விஜய் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவாரா ஏஆர்.ரஹ்மான்.?

விஜய் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவாரா ஏஆர்.ரஹ்மான்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will AR Rahman fullfill Vijay fans dreamவிஜய்யின் 62வது படமாக உருவாகவுள்ள படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்கவிருக்கிறார்.

இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க, கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவுள்ளார்.

இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல்களை தயாரிப்பு நிறுவனமே உறுதிசெய்துள்ளது.

இப்படத்தில் விஜய் பாட வாய்ப்பு இருக்குமோ? என ரசிகர்கள் இப்போதே கேள்வி கேட்க தயாராகிவிட்டனர்.

அண்மையில் வெளியான தலைவா, புலி, தெறி, பைரவா உள்ளிட்ட படங்களில் விஜய் பாடியிருந்தார்.

ஆனால் ஏஆர். ரஹ்மான் இசையமைத்த மெர்சல் படத்தில் விஜய்யை பாட வைக்கவில்லை.

எனவே விஜய் ரசிகர்களின் ஆசையை இசைப்புயல் இந்த (விஜய் 62) படத்திலாவது நிறைவேற்றுவாரா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Will AR Rahman fullfill Vijay fans dream

விக்கிபீடியாவை வியக்க வைத்த மெர்சல்; அடுத்த இடத்தில் விவேகம்

விக்கிபீடியாவை வியக்க வைத்த மெர்சல்; அடுத்த இடத்தில் விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal got 1st place in Wikipedia and Vivegam in 2nd placeதமிழகத்தில் மட்டுமல்ல கேரளா மற்றும் ஆந்திராவிலும் விஜய்க்கு ரசிகர் பட்டாளம் உள்ளது.

விஜய்யின் படங்கள் குறித்து அறிவிப்போ அல்லது புகைப்படங்கள் ஏதாவது வெளியானால் அதை இணையங்களை தேடுவதை இவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

சென்ற ஆண்டு வெளியான மெர்சல் படம் மிகவும் பரபரப்பாக பேசப்பட இவர்களது பணியும் முக்கிய காரணமாகும்.

இந்நிலையில் பிரபலமான விக்கீபீடியா இணையதளம் சென்ற வருடத்தின் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில் தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்கப்பட்ட பக்கங்களில் மெர்சல் படம் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதாவது கிட்டதட்ட 25 லட்சம் பார்வைகளுக்கு மேல் பெற்றுள்ளதாம்.

இதற்கு அடுத்து 20.9 லட்சம் ஹிட்ஸ் பெற்று விவேகம் 2ஆம் இடத்தை பெற்றுள்ளதாம்.

இதனையடுத்து உள்ள இடங்களில் பைரவா, விக்ரம் வேதா மற்றும் சிங்கம் 3 ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mersal got 1st place in Wikipedia and Vivegam in 2nd place

என் கனவை இளைய நடிகர்கள் நிறைவேற்றுவார்கள்… கமல் பேச்சு

என் கனவை இளைய நடிகர்கள் நிறைவேற்றுவார்கள்… கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Young actors will make my dream true says Kamal at Malaysia Natchathira Vizha 2018மலேசியா நாட்டில் நடிகர் சங்கம் சார்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இருவரும் இணைந்தே கலந்துக் கொண்டனர்.

ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் இவர்கள் இருவரும் ஒரு மேடையில் இன்று சந்தித்துக் கொண்டதால் பரபரப்பாக எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்த நிகழ்வில் கமல்ஹாசன் பேசும்போது…

இளைய தலைமுறை நடிகர்கள் சிறப்பாக பங்காற்றி வருகின்றனர்.

அவர்களால் என்னுடைய கனவான நடிகர் சங்க கட்டிடம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என நம்புகிறேன்.

தேடவேண்டியது தலைமைமை அல்ல திறமையை” என பேசினார்.

Young actors will make my dream true says Kamal at Malaysia Natchathira Vizha 2018

நடிகர் சங்கத்திற்கு நன்கொடை அளித்த சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்

நடிகர் சங்கத்திற்கு நன்கொடை அளித்த சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Saravana Stores owner donates 2 crores 50 lakhs to Nadigar Sangamதென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நேற்றும் இன்றும் மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கலை நிகழ்ச்சிகளுடன் கிரிக்கெட் போட்டியும் நடைபெற்று வருகிறது.

இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதல் பல திரை உலக நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

அஜித், விஜய் ஆகியோர் கலந்துக் கொள்ளவில்லை.

இதில் சிறப்பு விருந்தினராக பிரபல சரவணா ஸ்டோர்ஸ் கடை ஓனர் சரவணனும் கலந்துக் கொண்டார்.

இந்நிலையில் நடிகர் சங்கத்திற்கு தன் நன்கொடையாக ரூ. 2 கோடியே 50 லட்சத்தை வழங்கியிருக்கிறாராம்.

