காதலி நட்சத்திராவை மணந்தார் நடிகரும் இயக்குநருமான விஜய்

காதலி நட்சத்திராவை மணந்தார் நடிகரும் இயக்குநருமான விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘எருமை சாணி’ என்ற யூடியூப் வீடியோக்கள் மூலம் யூடியூப் உலகில் தனி இடம் பிடித்தவர் விஜய். நகைச்சுவை பாணியில் வீடியோக்களாக வெளியிட்டதால் விஜய்யின் வீடியோக்களுக்கு தனி ரசிகர் வட்டம் உருவானது.

மேலும், விஜயின் நடிப்பு மற்றும் நகைச்சுவை பேச்சுக்களால் அவருக்கென்றும் தனியாக ரசிகர் வட்டம் உருவாக, அவர் பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்தார்.

யூடியூப் வெற்றியை தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிகராக எண்ட்ரியான விஜய், ஹிப் ஹாப் ஆதி நடித்த ‘மீசையை முறுக்கு’ மற்றும் ‘நான் சிரித்தால்’ போன்ற படங்களில் நடித்து பெரிய திரை நடிகராகவும் பிரபலமானார்.

இதற்கிடையே நடிகராக இருந்த விஜய்க்கு திரைப்படம் இயக்குவதில் ஆர்வம் திரும்பியது. அதன்படி அருள்நிதியை நாயகனாக வைத்து ‘டி பிளாக்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.

சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் திரைப்படமான ‘டி பிளாக்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் விஜய்க்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அவர் தனது காதலி நட்சத்திராவை கரம் பிடித்துள்ளார்.

விஜய் – நட்சத்திரா திருமணம் கோவையில் உள்ள கயல் வெட்டிங் பேலஸில் கோலாகலமாக நடைபெற்றது. திருமண விழாவில் ஊடகத்தை சேர்ந்தவர்களும், திரையுலகைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Youtuber turned actor Vijay gets married

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் லியோ மற்றும் கேப்டன் மில்லர். ஜெயிக்கப்போவது யாரு?

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் லியோ மற்றும் கேப்டன் மில்லர். ஜெயிக்கப்போவது யாரு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர்.

படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து பேசினார்.

நாங்கள் படத்தை விடுமுறை நாட்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

அக்டோபர் மாதத்தில் படம் ரிலீஸ் ஆகும் எனவும் தெரிவித்தார்.

விஜய்யின் லியோ ஆயுத பூஜை அன்று வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விஜய்யின் லியோ மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் ஒரே நேரத்தில் வெளியாவது உறுதியாகி உள்ளது. பாக்ஸ் ஆபிசில் ஜெயிக்கப்போவது விஜயா தனுஷா ? பார்ப்போம்.

Captain miller movie clashing with vijay’s leo

தந்தையான சந்தோசத்தில் திருமண நாளை கொண்டாடிய சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா

தந்தையான சந்தோசத்தில் திருமண நாளை கொண்டாடிய சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் அஜய் கிருஷ்ணாவும் ஒருவர். புகழ்பெற்ற பாடகர் உதித் நாராயணின் குரல் ஒற்றுமைக்காக அவர் பரவலாக அறியப்படுகிறார். தற்போது, ​​அவர் தனது புதிய குழந்தையுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெஸ்ஸி என்ற பெண்ணை காதலித்து வந்த அஜய், கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த அழகான ஜோடி சமீபத்தில் தங்கள் குழந்தையுடன் முதல் ஆண்டு விழாவை கொண்டாடியது.

தங்கள் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட இருவரும் தங்கள் மகனின் பெயரை அயன் ஜாடன் என்று தெரிவித்தனர்.

‘Super Singer’ fame Ajay Krishna celebrates anniversary with his wife and newborn!

ஆணாதிக்கத்திற்கு இடையே கலகக்கார இளம் பெண்ணாக கீர்த்தி சுரேஷ்

ஆணாதிக்கத்திற்கு இடையே கலகக்கார இளம் பெண்ணாக கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஃபேமிலி மேன்’ எனும் விருது பெற்ற படைப்பிற்கு கதை எழுதிய எழுத்தாளர் சுமன் குமார் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ரகு தாத்தா’.

இந்தப் படத்தில் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்.

