‘லாக்கர்’ விமர்சனம்.. குட் ஓப்பனிங்

‘லாக்கர்’ விமர்சனம்.. குட் ஓப்பனிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

நாம் பார்த்து ரசித்து கொண்டாடிய ராஜதந்திரம், சதுரங்க வேட்டை ஆகிய படங்களின் வரிசையில் வந்திருக்கும் மற்றொரு திரைப்படம் லாக்கர்

கதைக்களம்…

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இலட்சக்கணக்கில் கொள்ளையடிக்கும் கும்பல் தலைவன் நாயகன் விக்னேஷ் சண்முகம். இவருக்கு இரண்டு நண்பர்கள்.. அவர்களின் உதவியுடன் கொள்ளையடித்து வருகிறார்

ஒருநாள் நாயகனையே ஏமாற்றி விடுகிறார் நாயகி. அட.. இவள் நம் இனம் தானே என்கிற ரீதியில் நாயகி நிரஞ்சனா மீது காதல் கொள்கிறார் விக்னேஷ்.

ஒரு கட்டத்தில் அட்வைஸ் செய்த காதலிக்காக திருந்தி வாழ நினைக்கிறார் விக்னேஷ். ஆனால் திருடர்களிடமிருந்து கொள்ளை அடித்தால் அது தப்பே இல்லை என நவீன நாயகியாக அட்வைஸ் செய்கிறார் நிரஞ்சனா.

எனவே மீண்டும் தன்னுடைய பழைய பாதைக்கு திரும்புகிறார் விக்னேஷ். நாயகி திடீரென மனம் மாற என்ன காரணம்? அவரின் சூழ்ச்சி என்ன? காதலிக்காக கொள்ளையடித்தாரா நாயகன்? அவர்களின் திட்டம் என்ன என்பதே மீதிக்கதை.

கேரக்டர்ஸ்..

விக்னேஷ் சண்முகம், நிரஞ்சனி அசோகன், நிவாஸ் ஆதித்தன், சுப்பிரமணியன் மாதவன், தாஜ்பாபு, பெனட், ஆறுமுகம் ஆகியோர் நடித்துள்ள படம்.

திருடன் என்றாலும் ஸ்மார்ட் ஆகவே காணப்படுகிறார் நாயகன்.. விக்னேஷ் கூடுதல் மெனக்கெட்டு ரொமான்ஸ் செய்திருக்கலாம்.. அளவான தேகம் நல்ல உயரம் என சினிமாவில் வலம் வர வாய்ப்பு இருக்கிறது.

நிறை காட்சிகளில் இவரது பாடி லாங்குவேஜ் சதுரங்க வேட்டை நட்டியை நினைவு படுத்துகிறது குரலும் கூட அவரது குரலுக்கு ஒத்துப்போகிறது.. அடுத்த நட்டி.?

நாயகி நிரஞ்சனா நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். இவருக்கு கிளாமரும் வரும் என்கிற ரீதியில் முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பு. நாயகனின் நண்பர்களாக வரும் இருவரும் கொஞ்சம் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளனர்.

வில்லன் சக்கரவர்த்தியாக நிவாஸ் நடித்திருக்கிறார். இவரும் ஹீரோவை போலவே படு ஸ்மார்ட்டாக இருக்கிறார். ஆனால் வில்லத்தனத்தில் கம்பீரம் இல்லை. ரேமாண்ட் டிரெஸ் போட்ட மாடல் போல வந்து செல்கிறார்.

டெக்னீசியன்ஸ்…

தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பின் ராஜசேகர்.என் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற இரட்டையர்கள் இணைந்து இயக்கியுள்ளார்கள்.

திரைப்படக் கல்லூரி மாணவர் தணிகை தாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார் வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார்.
வரிகளை கார்த்திக் நேத்தா, விஷ்ணு இடவன் என இரு பாடலாசிரியர்கள் எழுதி உள்ளனர். படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் கண பார்த்தி.

இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது.

வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார். பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது கூடுதல் கவனத்தை பெறுகிறது.

