மட்டுமே செய்யவேண்டும் என கூறி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கினார்கள்.

சென்சாரின் கெடுபிடிகள் காரணமாக தரமான படங்களை எடுப்பவர்கள் பயந்து பயந்து படம் எடுக்கவேண்டியுள்ளது அதற்காக சென்சாரே வேண்டாம் என்று சொல்லவில்லை.. இன்று சின்னப்பையன்கள் கூட கையில் கூட ஆண்ட்ராய்டு மொபைல் வைத்துக்கொண்டு கட்டுப்பாடின்றி பயன்படுத்துகின்றனர்.

அப்படி காலம் மாறிக்கொண்டே வரும் சூழ்நிலையில், அதற்கேற்ப சென்சாரின் விதிகளிலும் திருத்தம் கொண்டுவந்து அனைத்தையும் சட்டவரம்புக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம்.

நாடே கெட்டாலும் பரவாயில்லை, நான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என நினைக்கின்ற சில சுயநல மனிதர்களை குறிக்கும் வகையில் தான் இந்த ஆன்டி இந்தியன் என்கிற தலைப்பை வைத்துள்ளோம்.. ஒருவேளை இந்த தலைப்பு மறுக்கப்பட்டால், ‘கேணப்பையன் ஊருல கிறுக்குப்பையன் நாட்டாமை’ என டைட்டில் வைக்கலாம் என்றும் முடிவு செய்து வைத்திருந்தோம்.

ஏற்கனவே சிலர் செய்த தவறுகளாலும், ஒருசிலர் இந்தப்படத்தை தவறாக புரிந்துகொண்டதாலும் ஒட்டுமொத்த சென்சார் அமைப்பை நாங்கள் குறைகூற விரும்பவில்லை. சென்சாரில் உள்ளவர்களே படத்தில் வரும் கதாபாத்திரங்களை நிஜத்தில் வாழும் மனிதர்களுடன் பொருத்தி பார்த்து கொள்கின்றனர். அதுதான் மிகப்பெரிய சிக்கலே..

இந்தப்படம் எடுப்பதற்காக எனக்கு மிரட்டல் எதுவும் வரவில்லை.. ஆனால் எனது படம் வெளிவரக்கூடாது என்று திரையுலகில் இருந்தே பலரால் அழுத்தம் கொடுக்கப்பட்டது. எங்கள் படத்திற்கு சான்றிதழ் மறுக்கப்பட்டது என்கிற செய்தியையே மகிழ்ச்சியுடன் கொண்டாடிய தயாரிப்பாளர்கள் பலர் உண்டு.

சினிமாவில் புதிதாக ஒரு விஷயம் வரும்போது எதிர்ப்புகள் கிளம்பத்தான் செய்யும். இந்த ஆன்டி இந்தியன் படத்தை பார்க்கும்போது, படம் புதுசா இருக்குதே, என்னடா இவன் இப்படி போட்டு அடிச்சுருக்கான் என்கிற எண்ணம் ஏற்படும். ஆனால் படத்தின் முடிவில் நீங்கள் அப்படி நினைக்க மாட்டீர்கள்.

முதல் படத்திலேயே இவ்வளவு பிரச்சனைகளா, தயாரிப்பாளரை படுகுழியில் தள்ளிவிட்டோமோ என்கிற எண்ணம் கூட ஏற்பட்டது. ஆனால் போராட்டத்தில் கிடைத்த வெற்றியால் இன்னும் தைரியமாக தரமான படங்களை எடுக்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. எந்தப்படத்துடனும் போட்டி போட்டு, இந்தப்படத்தை தீபாவளிக்கு கூட வெளியிட முடியும்.. ஆனால் குறைவான தியேட்டர்கள் மட்டுமே கிடைக்கும் என்பதால் இந்தப்படம் வெகுஜன மக்களுக்கு சென்று சேராமல் போய்விடும். அதேபோல ஓடிடியில் நல்ல விலைக்கு கேட்டு வந்தாலும் கூட, முதலில் தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இந்தப்படத்திற்கு நானே இசையமைத்துள்ளேன். சில உதவி இயக்குனர்களிடம் பேசும்போது, நம் படத்திற்கு மிகப்பெரிய காசு செலவு செய்து அடுத்தவர்களை இசையமைக்க வைத்து ஏன் கெடுக்க வேண்டும்.. நாமே இசையமைத்து கெடுத்து விடுவோம் என விளையாட்டாக சொல்வேன். இது ஒன்றும் பெரிய மியூசிக்கல் படம் இல்லை. அதனால் நான் இசையமைத்தாலே போதும் என இசையமைப்பாளராகவும் மாறிவிட்டேன்.” என கூறினார்.

தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசும்போது, “இந்தப்படத்தை எடுக்கும்போதே பின்னால் பெரிய பிரச்சனைகள் வரும் என தெரிந்தே தான் ஆரம்பித்தோம். இதுவரை சென்சார் அமைப்பினர் ஒவ்வொரு படத்திற்கும் ஏதோ ஒரு அடிப்படையில் சான்றிதழ் கொடுத்து வருகின்றனர். ஆனால் இந்த ஆன்டி இண்டியன் படத்தை பார்த்துவிட்டு இதற்கு எப்படி சான்றிதழ் கொடுப்பது என்றே அவர்களுக்கு புரியவில்லை. மாறன் இயக்கியுள்ள இந்தப்படம், வழக்கமாக அவர்கள் பார்க்கும் படங்களில் இருந்து மாறுபட்டு இருப்பதால் அவர்களுக்கே குழப்பம் ஏற்பட்டுவிட்டது.

ஆனால் சென்னை, பெங்களூர், மும்பை என மூன்று இடங்களிலும் படம் பார்த்த சென்சார் கமிட்டியினர் ஒவ்வொருவரும் படத்தை பற்றி வெவ்வேறு கண்ணோட்டம் கொண்டிருந்தாலும், பார்த்த அனைவருமே இந்த படத்தை பாராட்ட தவறவில்லை. அதுவே எங்கள் படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி.

இந்தப்படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகளால் ஒரு தயாரிப்பாளராக எனக்கு எந்தவித நட்டமோ பாதிப்போ இல்லை. சொல்லப்போனால் லாபம் தான். இப்போதே பல பேர் இந்தப்படத்தை வாங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள். அந்தவகையில் இந்த ஆன்டி இண்டியன் படம் அண்ணன் மாறனின் ருத்ர தாண்டவமாக இருக்கும்” என்றார்.

Blue Sattai Maran is ready with another title for his new film

விஜய் படம் ஜெயிக்க திருப்பதியில் தரிசனம் செய்த ‘தளபதி 66’ படக்குழு

விஜய் படம் ஜெயிக்க திருப்பதியில் தரிசனம் செய்த ‘தளபதி 66’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’.

இந்த படம் விஜய் நடிப்பில் உருவாகும் அவரின் 65-வது படமாகும்.

இப்படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கவுள்ளதாகவும் இயக்குநர் வம்சி இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்தன.

தற்போது இதனை அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது படக்குழு.

‘தளபதி 66’ படத்தின் பூஜை விரைவில் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் & தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.

இந்த நிலையில் தில் ராஜூ் மற்றும் வம்சி இருவரும் தளபதி 66 படம் வெற்றிக்காக திருப்பதியில் தரிசனம் செய்துள்ளனர்.

Thalapathy 66 core team director Vamshi and producer Dil Raju visited Tirupathi Tirumala temple to seek the blessings after announcing the prestigious project

தீபாவளி (ரஜினி & சிம்பு) படங்களுடன் மோத ரெடி..; ‘ஆன்டி இண்டியன்’ பட இயக்குனர் ப்ளூ சட்டை மாறன் பேச்சு

தீபாவளி (ரஜினி & சிம்பு) படங்களுடன் மோத ரெடி..; ‘ஆன்டி இண்டியன்’ பட இயக்குனர் ப்ளூ சட்டை மாறன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா விமர்சனங்களில் 100க்கு 90 படங்களை நெகட்டிவ்வாக விமர்சித்து பெயர் பெற்றவர் மாறன்.

இவர் எப்போதும் நீலநிற சட்டை அணிந்தபடியே வீடியோவில் வருவதால் ப்ளூ சட்டை மாறன் என்ற பெயர் பெற்றார்.

இவரை உசுப்பேத்தி விட இப்போது படம் இயக்குமளவிற்கு அடுத்த கட்டத்திற்கு தாவியுள்ளார்.

ஆதம் பாலா தயாரிப்பில் நீல சட்டை மாறன் இயக்கியிருக்கும் முதல் படம் ‘ஆன்டி இண்டியன்’.

இந்த படத்தின் போஸ்டரில் குரங்கு ஒன்று கழுத்தில் காவித்துண்டுடன் இருக்கும் படம் இடம் பெற்றிருந்தது.

மேலும் மாறனின் படத்தைப் போட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றும் அதில் இருந்தது.

இந்த நிலையில் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என ஏப்ரல் 5-ஆம் தேதி மத்திய தணிக்கைக்குழு வாரியம் கூறிவிட்டதாம்.

மறுதணிக்கைக்கு படத்தை அனுப்பியதில், சான்றிதழ் தரலாம், ஆனால் 38 இடங்களில் கத்திரி போட வேண்டும் என கூறினார்களாம்.

இதனால் ‘ஜனநாயகத்தின்’ கடைசி நம்பிக்கையான உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர் மாறன்.