Saravana Stores owner donates 2 crores 50 lakhs to Nadigar Sangam

ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார் சூப்பர்ஸ்டார்

ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார் சூப்பர்ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini changed his fans associations as Rajini Makkal Mandramசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு இருக்கும் மாஸ் நாம் அறிந்த ஒன்றுதான்.

அவரது ரசிகர்கள் பலரும் கடந்த 20 வருடங்களாக அவரை அரசியலுக்கு அழைத்துக் கொண்டே இருந்தனர்.

அதன்படி கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என ரசிகர்கள் மத்தியில் பகிரங்கமாக அறிவித்தார்.

அறிவிப்பு வந்த நாள் முதலே ரஜினி மன்றம் இணையதளம், கலைஞர் கருணாநிதி மற்றும் ஆர். எம் வீரப்பன் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.

இந்நிலையில் இன்று திடீரென ரசிகர் மன்றத்தில் அதிரடி மாற்றமாக அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற டைட்டிலை மாற்றியிருக்கிறார்.
அதனை மாற்றி ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது ரஜினியின் அரசியல் அதிரடியாக பார்க்கப்படுகிறது.

Rajini changed his fans associations as Rajini Makkal Mandram

ரஞ்சித்தின் இசை இணைவு : தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்

ரஞ்சித்தின் இசை இணைவு : தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala director Ranjith news The casteless collectivesஇயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் பண்பாட்டு மையம்” மற்றும் “மெடராஸ் ரெக்கார்ட்ஸ்” இணைந்து ஒருங்கிணைத்திருக்கும் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி சென்னையில் இன்று 06-01-2018 அன்று நடைபெற இருக்கிறது.

முன்னதாக, “கானா-ராப்-ராக்” மூன்று வடிவங்களையும் கலந்து நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சியில் பங்குபெரும் இசைக்குழு மற்றும் இசைக்கலைஞர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

இதில் இயக்குநர் பா.இரஞ்சித் கலந்துகொண்டு கலைஞர்களை பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இசைக்கலைஞர்களை அறிமுகம் செய்து வைத்து பா.இரஞ்சித் பேசியதாவது,

“நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்திருக்கிற அடுத்த முயற்சி தான் இந்த “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி.

இதில் பங்குபெற்றிருக்கும் கலைஞர்கள் எல்லோருமே அவரவர் பகுதிகளில் மிக பிரபலமானவர்கள். இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து, மக்களின் இசையாகிய கானாவை உலகம் முழுவதும் பரப்புகிற முயற்சியில் இறங்கியுள்ளோம்.

மக்களுக்கான அரசியல் பேசவும், மக்களின் பிரச்சனைகளைப் பேசவும் கலையை பயன்படுத்த வேண்டும். சாதி, மதமற்ற இணக்கம் கலையின் எல்லா வடிவத்திலும் கொண்டுவர வேண்டும்.

இந்த சமூகம் சாதியால் பிரிந்து கிடப்பது போலவே கலையும் இங்கு பிரித்து வைக்கப்பட்டுள்ளது. அப்படி தமிழகத்தின் எல்லா கலைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான தேவை இங்கு இருக்கிறது.

அயோத்திதாச பண்டிதர் கூறியது போல சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம். அதற்கு இந்த இசை வடிவம் தொடக்கமாக இருக்கும்.

கானா என்பது மக்களின் இசை, மூடப் பழக்கவழக்கங்களை எதிர்க்கிற இசை. அது போல தான் ராப் இசையும். அது கறுப்பர்களின் வாழ்வியலையும், அவர்களின் போராட்டங்களையும் உலகிற்கு எடுத்துச் சொன்னது.

அதனடிப்படையில் பார்த்தால் ராப் இசையும், கானாவும் வேறு வேறில்லை. இரண்டுமே மக்களின் வலியை, துயரத்தை பேசக் கூடியவை. இரண்டையுமே இணைத்து இந்த “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி
அரங்கேற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 20 பாடல்கள் பாடப்பட இருக்கிறது. எல்லா விதமான உணர்வுகளோடும் கூடிய பாடல்களாக அவை இருக்கும்.

இந்நிகழ்ச்சி, தொல்குடி மக்களின் இசையை உலகிற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாகும். இன்னும் தமிழகத்தின் மூலைகளில் பரவிக் கிடக்கிற எளிய மக்களின் அத்தனை இசை வடிவங்களையும் ஒருங்கிணைக்கும் யோசனையும் இருக்கிறது” என்று பேசினார்.

மிகப்பெரிய திறந்தவெளி அரங்க இசை நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த நிகழ்விற்கு கட்டணம் ஏதும் இல்லை. அனைவருக்கும் அனுமதி இலவசம்.

நிகழ்ச்சி நடைபெறும் இடம் : சி.எஸ்.ஐ பேயின்ஸ் பள்ளி, கீழ்ப்பாக்கம்
நேரம் : மாலை 6 மணி.

More Articles
Follows