தங்க கட்டிகளை கொள்ளை அடிக்கும் காட்சி மிகவும் திருப்புமுனையான காட்சி. ஆனால் அதில் போதுமான சுவாரசியம் இல்லை.

முக்கியமாக தங்க கட்டிகள் வைத்திருக்கும் லாக்கர் அறையில் எந்த சிசிடிவி கேமரா கூட இல்லையா? நாயகன் முகமூடி கூட இல்லாமல் திருடி விட்டு செல்வாரா? என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி.

இரட்டை இயக்குனர்களாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்லதொரு படைப்பை கொடுக்க முன்வந்துள்ளனர். சின்ன படம் சின்ன பட்ஜெட் என்று தெரியாத அளவிற்கு ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் நேர்த்தியாக உள்ளது.

ஆக ரசிகர்களுக்கு லாக்கர் என்ற பெயரில் நல்ல ஓபனிங் கொடுக்கும் திரைப்படமாக இதை கொடுத்திருக்கின்றனர். இந்த படத்தை பிரபல விநியோகஸ்தர் ஜெனிஸ் வெளியிடுகிறார்.

Locker movie review and rating in tamil

சில நொடிகளில் விமர்சனம்.. புன்னகை பூ.? புயல் கீதா-வா.?

சில நொடிகளில் விமர்சனம்.. புன்னகை பூ.? புயல் கீதா-வா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த படம், ‘சில நொடிகளில்’. நவம்பர் 24ல் ரிலீஸ்.

இந்தப் படத்தின் நாயகி புன்னகை கீதாவே இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

கதைக்களம்..

ரிச்சர்டும் கீதாவும் கணவன் மனைவி. இவர்கள் லண்டனில் வசிக்கும் தமிழர்கள். இவர்களுக்கு குழந்தை இல்லை.

டாக்டர் ரிச்சர்டுக்கு மனைவி இருந்த போதும் பெண்கள் மீது நாட்டம் உண்டு. இவர் ஒரு டாக்டர் என்பதால் மாடல் அழகி யாஷிகாவுடன் எளிதில் தொடர்பு கிடைக்கிறது.

ஒரு நாள் வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் ரிச்சர்டும் யாஷிகாவும் ஒன்றோடு ஒன்றாக கலந்து மது அருந்தி உல்லாசமாக இருக்கிறார்கள்.

அப்போது எதிர்பாராத விதமாக போதை தலைக்கேறி யாஷிகா மரணம் அடைகிறார். வேறு வழியில்லாமல் மனைவிக்கு தெரியாமல் யாஷிகாவை ஒரு இடத்தில் குழி தோண்டி புதைக்கிறார் ரிச்சர்ட்.

ஒரு கட்டத்தில் இதனையறிந்த பெண் பத்திரிக்கையாளர் ரிச்சர்டை மிரட்டுகிறார். பணம் கொடுத்தால் உண்மையை சொல்லாமல் மறைப்பதாக மிரட்டுகிறார்.

இதன் பிறகு என்ன நடந்தது? ரிச்சர்ட் என்ன செய்தார்? மனைவியிடம் மாட்டிக் கொண்டாரா? போலீஸ் இடம் சிக்கிக் கொண்டாரா? பெண் ரிப்போர்ட்டர்க்கு எப்படி தெரிந்தது? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

திரௌபதி & ருத்ரதாண்டவம் உள்ளிட்ட பல படங்களில் ஆக்சன் நாயகனாக நடித்த ரிச்சர்ட் ரிஷி இந்த படத்தில் கொஞ்சம் ரூட்டை மாற்றி ரொமான்டிக் செய்திருக்கிறார்.. ஆனால் இதில் சற்று குண்டாகவே காணப்படுகிறார். ஒருவேளை திருமணம் ஆனதனால் அப்படி காட்டி இருப்பாரோ இயக்குனர்.?

மனைவி காதலி என 2 பெண்களிடம் மாட்டிக் கொண்டு ரிச்சர்ட் படும் அவஸ்தைகள் ஆண்களுக்கு உரித்தான சொல்ல முடியாத தவிப்பு.

