ஜி.வி.பிரகாஷ்-ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் 3 ஹீரோயின்கள்

ஜி.வி.பிரகாஷ்-ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் 3 ஹீரோயின்கள்

3 heroines teams up with GV Prakash and Adhik Ravichandrans projectஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘செம’ படம் இந்த மே மாதம் 25ஆம்ட தேதி வெளியாகவுள்ளது.

இதனையடுத்து அவரது நடிப்பில் ‘4ஜி’, ‘ஐயங்கரன்’, ‘அடங்காதே’, ‘குப்பத்துராஜா’, ‘100% காதல்’, ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இந்த படங்களை அடுத்து ஏஏஏ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் ஜிவி. பிரகாஷ்.

இப்படத்தை ஷங்கரின் 2.0 பாணியில் ‘3 டி’ தொழில் நுட்பத்தில் உருவாக்கி வருகின்றனர்.

இதில், ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக அமிராதஸ்தர் நடிக்கிறார். இவர் அனேகன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் மற்ற இரண்டு முக்கிய கேரக்டர்களில் சோனியா அகர்வாலும்,
சஞ்சிதா ஷெட்டியும் இணைந்துள்ளனர்.

3 heroines teams up with GV Prakash and Adhik Ravichandrans project

பள்ளி புத்தகத்தில் இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய பாடங்கள்

பள்ளி புத்தகத்தில் இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய பாடங்கள்

Music composers Ilayaraj and ARRahman lessons in TN School Booksதமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் பள்ளிப் பாடத்திட்ட நூல்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நூல்களை சில தினங்களுக்கு முன் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்தார்.

1,6,9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு மட்டும், வரும் கல்வி ஆண்டில், புதிய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள் அறிமுகமாகி உள்ளன.

இதில், 11-ம் வகுப்புக்குரிய ‘பொது தமிழ்’ பாடப்புத்தகத்தில் ‘இசைத் தமிழர் இருவர்’ என்ற தலைப்பில், ஒரு பாடம் உள்ளது.

சிம்பொனி தமிழர்’ என்ற பெயரில் இளையராஜா குறித்த பாடமும் ‘ஆஸ்கர் தமிழர்’ என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த பாடமும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Music composers Ilayaraj and ARRahman lessons in TN School Books

தணிக்கை குழுவினரிடம் சிக்கி தவித்த கமலின் விஸ்வரூபம்-2

தணிக்கை குழுவினரிடம் சிக்கி தவித்த கமலின் விஸ்வரூபம்-2

CBFC orders 17 cuts for Kamalhaasans Vishwaroopam 2கமல்ஹாசன் நடித்து தயாரித்து இயக்கியுள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

இப்படத்தில் பூஜாகுமார், ராகுல்போஸ், ஆண்ட்ரியா, சேகர் கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல்பாகம் பல எதிர்ப்புகளில் சிக்கி தவித்தது.

அதன் பின்னர் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பிறகே வெளியானது.

முதல் பாகத்தை போலவே தற்போது ‘விஸ்வரூபம்-2’ படமும் தணிக்கை குழுவினரின் கெடுபிடியில் சிக்கியுள்ளது.

இதனால் 17 சர்ச்சை காட்சிகளை நீக்கி யூஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதற்கு படக்குழுவினர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

CBFC orders 17 cuts for Kamalhaasans Vishwaroopam 2

ரசிகர்களுடன் விஜய் ஆலோசனை; அடுத்த கட்ட திட்டம் என்ன.?

ரசிகர்களுடன் விஜய் ஆலோசனை; அடுத்த கட்ட திட்டம் என்ன.?

Vijay met his fans and took photos with themஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

விரைவில் இதன் படப்பிடிப்புக்காக படக்குழு வெளிநாடு பறக்கவுள்ளது.

இந்நிலையில் சென்னை அருகே உள்ள பனையூரில் கடந்த 2 நாட்களாக ரசிகர்களை விஜய் திடீரென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ரசிகர்கள் அனைவருக்கும் உணவும் பரிமாறப்பட்டது.

