உலக பிரபலத்துடன் மீண்டும் விஜய்-நயன்தாரா இணைவார்களா.?

உலக பிரபலத்துடன் மீண்டும் விஜய்-நயன்தாரா இணைவார்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ipl vijay nayanthara dhoni

ஐபிஎல் போட்டியில் பங்கேற்க கூடாது என தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மீண்டும் சென்னை அணியை சேர்க்க, நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் பிசிசிஐ தலைவர் மற்றும் ஐசிசி சேர்மன் சீனிவாசன் தெரிவித்திருந்தார்.

எனவே,  அடுத்த ஆண்டு இந்த அணி ஐபிஎல் தொடரில் களமிறங்கும் என சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு முறை கோப்பையை பெற்றுத்தந்தவர் தோனி.

எனவே மீண்டும் தோனியை தலைமையேற்க ரசிகர்கள் மற்றும் சம்பந்தபட்ட அதிகாரிகள் வற்புறுத்தலாம்.

கடந்த 2008 ஆம் ஆண்டு தோனி கேப்டனாக இருந்தபோது, சென்னை அணியின் தூதர்களாக விஜய் மற்றும் நயன்தாரா இருந்தனர்.

எனவே மீண்டும் தோனியுடன் விஜய், நயன்தாரா இணைந்து இந்த அணிக்கு பல சேர்க்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Will Vijay and Nayanthara again accept brand ambassador for IPL

உதயநிதி-கௌரவ் படக்குழுவை பாராட்டிய ஓமன் நாட்டு அமைச்சர்

உதயநிதி-கௌரவ் படக்குழுவை பாராட்டிய ஓமன் நாட்டு அமைச்சர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oman minister with Gaurav Narayanதூங்கா நகரம், சிகரம் தொடு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கௌரவ் நாராயணன்.

இவர் தற்போது லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு தலைப்பு அறிவிக்கப்படவில்லை என்றாலும், இப்படை வெல்லும் என பெயர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்பட பாடலின் படப்பிடிப்பிற்காக ஓமன் நாட்டிற்கு படக்குழுவினர் சென்றனர்.

தனது நாட்டில் படப்பிடிப்பு நடத்துவதை அறிந்த ஓமன் நாட்டின் தகவல் துறை அமைச்சர் திரு மர்வான் யூசுப் இயக்குனர் கௌரவ் நாராயணனை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

இப்படத்தின் பாடல் காட்சிகளை பார்த்த ஓமன் நாட்டின் அமைச்சர் திரு மர்வான் யூசுப் இயக்குனர் கௌரவ் நாராயணன் மற்றும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Oman Minister Praised Director Gaurav Narayan

பேர்&லவ்லி-கோலா விளம்பரங்களில் நடித்ததற்கு வெட்கப்படுகிறேன் – ஸ்ரேயா

பேர்&லவ்லி-கோலா விளம்பரங்களில் நடித்ததற்கு வெட்கப்படுகிறேன் – ஸ்ரேயா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shriyaரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், தனுஷ்டன் திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரேயா.

தற்போது சிம்பு ஜோடியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவரிடம் அழகு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு… “நம் நாட்டு மக்களிடம், அழகு பற்றிய புரிதல் தவறாக உள்ளது. அழகில்லை என்பதால் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்காமல் இருக்கிறதாக விளம்பரங்களில் காட்டப்படுகிறது.

அதன்பின்னர் ஒரு பிராண்ட் க்ரீமைப் பயன்படுத்திய பிறகு, அந்த பெண் அழகாகி, திருமணம் நடப்பது போல் காட்டப்படுகிறது.

இதனால் மக்கள் முட்டாள்தனமாக யோசிக்கின்றனர்.

நானும் இதுபோன்ற பேர் அண்ட் லவ்லி மற்றும் கோகோ கோலா விளம்பரங்களில் நடித்துள்ளேன்.

அதற்கு தற்போது எனக்கு வெட்கமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது.” என்றார் ஸ்ரேயா.

அஜித்தை அரசியலுக்கு அழைக்க காரணம் கூறும் ரசிகர்கள்

அஜித்தை அரசியலுக்கு அழைக்க காரணம் கூறும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith chairதமிழகத்தில் அஜித்துக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் நாம் அறிந்ததே.

இவர் ரசிகர் மன்றமே வேண்டாம் என்றாலும் அவரது ரசிகர்கள் அஜித் படங்களை தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர்.

அதிலும் மதுரையில் உள்ள அடங்காத அஜித் ரசிகர் மன்றத்தினர் அவ்வப்போது கட்அவுட் பேனர்களை பெரியளவில் வைத்து அசத்திவருகின்றனர்.

தற்போது அரசியலுக்கு அஜித் வரவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் இதுதான்..

ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் நாம் அறிந்த ஒன்றுதான்.

ஒரு நிலையான நேர்மையான ஆட்சி தமிழகத்தில் இல்லை. ஊழல்வாதிகள் அரசியல் செய்யும்போது, நேர்மையான மனிதரான அஜித் அரசியலுக்கு வரலாமே. நல்ல ஆட்சி தரலாமே” என்கின்றனர்.

Thala Fans request Ajith to enter in Tamilnadu Politics

மீண்டும் விக்ரமுடன் இணையும் பிருத்விராஜ்

மீண்டும் விக்ரமுடன் இணையும் பிருத்விராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram prithiviraj at raavanan press meetவெள்ளித்திரை, மொழி, காவியத்தலைவன் உள்ளிட்ட நேரடி தமிழ் படங்களில் நடித்த மலையாள நடிகர் பிருத்விராஜ்.

அண்மையில் வெளியான நான் சபானா என்ற இந்தி படத்தில் அதிரடி வில்லனாக நடித்தார் பிருத்விராஜ்.

இவர் தற்போது மலையாள சினிமாக்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பிறகு மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார்.

கெளதம்மேனன் இயக்கும் துருவநட்சத்திரம் படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடிக்கவிருக்கிறாராம்.

மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் விக்ரமுடன் பிருத்விராஜ் இணைந்து நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Prithviraj again teams up with Vikram for Dhruva Natchathiram

தனுஷுக்கு ஜோடியாக நடிப்பது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்

தனுஷுக்கு ஜோடியாக நடிப்பது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Aishwarya Rajeshதனுஷ் நடிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகிவரும் படம் வடசென்னை.

வெற்றி மாறன் இயக்கி வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்திலிருந்து அமலாபால் விலகியதையடுத்து, ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

தனுஷ் உடன் ஜோடியாக நடிப்பது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளதாவது…

நான் நினைத்தே பார்க்காத வாய்ப்பு வடசென்னை படத்தில் கிடைத்துள்ளது.

இப்பட வாயப்பு கிடைக்க காக்கா முட்டை படம்தான் காரணம்.

அந்த படம் மூலம் சிறந்த நல்ல நடிகை என்ற பெயரை பெற்ற நான், தற்போதுதான் தனுஷ் போன்ற முன்னணி நடிகருக்கு ஜோடியாக சேரும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.” என்றார்.

Aishwarya Rajesh reaction to romance with Dhanush in Vada Chennai

More Articles
Follows