யாஷிகா கொஞ்ச நேரமே வந்தாலும் தன்னுடைய நிஜ வாழ்க்கை மாடல் பெண்ணை அழகாக சித்தரித்திருக்கிறார். நுனி நாக்கில் அவர் ஆங்கிலம் பேசுவது அசர வைக்கிறது.

லண்டனில் வாழும் தமிழர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் கலந்து தான் தமிழை பேசுவார்கள்.. அதை சரியாக செய்திருக்கிறார் இயக்குனர் வினய் ஆனால் அயல் நாட்டிலும் தமிழர்களை கள்ளக்காதலர்களாக காட்டி இருப்பது ஏனோ?

சிரித்த முகம்.. அழகான கண்கள்.. கட்லெட் உதடுகள் என சிக்கென்று இருக்கிறார் புன்னகை பூ கீதா. ஆனால் இவரது கேரக்டர் படத்தில் பெரிய திருப்புமுனை. அடடா இவர் புன்னகை பே கீதாவா? அல்லது புயல் கீதாவா? என்று கேட்க வைத்திருக்கிறார். சைலன்ட் கில்லர்.

படத்தில் வில்லனை இல்லை என்றாலும் கீதாவின் கீ நன்றாகவே வேலை செய்திருக்கிறது.

டெக்னீசியன்கள்…

கிட்டத்தட்ட 5 கேரக்டர்களில் படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் வினய் பரத்வாஜ்.

படம் ஒன்றரை மணி நேரத்திற்குள் முடிவடைவதால் எங்கும் போர் அடிக்கவில்லை என நினைத்தாலும் தேவையற்ற பாடல்கள் நம்மை குழப்புகின்றன. முக்கியமாக படம் விறுவிறுப்பாக செல்லும் நேரங்களில் பாடல் தேவையற்றது.

பின்னணி இசையில் இசையமைப்பாளர் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தபோது பாடல்களை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.

படத்தின் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் நேர்த்தியாக உள்ளது.

நாம் என்னதான் நேர்மையாக வாழ்ந்தாலும் சில நொடிகளில் வாழ்க்கை தடம் மாறிவிடும்.. அது போல நாம் என்னதான் தவறுகளை மறைத்து மறைத்து செய்து வந்தாலும் அதுவும் சில நொடிகளில் நம்மை காட்டிக் கொடுத்து விடும் என்பதை காட்சிகளாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

சில நொடிகளில் ஏற்பட்ட போதை வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை சுவாரசியமாக கொடுத்திருக்கிறார். அதுபோல சில நொடிகளில் நாம் சிலரை கண்மூடித்தனமாக நம்புகிறோம். ஆனால் அவர்கள் தான் நமக்கு பேராபத்தை கொடுத்து சில நொடிகளில் சில மனிதர்கள் என்பதையும் அப்பட்டமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் வினய் பரத்வாஜ்.

Sila Nodigalil movie review and rating in tamil

ஜோ விமர்சனம் 4.25/5.. ஜொலிக்கும் காதல்

ஜோ விமர்சனம் 4.25/5.. ஜொலிக்கும் காதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் எப்பொழுதும் இரண்டு வகையான கதைகள் உண்டு. ஒன்று வித்தியாசமாக முற்றிலும் புதிய திரைக்கதையாக இருக்கும். அல்லது நாம் பார்த்து பழகிப் போன கதையை அருமையான திரைக்கதையாக கொடுத்திருப்பார்கள்.

இதில் இயக்குநர் ஹரிஹரன் ராம் நமக்கு பழகிய காதலை தன்னுடைய பாணியில் ஓவியமாக படைத்திருக்கிறார்.

கதைக்களம்…

ரியோ ராஜ் நாயகன். காதலியாக மாளவிகா மனோஜ்..

‘ஜோ’ படத்தின் ஆரம்பத்தில் பள்ளிக்கூட காட்சிகள் கலாட்டா மோதல் என 10 நிமிடத்தில் முடிந்து விடுகிறது. அந்த காட்சி படத்தின் முக்கியமானது என்பதால் அதை கண்டிப்பாக மிஸ் செய்து விடாதீர்கள்.