இவருடன் எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒய் யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தொகுப்பு பணிகளை டி. எஸ். சுரேஷ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராம்சரந்தேஜ் லபானி மேற்கொண்டிருக்கிறார்.‌

படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசமான ஆடைகளை வடிவமைக்கும் பணியினை தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளரான பூர்ணிமா கையாண்டிருக்கிறார்.

கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

‘கே. ஜி. எஃப்’ மற்றும் ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான வெற்றிப் பெற்ற திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ், முதன் முதலில் நேரடியாக தமிழில் தயாரிக்கும் ‘ரகு தாத்தா’ எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது.‌

மேலும் இது தொடர்பாக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பேசுகையில்…

” ரகு தாத்தா – தனது மக்களுக்காகவும், தன்னுடைய நிலத்தின் அடையாளத்தை காப்பாற்றுவதற்காகவும் ஒரு பெண் மேற்கொள்ளும் கடினமான பயணத்தை இப்படம் விவரிக்கிறது.

கொள்கை மற்றும் ஆணாதிக்கத்திற்கு இடையே தேர்வு செய்ய வேண்டிய ஒரு கடுமையான கலகக்கார இளம் பெண்ணின் கதை இது” என குறிப்பிடுகிறார்.

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம்- ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் சிறந்த திரைப்பட அனுபவத்தை வழங்குவதில் நற்பெயரை சம்பாதித்திருக்கிறது.

இதனை அவர்களின் சமீபத்திய வெற்றிகளான ‘கே ஜி எஃப்’ மற்றும் ‘காந்தாரா’ ஆகிய படங்களின் மூலம் உறுதியாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து ‘ரகு தாத்தா’ எனும் படத்தின் மூலம் அவர்கள் தொடர்ந்து எல்லைகளைக் கடந்த.. அனைத்து தரப்பு பார்வையாளர்களுடன் அணுக்கமான தொடர்பு கொள்ளும் வகையிலும், சிந்தனைகளை தூண்டும் வகையிலும் கதைகளை வழங்கி வருகிறார்கள்.

‘ரகு தாத்தா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதால், தற்போது பின்னணி மற்றும் இறுதி கட்ட பணிகள் தொடங்கி இருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் இந்த ஆண்டில் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது.

மேலும் இந்நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து படங்களை வெளியிடவிருக்கிறது. பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘சலார்’ திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகிறது. ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ‘தூமம்’ எனும் மலையாளத் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது.

இதை தவிர்த்து இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டு பிராந்திய அளவிலான படைப்புகளை வெளியிடுவதற்கான திட்டமும் இருக்கிறது.

‘Raghuthatha’: Hombale Films’ Tamil Debut, Continuing the Revolution after KGF

சதீஷ் இயக்கத்தில் அனிருத் இசையில் கவின் நடிக்கும் படம்.; நம்மை அழவைத்தவரே நாயகி.!

சதீஷ் இயக்கத்தில் அனிருத் இசையில் கவின் நடிக்கும் படம்.; நம்மை அழவைத்தவரே நாயகி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில், இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வரும் கவின் நடிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக, உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளைக் குவித்து வரும் நிறுவனம் ரோமியோ பிக்சர்ஸ்.

இந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை நடன இயக்குநர் சதீஷ் இயக்குகிறார். டான்ஸராக திரைத்துறைக்குள் நுழைந்து, நடன இயக்குநராக வளர்ந்து நடிகராகவும் வலம் வரும் சதீஷ் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சமீபத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற டாடா படத்தின் மூலம் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் இளம் நாயகன் கவின் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

அயோத்தி படத்தில் நம்மையெல்லாம் அழ வைத்தவர் இந்த நாயகி ப்ரீத்தி அஸ்ரானி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டணியில் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலமான இசையமைப்பாளர் அனிருத் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவின் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களைக் கவரும் வகையில் இன்றைய தலைமுறையின் கதையைச் சொல்லும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கி சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெறவுள்ளது.

இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார், எடிட்டராக RC பிரனவ் பணியாற்ற, சூர்யா ராஜீவன் கலை இயக்கம் செய்கிறார்.

