தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை ECR முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் சோதனை செய்துக் கொண்டிருந்தனர் கானத்தூர் போலீஸார்.
அப்போது அங்கு வந்த TN07 CQ 0099 என்ற இன்னோவா காரை மறித்து சோதனையிட்டனர்.
அப்போது நடிகை ரம்யா கிருஷ்ணன், அவரது சகோதரி அபிநயா கிருஷ்ணன் ஆகியோரும் காரில் இருந்தனர்.
படையப்பா படத்தில் நீலாம்பரி, பாகுபலி படத்தில் ராஜமாதா உள்ளிட்ட கேரக்டர்கள் ரம்யா கிருஷ்ணனின் பெயரை என்றும் சொல்லும்.
இந்தச்சோதனையில் அந்தக் காரில் ஏராளமான மதுப்பாட்டில்கள் இருந்தன.
அதில் 97 டின்களில் அடைக்கப்பட்ட பீர் மற்றும் 8 பிராந்தி பாட்டில்களும் இருந்தன.
உடனே போலீஸார் அந்த டிரைவர் செல்வகுமார் என்பவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.
கைதான சிறிது நேரத்தில் டிரைவரை நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜாமீனில் அழைத்துச் சென்றார்.
மதுபாட்டில்களை அவர் பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி கடத்தி வந்துள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.