அதன் பிறகு கல்லூரியில் படிக்கிறார் நாயகன் ரியோ ராஜ். இவர்தான் ஜோ. அதே கல்லூரியில் அதே வகுப்பில் படிக்கும் மலையாள பெண்குட்டி மாளவிகா. நாயகியை பார்த்தவுடன் காதலிக்க தொடங்குகிறார்.

ஒரு கட்டத்தில் மாளவிகாவும் காதலிக்க ஜாலியாக ரொமான்டிக்காக கல்லூரியை முடித்த பின்னர் மாளவிகா தன் சொந்த ஊர் ஆலப்புழாவுக்கு செல்கிறார். ரியோ தமிழ்நாட்டில் வசிக்கிறார்.

அதன் பின்னர் காதலர்களிடையே சின்ன சின்ன ஈகோ மோதல் வெடிக்கிறது. ஒரு நாள் தன் வீட்டிற்கு நாயகனை வர சொல்கிறார் மாளவிகா. உன்னுடைய ஈகோவை தூக்கி வைத்து விட்டு எனக்காக வா என்கிறார்.

அந்த நேரத்தில் ஒரு பிரச்சனை எழவே காதலர்களிடையே விரிசல் ஆரம்பம். அதன் பின்னர் என்ன ஆனது? காதலர்கள் இணைந்தார்களா? மனைவி எப்படி வந்தார்? அவருக்கு இவருக்கும் ஏதேனும் தொடர்பு இருந்ததா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

JOE – RIO RAJ
SUCHI – MALAVIKA MANOJ
SHRUTHI – BHAVYA TRIKHA
SECURITY – CHARLIE
SANTHA – ANBUTHASAN
PRAVEEN – AEGAN

VINOTH – VJ RAKESH
JOE APPA – ELANGO KUMANAN
SUCHI APPA – JAYAKUMAR
TAMILARASAN – M J SHRIRAM

‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ படத்தில் பார்த்த ரியோ ‘ஜோ’ படத்தில் பார்த்த ‘ரியோ’ என ஏகப்பட்ட வித்தியாசங்கள். நடிப்பில் அத்தனை மெச்சூரிட்டியை காட்டி இருக்கிறார். ‘ஜோ’ கேரக்டரை ஜொலிக்க வைத்துள்ளார் ரியோ.

காதலை சொல்ல தயங்கும் இடத்தில் அவரின் தொண்டைக்குழி கூட நடித்திருக்கிறது. ரியோ தன் கண்களை குளமாக்கி நம்முடைய இதய துடிப்பை லப்டப்பை எகிற செய்திருக்கிறார்.

மலையாள பெண் குட்டியாக நிஜ மலையாளி மாளவிகா மனோஜ் நடித்துள்ளார். கண்களிலும் உதடுகளிலும் தன்னுடைய பாதி உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். திடீரென லவ் யூ சொல்வது திடீரென வெறுத்து ஒதுங்குவது என பெண்களின் தவிப்பை ஒவ்வொரு ஃப்ரேமிலும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதே சமயம் தந்தைக்காக காதலனை எதிர்க்கும் சமயத்தில் அச்சு அசல் சுயநல பெண்ணாகவே மாறி இருக்கிறார்.

இடைவேளைக்குப் பிறகு வரும் பவ்யா கொழு கொழு பொம்மை ஆக நம்மை ஈர்க்கிறார். ஆரம்பத்தில் இவரது கேரக்டரை நாம் வெறுத்தாலும் மெல்ல மெல்ல பவ்யா மீதும் நமக்கு பாச மழை வழிந்து விடும். அதற்காகவே கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பெரிய திருப்புமுறையை வைத்திருக்கிறார் இயக்குனர்.

இவர்களுடன் அருமையான செக்யூரிட்டி வேடத்தில் நடித்துள்ளார் சார்லி. தன்னுடைய அனுபவ அடிப்பான் சபாஷ் போட வைக்கிறார்.

ரியோவின் நண்பராக வரும் அன்பு தாசன் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் கலக்கி இருந்தார். இதில் நண்பனின் காதலுக்காக அவர் ஒவ்வொன்றையும் செய்து விட்டு அடி வாங்குவது ரசிக்க வைக்கிறது.