Ayothi heroine Preethi Asrani to romance Kavin

5 சூப்பர் ஹீரோயின்களுடன் விஜய் – ஜிவி. பிரகாஷ் இணைந்த ‘BOO’ ரிலீஸ் அப்டேட்

5 சூப்பர் ஹீரோயின்களுடன் விஜய் – ஜிவி. பிரகாஷ் இணைந்த ‘BOO’ ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியத் திரையுலகின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர்களில் ஒருவர் விஜய். இவர் தனது தனித்துவமான கதைகளுடன் மதிப்புமிக்க திரைப்படங்களை உருவாக்குவதில் நம்மை ஆச்சரியப்படுத்த தவறுவதில்லை.

‘ஜாக் ஆஃப் ஆல் ஜானர்ஸ்’ என்று கருதப்படும் அவரது பன்முகத் திறமை, கதைசொல்லல், இயக்குநரின் திறமை மற்றும் அவர் திரைப்படங்களை முன்வைக்கும் விதம் இவை எல்லாம் ரசிகர்களை கவரும் விதத்தில் உள்ளது.

அருண் விஜய் நடிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மிஷன் சாப்டர் -1’ திரைப்படம் விரைவில் உலகளவில் திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ள நிலையில், நாளை (மே 27, 2023) அவரது ‘BOO’ என்ற த்ரில்லர் படம் நேரடி ஓடிடி பிரீமியராக ஜியோ சினிமாவில் வெளியாக இருக்கிறது.

ஜோதி தேஷ்பாண்டே, ராமாஞ்சனேயுலு ஜவ்வாஜி மற்றும் எம்.ராஜசேகர் ரெட்டி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இயக்குநர் விஜய் கூறும்போது…

​​“இந்தப் படம் கோவிட்-19 இரண்டாம் அலையின் போது உருவானது. இந்தப் படத்திற்காக நான் நடிகர்களை அணுகியபோது, ​​​​அவர்கள் இந்தப் படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டனர்.

படப்பிடிப்பின் போது நாங்கள் பல கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது மற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தோம். இந்தத் படத்தை நம்பித் தயாரிக்க முன்வந்த எனது தயாரிப்பாளர்களான திரு.ராமாஞ்சனேயுலு மற்றும் எம்.ராஜசேகர் ரெட்டி ஆகியோருக்கு நன்றி.

மேலும், நாட்டின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ ஸ்டுடியோஸூடன் இணைந்ததற்காகவும் அவர்கள் ‘BOO’ படத்தின் உரிமையை பெற்றதற்காகாவும் நான் நன்றி கூறுகிறேன்.

விஸ்வக் சென், ரகுல் ப்ரீத் சிங், நிவேதா பெத்துராஜ், மேகா ஆகாஷ், ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் இவ்வளவு பெரிய ஆதரவை அளித்ததற்கு நன்றி. தொழில்நுட்ப வல்லுனர்களின் பங்களிப்புடன் இந்தப் படம் ஒரு முழுமையான வளர்ச்சியைப் பெற்றது.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும், சந்தீப்பின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் படத்தொகுப்பும் இந்தப் படத்தில் மிகப்பெரிய ஈர்ப்பாக இருக்கும். நாளை (மே 27, 2023) வெளியாகும் ‘BOO’ படத்திற்கு உலகளாவிய பார்வையாளர்களின் ரெஸ்பான்ஸை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம்.

‘BOO’ படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சர்வந்த் ராம் கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீ ஷ்ரிதி சாய் மூவிஸ் தயாரித்திருக்க விஜய் எழுதி இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங், விஷ்வக் சென், நிவேதா பெத்துராஜ், மேகா ஆகாஷ், ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன் மற்றும் வித்யா ராமன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, ஒளிப்பதிவு சந்தீப் கே விஜய், படத்தொகுப்பு ஆண்டனி. ‘ஸ்டண்ட்’ சில்வா ஆக்‌ஷன் காட்சிகளை அமைத்துள்ளனர்.

சரவணன் வசந்த் கலைப் படைப்புகளை கவனித்துள்ளார். மது ஆர் பின்னணி இசையையும், இக்பால் ஒலி வடிவமைப்பையும், டி. உதயகுமார் ஒலிப்பதிவையும் செய்துள்ளார்.

Vijay – GV Prakash in Boo release update is here

More Articles
Follows