மேலும் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இது தளபதியின் வழக்கமான சந்திப்புதான் என்றும் வேறு திட்டம் எதுவும் இல்லை என்றும் ரசிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay met his fans and took photos with them

ஆர்.வி.உதயகுமாரின் உதவி இயக்குனர் பழநிவேலன் இயக்கும் பண்ணாடி

ஆர்.வி.உதயகுமாரின் உதவி இயக்குனர் பழநிவேலன் இயக்கும் பண்ணாடி

RV Udhayakumars associate Palanivelans directs Pannadiநம்மை யார் என்று நமக்கு சொல்ல வரும் கதைக்களம் ‘ பண்ணாடி என்கிற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

முற்றிலும் புதிய களத்தில் ஆர்.வி. உதயகுமார்,வேல ராமமூர்த்தி, முக்கிய கதாபாத்திரத்தில் மற்றும் முன்னனி பிரபலமான நட்சத்திரங்கள் புதுமுக நடிகர்களின் பங்கேற்பில் இதுவரை திரை காணா யதார்த்த பாத்திரங்களின் உணர்வுகளில் இப்படம் உருவாகுகிறது.

இப்படத்தை ஸ்ரீ அய்யனாரப்பா பிலிம்ஸ் சார்பில் ரேவதி பழநி வேலன் தயாரிக்கிறார். கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் தெ.ரா. பழநி வேலன்.

இவர் , கிராமியக் கதைகளுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் மாணவர்.

இப்படத்திற்கு பார்த்தசாரதி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் ராமலிங்கம் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பிரகாஷ்.

‘பண்ணாடி’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டு வருகிறது.

RV Udhayakumars associate Palanivelans directs Pannadi

இரும்புத்திரை படம் பார்த்தால் இண்டர்நெட் மீது பயம் வரும்… : சமந்தா

இரும்புத்திரை படம் பார்த்தால் இண்டர்நெட் மீது பயம் வரும்… : சமந்தா

Irumbu Thirai movie will give you fear on Internet says Samanthaவிஷால் தயாரித்து நடித்துள்ள படம் இரும்புத்திரை.

இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள சமந்தா இப்படம் குறித்து கூறியதாவது…

இரும்புத்திரை படத்தின் கதையை கேட்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

நாம் வாழும் இந்த சமூகத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக நம்மை சுற்றி நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது.

படத்தின் கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய கைபேசியை தொடவே பயமாக இருந்தது.

இந்த படம் இன்டர்நெட் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் உள்ளது அது நமக்கு எப்படியெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்று மிக தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும்.

நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பதை பற்றியும் இப்படம் பேசும்.

எனக்கு புதுமுக இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம் தான். ஆனால் இயக்குனர் மித்ரன் ஒரு போதும் என்னை அப்படி பீல் பண்ண வைத்து இல்லை.

அவர் கதை சொல்லும் போதே நாம் ஒரு திறமையான இயக்குநரோடு இணைந்து பணியாற்ற போகிறோம் என்று தெரியவைத்தார்.

அவர் சொன்னது போலவே படத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் வருவது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னுடைய வாழ்க்கையில் நடந்தது இல்லை. அதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

ஆனால் என்னுடைய நட்பு வட்டத்தில் உள்ள சிலர் இன்டர்நெட் மூலம் நடக்கும் மோசடிகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது 1 கோடி ரூபாய் வென்றுள்ளீர்கள் என்று வரும் விளம்பரங்களுக்கு பதிலளித்து, பல லட்சங்கள் கொடுத்து ஏமாந்து உள்ளார்கள்.

இன்று ட்விட்டர் , பேஸ்புக் , இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூகவலை தளங்கள் அனைத்தும் முக்கித்துவம் வாய்ந்த ஒன்றாகிவிட்டது. அவற்றுக்கு நாம் அடிக்ட் ஆகிறோம் என்பது தான் தவறு.

அதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இரும்புத்திரை ரசிகர்களுக்கு சமூக வலைதளங்கலால் ஏற்படும் பிரச்சனை பற்றியும். அதை நாம் எப்படி சரியாக பயன்படுத்தலாம் என்பது பற்றியும் எடுத்து கூறி நம்மிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கும்.

விஷால் மற்றும் அர்ஜுன் சார் என்று இருவருமே அவரவர் ஸ்டைலில் ஹாட்டஸ்ட் ஹீரோக்கள் தான். அவர்களோடு இப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி என்றார் சமந்தா அக்கினேனி.

இரும்புத்திரை வருகிற மே மாதம் 11 தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Irumbu Thirai movie will give you fear on Internet says Samantha

More Articles
Follows