ரியோவுக்கு தூது போகும் நண்பராக நடித்தவரும் சின்ன சின்ன வசனங்களில் மூலம் நம்மை கவர்கிறார்.

டெக்னீசியன்கள்…

ART DIRECTOR
ABR

EDITOR
VARUN K.G

CINEMATOGRAPHY
RAHUL KG VIGNESH

MUSIC
SIDDHU KUMAR

PRODUCED BY
DR.D.ARULANANDHU
MATHEWO ARULANANDHU

WRITTEN & DIRECTED BY
HARIHARAN RAM S

ஹரிஹரன் ராம் அறிமுக இயக்குனர் என்றாலும் அனுபவம் வாய்ந்த இயக்குனரை போல ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார்.

அருமையான திரைக்கதையை அமைத்து அதற்கான நடிகர்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு காதல் விருந்து படைத்துள்ளார்… அண்மைக்காலமாக போதை கஞ்சா குடி ஆக்சன் வன்முறை என தமிழ் ரசிகர்கள் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் காதல் தென்றலை வீசி இருக்கிறார் இயக்குனர் ஹரிஹரன்.

அவருக்கு உறுதுணையாக இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் சித்து குமார்.. ரியோ – மாளவிகாவின் டூயட் பாடல் இனி காதலர்களின் ரிங்டோன் ஆக மாறும்.

ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் தங்கள் பணியை உணர்ந்து செய்துள்ளனர்.

ஆட்டோகிராப், பிரேமம், வாரணம் ஆயிரம், 96, ராஜாராணி என பல படங்களில் நாம் பார்த்த காதல் தான் என்றாலும் இதில் தன் திரைக்கதையால் சுவாரஸ்யப்படுத்தி காதலர்களையும் கவர்ந்து இருக்கிறார் இயக்குனர்.

எனவே இந்த ஜோ… ஜொலிக்கும் காதல்..

joe movie review and rating in tamil

செவ்வாய்க்கிழமை பட விமர்சனம்..

செவ்வாய்க்கிழமை பட விமர்சனம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல ஹீரோயின் பாயல் ராஜ்புட் நடிப்பில் தெலுங்கில் ‘மங்களாவாரம்’ என உருவாக்கப்பட்டு தமிழில் செவ்வாய்க்கிழமை என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீசாகியுள்ளது.

கதைக்களம்…

1990-களில் நடக்கும் திரைக்கதை இது.

ஒரு ஊரில் ஜமீன்தார் அவரது மனைவி.

அந்த ஊரில் உள்ள ஒரு அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள். ஆனால் இதே நாளில் ஒவ்வொரு வாரமும் அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது.

முதல் வாரம் செவ்வாய்க்கிழமை யாரோ ஒரு ஜோடிக்கு கள்ளக்காதல் என்று சுவற்றில் ஒரு நபரால் எழுதி வைக்கப்படுகிறது. அதே நாளில் ஒரு இடத்தில் அவர்கள் இருவரும் இறந்து கிடக்கின்றனர்.

இதைப்பற்றி விசாரிக்க போலீஸ் நந்திதா ஸ்வேதா வருகிறார். இது ஷைலு என்ற பேய் நிகழ்த்தி கொலை என்கின்றனர் ஊர்க்காரர்கள். மேலும் உடலை போஸ்ட் மாடம் செய்ய மறுக்கின்றனர்.

அடுத்த வாரம் வேறு ஒரு ஜோடிக்கு கள்ளக்காதல் என்று சுவற்றில் எழுதி வைக்கப்படுகிறது. அவர்களும் அதே செவ்வாய்க்கிழமை இறந்து கிடக்கிறார்கள். இதனால் போலீஸ் வேட்டை தீவிரமாகிறது.

3வது வார செவ்வாய்க்கிழமையில் யார் கொல்லப்படுகிறார்கள் என்பதற்காக ஊர் காத்திருக்கிறது? கள்ளக்காதல் ஜோடி இறந்தார்களா? இதையெல்லாம் செய்யும் மர்ம நபர் யார்? சுவற்றில் எழுதி வைப்பதன் நோக்கம் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

Payal Rajput, Sritej, Ajmal Ameer, Chaitanya Krishna, Ajay Ghosh, Laxman and others.

