தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய், சூர்யா, விஷால், ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கோலிவுட் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர் ஹன்சிகா.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்
தற்போது இவரின் 50-வது படமான ‘மஹா’ ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதிலும் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ளார் ஹன்சிகா.
இந்த நிலையில் இவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறதாம்.
அதாவது… ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி என்பவருக்கு வருகிற மார்ச் 20-ந் தேதி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் நடைபெற உள்ளதாம்.
எனவே உதய்பூர் அரண்மனை ஒன்றினை 2 நாட்கள் வாடகைக்கு எடுத்து அதில் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்திவிருக்கிறார்கள்.
Wedding bells for hansika’s brother