தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள்: ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா, அபு வளையன்குளம், ஆண்டனி வாத்தியார், தேனி ஈஸ்வர் மற்றும் பலர்.
இயக்கம் – லெனின் பாரதி
இசை – இளையராஜா
ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்
எடிட்டிங் – காசி விஸ்வநாதன்
பி.ஆர்.ஓ. – நிகில் முருகன்
தயாரிப்பு : நடிகர் விஜய்சேதுபதி
கதைக்களம்…
தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் மக்களின் வாழ்க்கை பதிவுதான் இப்படம்.
மலையடிவாரத்தில் வசிக்கும் நாயகன் ஆண்டனி, தினமும் உயரமான மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேலே செல்கிறார்.
போகும் வழியில் சின்ன சின்ன சேவைகளையும் மற்றவர்களுக்கு உதவிடும் வகையில் பொருட்களை கொண்டு செல்வதும் அங்கிருந்து கீழே கொண்டு வருவதும் கூலிக்கு மூட்டை சுமப்பதும் தான் இவரது வாழ்க்கை.
எப்படியாவது தான் உழைத்த பணத்தில் நிலம் வாங்கி, விவசாயம் செய்து முன்னேறி விட வேண்டும் என அயராது உழைக்கிறார்.
இதனிடையில் ஏலக்காய் தோட்ட தொழிலாளர்கள் யுனியன் பிரச்சினை என தலையிடுவதால் சிறைக்கு செல்ல நேரிடுகிறார்.
அதன்பின்னர் என்ன ஆனது? நிலம் வாங்கினாரா? சிறைக்கு சென்று வந்த பின்னர் வாழ்க்கை எப்படி திசை மாறியது? இதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
படத்திற்கு நாயகன் நாயகி வேண்டும் என்பதால், ஆண்டனி மற்றும் காயத்ரி இருவரும் நடித்துள்ளனர்.
இருவரும் அருமையான நடிப்பை கொடுத்துள்ளனர். தன் மகனுக்கு தன் நிலத்தை காட்ட வேட்டி கட்டுவது, ஏலக்காய் மூட்டை சாய்வது, விவசாயம் நஷ்டத்தை தருவது என ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்றவாறு முக பாவனைகள் கொடுத்துள்ள இவரது சிறப்பு.
ஜோக்கரில் பார்த்த அதே காயத்ரி. இவருக்கு நடிக்க தெரியாது. வாழ மட்டும்தான் தெரியும் என நிரூபித்துள்ளார்.
மற்றபடி படத்தில் உள்ள அனைத்தும் கேரக்டர்களும் வாழ்ந்திருக்கிறார்கள்.
அங்குள்ள மனிதர்கள் அவர்களின் யதார்த்தமான வாழ்க்கையை முறையை அவர்களுக்கே தெரியாமல் கேமரா வைத்து படமாக்கியுள்ளது போல் தோன்றும்.
அப்படியொரு படத்தை நமக்கு கொடுத்துள்ளார் லெனின் பாரதி.
எந்த வயதிலும் உழைத்து வாழ வேண்டும் என ஏலக்காய் மூட்டை சுமந்து செல்லும் பெரியவர், அங்கு டீ கடை வைத்து வியாபாரம் செய்யும் பெண்மணி, உரக்கடை அதிபர், யுனியன் தலைவர் என இப்படியாக எல்லாரையும் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
சிட்டியில் வாழும் ஏன், கிராமத்தில் வாழும் மக்களே இந்த படத்தை பார்த்தால் மலை பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கையை தெரிந்துக் கொள்ளலாம்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
என்னடா? கேமரா ஆங்கிள் இது? என சினிமாவை திட்டினால் இந்த படத்தை நிச்சயம் நீங்கள் பார்க்க வேண்டும்.
அப்படியொரு அழகான பல கோணங்களில் இந்த பதிவை செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.
மூட்டை சுமக்கும் ஒரு பெரியவர் நடந்துக் கொண்டே தன் வேலையை சொல்லிக் கொண்டே போகும் போது கேமரா செல்லும் அந்த ஒவைட் ஆங்கிள், இறுதியாக அந்த காற்றாழை காத்தாடிகள் இப்படியொரு ஆங்கிளை பார்த்து இருக்க மாட்டீர்கள்.
மு. காசி விஸ்வநாதன் தேவைக்கு ஏற்றவாறு எடிட்டிங்கை மேற்கொண்டுள்ளார்.
இளையராஜா இசையில் வலம் வந்தால் இந்த மேற்குத் தொடர்ச்சி மலையை எந்த சோர்வும் இன்றி நாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அப்படியொரு பின்னணி இசையை கொடுத்துள்ளார்.
ஒரு அழகான பாடலையும் பாடி ரசிகர்களை பரசவப்படுத்தியுள்ளார்.
இயக்கம் பற்றிய அலசல்…
ஒவ்வொரு வெள்ளந்தி மனிதனையும், அவர்களின் உழைப்பையும் அழகாக உரித்து வைத்துள்ளார் டைரக்டர் லெனின் பாரதி.
இப்படிப்பட்ட மனிதர்களில் யார்? வில்லனாக இருக்க முடியும் என்பதற்கு இயற்கை, சூழ்நிலைகள் எப்படியெல்லாம் மாறி நாயகன் வாழ்க்கை மாற்றுகிறது என்பதை எல்லாம் உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்.
க்ளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத ஒன்று.
தான் ஒரு முன்னணி நடிகர் என்றாலும் இப்படத்தில் தலை காட்டாது, கமர்சியல் விஷயங்கள் எதையும் சேர்க்காமல் படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்ட விஜய்சேதுபதியை பாராட்டியே ஆக வேண்டும்.
மேற்குத் தொடர்ச்சி மலை… குடும்பச் சுற்றுலாவுக்கு ஏற்ற மலை
Merku Thodarchi Malai movie review rating