நடிகை பாயல் ராஜ்புட்… கவர்ச்சிக்கு கவர்ச்சி.. காதலுக்கு காதல்.. நடிப்புக்கு நடிப்பு.. மிரட்டலுக்கு மிரட்டல் என வெரைட்டியாக கொடுத்திருக்கிறார். கண்கலங்கவும் வைக்கிறார்.. ரசிக்கவும் வைக்கிறார் பாயல்.

தான் விரும்பும் எந்த ஆண் மகனுடனும் ஒரு நிமிடத்தில் உறவு வைக்க ரெடியாகிறார். பாயல்.. அதேசமயம் வேண்டாம் என்றால் வெறுக்கிறார்.. இது போன்ற ஒரு வேடத்தை எந்த நடிகையானாலும் ஏற்க தயங்குவார்.

உடலில் ஏற்படும் ஹார்மோன் கோளாறால் இது நடைபெறுவதாக இயக்குனர் காட்சிகள் வைத்திருந்தாலும் நடிகைகள் நிச்சயம் தயங்குவது உண்டு.

நாயகியின் காதலன் நடிப்பிலும் ஆக்ஷனிலும் தூள் கிளப்பி இருக்கிறார். தன் சிறுவயது தோழியை பாலியல் தொல்லை செய்யும் தந்தையைக் கூட கொல்லும் நேர்மையான நாயகனாக வாழ்ந்திருக்கிறார்.

50 ஆண்டுகால சினிமாவில் ஜமீன்தார் என்றாலே ஒரு ஆன்மீகவாதியாக காட்டப்படுவார்கள். ஆனால் இதில் ஜமீன்தார் நாத்திகவாதியாக மிகவும் நேர்மையானவராக நடித்திருக்கிறார்.

அதே சமயம் ஆன்மீகவாதியாக காட்டப்படும் அவரது மனைவி சபல புத்தி கொண்டவராக காட்டப்பட்டு இருப்பது இயக்குனரின் வித்தியாசமான கற்பனை.

ஆசிரியராக வரும் அஜ்மல் அமீர் கொஞ்ச நேரம் என்றாலும் வித்தியாசமான வேடமேற்று ஆன்ட்டி ஹீரோவாக அலப்பறை கொடுத்திருக்கிறார்.

இவர்களுடன் சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஸ், லக்ஷ்மன் ஆகியோர் மிகையில்லாத நடிப்பை கொடுத்துள்ளனர்.

Crew:

Digital Marketing: Talk Scoop
Executive Producer: Saikumar Yadavilli
Editor: Gullapalli Madhav Kumar
Dialogue writers: Tajuddin Syed, Raghav
Art Director: Mohan Talluri
Production Designer: Raghu Kulkarni
Fight Masters: Real Satish, Prithvi
Sound Designer & Audiography: National Award winner Raja Krishnan
Cinematographer: Dasaradhi Sivendra
Choreographer: Bhanu
Costume Designer: Mudasar Mohammad
Music Director: B Ajaneesh Loknath
Story, Screenplay, Direction: Ajay Bhupathi

காந்தாரா படத்திற்கு இசையமைத்த அஜீனிஸ் லோக்நாத் இசை மூலம் மிரட்டி இருக்கிறார்.. பல இடங்களில் காந்தாரா சாயல் தெரிந்தாலும் படத்துடன் ஒன்றை வைப்பதில் இசைக்கு முக்கிய பங்கு.

இதுதான் முடிவு என்று நாம் சில காட்சிகளை நினைக்கும் போது சில திருப்புமுனைகளை கொடுத்து காட்சியை சுவாரசியப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் அஜய் பூபதி.

தசரத்தி சிவேந்திரா என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரது பணி மேக்கிங் வேற லெவல்.

பழைய கதையில் புதிய விதமான மேக்கிங் கொடுத்து இருப்பது சிறப்பு. 1990களில் கதைக்களம் நகர்வதால் அதற்கு ஏற்ப கலை வடிவத்தை கொடுத்திருப்பது கூடுதல் கவனம் பெறுகிறது.