ஒருவழியாக தற்போது அவருக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி மூன்று நிபந்தனைகளுடன் U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

‘தடைகளைத் தாண்டி’ விரைவில் தியேட்டர்களில் படம் ரிலீஸ் என இன்றுமுதல் புரமோஷனை தொடங்கி பிரஸ்மீட் ஒன்றையும் வைத்தார் ப்ளூ சட்டை மாறன்.

அப்போது சென்சாரில் தனக்கு ஏற்ப்பட்ட பிரச்சினைகள் குறித்து பேசினார்.

அதன்பிறகு செய்தியாளர்கள் ‘ஆன்டி இண்டியன்’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா? எனக் கேட்டனர்.

அதாவது ரஜினியின் ‘அண்ணாத்த’ & சிம்புவின் ‘மாநாடு’ படத்துடன் மோத வாய்ப்பு இருக்கா? என மறைமுகமாக கேட்டனர்.

எந்த ஹீரோவுடனும் மோத தயார். அதற்கான படம் தான் இது ‘ஆன்டி இண்டியன்’.

ஆனால் சரியான எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காது. பெரிய படங்களையே தியேட்டர்கள் வாங்குவார்கள்.

எனவே பொறுமையாக இருந்து அதிக தியேட்டர்கள் எண்ணிக்கையில் படத்தை ரிலீஸ் செய்வோம்.

தியேட்டர் ரிலீசுக்கு பிறகு ஓடிடி தளத்தில் வெளியிடுவோம்.” என ‘ஆன்டி இண்டியன்’ தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பதிலளித்தனர்.

Blue Sattai Maran’s Anti Indian is ready for release

சாமானியனை சாதனையாளராக மாற்றும் ‘இயல்’ குறும்படத்துக்கு சர்வதேச விருது

சாமானியனை சாதனையாளராக மாற்றும் ‘இயல்’ குறும்படத்துக்கு சர்வதேச விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் இப்போது பிரபலமாக இருக்கும் பல இயக்குநர்களுக்கு முகவரி கொடுத்தது குறும்படங்கள்தான்.

அந்த வரிசையில் ‘இயல்’ குறும்படத்தின் மூலம் திரைத்துறையின் பார்வையை தன் பக்கம் விழச் செய்துள்ளார் இயக்குநர் அரவிந்த் குமரன்.

இந்த குறும்படத்தில் நாயகனாக அதுல் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ‘நிழல்கள்’ ரவி, பிரதீப் கே.விஜயன், மணிமேகலை நடித்துள்ளார்கள்.

பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் ஜயத் தன்வீர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரோஷன் விஷால் இசையமைத்துள்ளார். சண்டை காட்சியை பில்லா ஜெகன் வடிவமைத்துள்ளார்.

தியேட்டரில் வெளியிடுமளவுக்கு பிரம்மாண்டமாக இந்த குறும் படத்தை ஏ.கே.பிலிம் புரொடக்‌ஷன் சார்பாக ஆர்.குமரன், கே.சுமதி தயாரித்துள்ளனர்.

இந்த உலகத்தில் சாதாரண மனிதர்கள் தான் சாதனையாளர்களாக ஆகின்றனர் என்பது இந்த குறும்படத்தின் மையக்கரு.

சமீபத்தில் இந்த குறும்படம் சர்வ தேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

டோரோண்டோ இண்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல், பாரீஸ் திரைப்பட விழா மற்றும் வேர்ல்ட் பிலிம் கர்னிவால் விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது வாங்கியுள்ளது.

விருதுகள் மூலம் கிடைத்த அங்கீகாரம் எங்களை அடுத்த நகர்வுக்கு அழைத்து சென்றுள்ளன என்கிறது படக்குழு.

சமீபத்தில் இதன் டிரைலர் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் அதற்கான வரவேற்பு அமோகமாக கிடைத்த நிலையில் முழு படத்தையும் விரைவில் ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வர முழு வேகத்தில் இறங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

தொழில் நுட்ப கலைஞர்கள் & நடிகர், நடிகைகள்:

நாயகன் : அதுல்
முக்கிய நடிகர்கள் : நிழல்கள் ரவி, பிரதீன் கே.விஜயன், மணிமேகலை
இசை : ரோஷன் விஷால்
ஒளிப்பதிவு : ஜயத் தன்வீர்
எடிட்டிங் : பி.கே – மனோஜ் கிரண்
சண்டை : பில்லா ஜெகன்
காஸ்டியூம்ஸ் : சுரேந்திரன்
புரொடக்‌ஷன் டிசைனர் : சி.பிரகாஷ்
சவுண்ட் டிசைன் : தனுஷ் நாயனார்
மிக்ஸிங் : ரிபிஷ் – நிக்ஹைல் – செபஸ்டின்
DI : கார்த்திக் சந்திரசேகர்

Director Arvind Kumaran wins award at Toronto film festival for Iyal short film

More Articles
Follows