எங்கெல்லாம் கள்ளக்காதல் நடக்கிறதோ அங்கெல்லாம் இந்த பேய் தன் வேலையை காட்டும் எனும் மாவட்ட வாரியாக காட்டியிருப்பது சிரிப்பை வர வைக்கிறது.

Chevvaikizhamai movie review and rating in tamil

அம்பு நாடு ஒம்பது குப்பம்.. பட விமர்சனம்

அம்பு நாடு ஒம்பது குப்பம்.. பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி.கே. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பூபதி கார்த்திகேயன் தயாரித்துள்ள படம் ‘அம்புநாடு ஒம்பது குப்பம்’.

கதைக்களம்..

‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற நாவலைத் தழுவி இந்தப் படம் உருவாகியுள்ளது.

புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஒரு கிராமத்தில் மேல் சாதி கீழ் சாதி என்ற பிரிவினை உள்ளது.. ஒரு டீக்கடை என்றால் கூட இரண்டு பிரிவினருக்கும் வேறு வேறு டம்ளர்களில் டீ கொடுப்பதை கடைக்காரர் கூட வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஊர் கோயில் திருவிழா நடக்கிறது.. அந்த சமயத்தில் கீழ் சாதியை சேர்ந்தவர் பூசாரியின் தட்டில் கை வைத்து விபூதி எடுத்து விடுகிறார்.
?
ஒரு கீழ் சாதிக்காரன் எப்படி விபூதியில் கை வைக்கலாம் என்ற அளவில் பிரச்சினை வெடிக்கிறது?

அதன் பின்னர் என்ன நடந்தது? கோயில் திருவிழா நடைபெற்றதா? சாதி மோதல் முடிவுக்கு வந்ததா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

இதில் சங்ககிரி மாணிக்கம், ஹர்ஷிதாஸ்ரீ, விக்ரம், சுருதி, பிரபு மாணிக்கம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இன்றும் இந்த டிக் டாக் உலகத்தில் சாதி மோதலும் தீண்டாமையும் எத்தனை வன்முறைகளை நிகழ்த்தும் என்பதை இந்த படம் சொல்கிறது.

தந்தையாக நடித்த சன்னாசி நடிப்பு உங்களை அறியாமல் கைதட்ட வைக்கும் கண்கலங்க வைக்கும்.. பெரும்பாலும் புதுமுகங்கள் என்பதால் பெரிய அளவில் நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை

டெக்னீசியன்ஸ்…

மூலக்கதை – துரை குணா.

இயக்கம் – ஜி.ராஜாஜி,

ஒளிப்பதிவு – ஓ.மகேஷ்,

இசை – அந்தோணி தாசன் –

பின்னணி இசை – ஜேம்ஸ் வசந்தன்,

படத் தொகுப்பு – பன்னீர்செல்வம்,

நடன இயக்கம் – ராதிகா,

பாடகர்கள் – பிரதீப்குமார் அந்தோணிதாசன்..

இசை அந்தோணி தாசன்.. பின்னணி இசை ஜேம்ஸ்வசந்தன் ஆகிய பிரபலங்கள் இருந்தும் நமக்கு வருத்தமே..

ஆனால் ‘எங்க தலைமுறை இதுக்கு மேல போதும்.. உங்க தலைமுறை 100 காலம் வாழும்

கண் கெட்ட தூரம் உழைச்சோம்..
சாயங்காலம் வீடு வந்து சேர்ந்தோம்..

நான் படிக்காத ஏட்ட நீ படிக்கனும்..
நான் வாழாத வாழ்வை நீ ஜெயிக்கனும்..
.. என்ற பாடல் வரிகள் நம்மை ரசிக்க வைக்கிறது..

கிளைமாக்ஸ் எந்த சினிமாத்தனமும் இல்லாமல் திரைக்கதையை முடித்து இருப்பது ராஜாஜியின் ராஜதந்திரம் எனலாம்.

..அம்பு நாடு ஒம்பது குப்பம்.. ஜாதீ மோதல்

Ambu Naadu Ombathu Kuppam movie review and rating in tamil

சைத்ரா பட விமர்சனம்.; நியாயம் வேணாமா.?

சைத்ரா பட விமர்சனம்.; நியாயம் வேணாமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெனித்குமார் இயக்கத்தில் மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைத்ரா’.

நவம்பர் 17- ம் தேதி ‘சைத்ரா’ வெளியான இப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.

கதைக்களம்…

பேய் படம் என்றாலே ஒரு பெரிய பங்களாவில் பேய் குடி இருக்கும்.. அதற்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கும்.. இந்த டெம்ப்ளேட் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சினிமாவில் மாறாது போல.. அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றொரு சைத்ரா இந்த படம்.

டிடெக்டிவ் ஏஜென்ட் திவ்யா தன் அண்ணன் போலீஸ் உதவியுடன் தன் நண்பன் இருக்கும் இடத்தை தேடி அலைகிறார். ஒரு கட்டத்தில் ஒரு சாமியாரிடம் உதவி கேட்டு வடக்கு வீதியில் உள்ள ஒரு பெரிய பங்களாவை தேடி கண்டுபிடிக்கிறார்.

அங்கு பூஜா மற்றும் அவரது கணவரும் நாயகி சைத்ரா (யாஷிகா ஆனந்த்) தேடி வருகின்றனர்.

வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மூவரும் உள்ளே செல்ல அங்கே திவ்யா நண்பன் கொல்லப்பட்டு இறக்கும் தருவாயில் கிடக்கிறார்.

கொலை உடலைப் பார்த்த பூஜாவும் அவர் கணவரும் வீட்டை விட்டு ஓடி விடுகின்றனர். வேறு வழியின்றி நண்பனை திவ்யா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.

அங்கே மருத்துவமனையில் டாக்டரின் டேபிளில் பூஜா மற்றும் அவர் கணவர் மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக வந்த செய்தியை நியூஸ் பேப்பரில் பார்க்கிறார் திவ்யா.

அப்படி என்றால் இதற்கு முன்பு நடந்தது என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்கஸ்…

மிகப்பெரிய விபத்திற்குப் பிறகு யாஷிகா ஆனந்த் இதில் நடித்திருக்கிறார்.. எந்த விதத்திலும் அவரது நடிப்பும் சரி அவரது கேரக்டரும் சரி ஒரு துளி கூட சுவாரசியம் இல்லை.

அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்க சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒளிப்பதிவு ஓகே.. ஆனால் பின்னணி இசை வேஸரட்.. கதை திருநெல்வேலியில் நடப்பதால் மலையாளம் கலந்த தமிழை வசனங்களில் கேட்க முடிகிறது..

பயமுறுத்தும் பேய் படங்கள் காமெடி செய்யும் பேய் படங்கள் என பல வகை உண்டு. ஆனால் சைத்ரா எந்த வகை என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.

ரேடியோக்களில் நாம் கேட்கும் ஒலிச்சித்திரம் போல.. “கத்தியை எடுத்துக் கொண்டு வா என்று சொன்னால்.. கத்தி எடுக்கப் போகிறேன்.. கத்தி எடுத்துக் கொண்டு வருகிறேன்.. இந்தா கத்தி என்பது போல பல வசனகாட்சிகள் உள்ளன.

இவை எல்லாம் நாம் காட்சியாக பார்க்கும்போது இத்தனை வசனங்கள் தேவையா ? படம் முழுக்க இதுபோன்ற நாடகத் தன்மையான காட்சிகள் உள்ளன. ஒரு நாடகம் பார்ப்பது போன்ற உணர்வையே தருகின்றன

திரைக்கதை அமைத்து விதத்தில் இயக்குநர் ஜெனித் குமார் நம் பொறுமையை பேயளவுக்கு சோதித்து விட்டார்.

யாஷிகாவை விட டிடெக்டிவ் திவ்யா ஆக வரும் சக்தி அழகில் நம்மை ஈர்க்கிறார்.

குறைந்தபட்சமாக 10 கேரக்டர்களை வைத்து படத்தை முடித்து விட்டார் இயக்குனர்.. அதற்கு நாம் பாராட்டு தெரிவிக்கலாம்..

Chaitra movie review and rating in tamil

More Articles
Follows