மீண்டும் அஜித் – விஜய்யை இயக்குவது எப்போ.? SJ. சூர்யாவின் ஆச்சர்ய பதில்

மீண்டும் அஜித் – விஜய்யை இயக்குவது எப்போ.? SJ. சூர்யாவின் ஆச்சர்ய பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி நடித்த ‘கொலைகாரன்’ படத்தை இயக்கியவர் ஆண்ட்ரூ லூயிஸ்.

இவர் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் ‘வதந்தி’. வெப் தொடராக உருவாகியுள்ள இதில் எஸ் ஜே சூர்யா நாயகனாக நடித்துள்ளார்.

அவருடன் பாலிவுட் நடிகை சஞ்சனா ஸ்மிருதி வெங்கட் லைலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் குமரன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கொலைகாரன் படத்திற்கு இசையமைத்த சைமன் கிங் என்பவர் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

பிரபல இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி இந்த வெப் தொடரை தயாரித்துள்ளனர்.

டிசம்பர் 2ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் பட குழுவினர் செய்தியாளர்களை சென்னையில் சந்தித்தனர்.

அப்போது எஸ்.ஜே சூர்யாவிடம் செய்தியாளர்கள் அஜித் மற்றும் விஜய் மீண்டும் இயக்குவீர்களா? என்று கேட்டோம்.

அப்போது அவர்..” என்னையே என்னால் இயக்க முடியாமல் நான் இருக்கிறேன். தொடர்ந்து நிறைய படங்களில் வாய்ப்புகள் வருவதால் நடித்து கொண்டிருப்பதால் படங்களை இயக்க முடியவில்லை.” என்றார் சூர்யா

விவாகரத்து வதந்திகளுக்கு நடிகர் ஸ்ரீகாந்த் கண்டனம்

விவாகரத்து வதந்திகளுக்கு நடிகர் ஸ்ரீகாந்த் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீகாந்த் சமீபத்தில் ‘இதே மா கதை’ போன்ற படங்களில் நடித்தார்.

அவரும் மனைவி ஓஹாவும் விரைவில் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்று வதந்தி பரவியது.

இந்த வதந்தியை ‘பெல்லி சண்டாடி’ நடிகர் கடுமையாக மறுத்துள்ளார்.

ஊடகங்கள் பொய்யான செய்திகளை பரப்புவதாகவும் அவர் கடுமையாக சாடினார்.

“சில மலிவான வலைத்தளங்கள் மற்றும் பயனற்ற யூடியூப் சேனல்களால் நான் கடுமையான நிதி சிக்கல்களை எதிர்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் .

இதுபோன்ற முட்டாள்தனமான வதந்திகளை உருவாக்குவது யார்?” என்று கேட்டார் ஸ்ரீகாந்த்.

‘வால்டேர் வீரய்யா’: ப்ரோமோ காட்சி வெளியீடு !

‘வால்டேர் வீரய்யா’: ப்ரோமோ காட்சி வெளியீடு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வால்டேர் வீரய்யா’ படத்தின் ‘பாஸ் பார்ட்டி’யின் ப்ரோமோ வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ப்ரோமோவில் சுருக்கமாகவும் ஸ்டைலாகவும் நுழைந்த சிரஞ்சீவி மீது படமாக்கப்பட்டது, ஐட்டம் பாடலில் ஊர்வசி ரவுத்தேலாவும் இடம்பெற்றுள்ளார்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அழகான சாதாரண மொழியைப் பயன்படுத்தி பாடலுக்கு மெகா அறிமுகம் கொடுத்துள்ளார். இந்த சாதாரணம் தான் எல்லா மந்திரங்களையும் செய்கிறது. டிஎஸ்பியின் பாடல் வரிகள் எப்பொழுதும் கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.

புதன்கிழமை மாலை 4:05 மணிக்கு லிரிக்கல் வீடியோவாக வெளியிடப்படும்.

ஹிருத்திக் ரோஷன் தனது இளம் காதலிக்கு கொடுத்த விலை உயர்ந்த பரிசு

ஹிருத்திக் ரோஷன் தனது இளம் காதலிக்கு கொடுத்த விலை உயர்ந்த பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மும்பையில் ஜூஹு-வெர்சோவா இணைப்புச் சாலைக்கு அருகில் அமைந்துள்ள மூன்று மாடிகளில் பரந்து விரிந்திருக்கும் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரித்திக் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் செலவு செய்தார்.

இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் 38,000 சதுர அடியில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தனது காதலிக்கு பரிசளித்ததாக சொல்லப்படுகிறது.

செய்தி அறிக்கையை மேற்கோள் காட்டிய, ஹிருத்திக் “இதில் எந்த உண்மையும் இல்லை.

ஒரு பொது நபராக, நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் தவறான தகவல்களைத் தவிர்ப்பது நல்லது என தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ பட அப்டேட் கொடுத்த சிம்ரன்

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ பட அப்டேட் கொடுத்த சிம்ரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிந்தியில் வெளியாகி மூன்று தேசிய விருதுகளை அள்ளிய படம் ‘அந்தாநூண்’.

இந்த படம் தற்போது ‘அந்தகன்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

பிரசாந்த் நடிக்கும் இந்த படத்தை அவரது தந்தையும் நடிகருமான தியாகராஜன் இயக்கிய வருகிறார்.

பிரசாந்துடன் பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, யோகி பாபு, வனிதா, ஆதேஷ்பாலா ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

படத்தின் அனைத்து காட்சிகளும் முடிவடைந்த நிலையில் ஒரே ஒரு பாடல் காட்சியை படமாக்க பட குழு முடிவு செய்திருந்தனர்.

அதன்படி “டோர்ரா புஜ்ஜி” என்ற பாடலை ராக்ஸ்டார் அனிருத் மற்றும் மக்கள் செல்வன் விஜயசேதுபதி இணைந்து பாடியுள்ளனர்.

இந்த பாடலுக்கு நடனபுயல் பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.

பிரஷாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் 50 நடன கலைஞர்கள் ஆடும் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைநில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் திரையில் காண தான் ஆவலுடன் காத்திருப்பதாகவும் சிம்ரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்துடன் இரண்டு போஸ்டர்களையும் சிம்ரன் பதிவிட்டு இருக்கிறார்.

சென்னை டிராஃபிக்கில் ‘ஏஜென்ட் கண்ணாயிரங்கள்.; மக்கள் அதிர்ச்சி

சென்னை டிராஃபிக்கில் ‘ஏஜென்ட் கண்ணாயிரங்கள்.; மக்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் ரிலீஸ் ஆன பின்னர் அந்த படத்தை பார்த்து விமர்சனங்கள் வரும்.

ஆனால் ஒரு படம் வெளிவருவதற்கு முன் அந்தப் படத்தை பற்றிய பேச்சுக்கள் எழுவதற்கு முக்கிய காரணமாக அமைவது பப்ளிசிட்டி தான்.

எனவே தான் ஒவ்வொரு படக்குழுவினரும் தங்கள் படங்களை புரோமோட் செய்வதில் புதிய புதிய யுத்திகளை கையாண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சந்தானம் நடித்துள்ள ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் பிரமோஷன் சென்னை மாநகரில் கலை கட்டியுள்ளது.

போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஏஜென்ட் கண்ணாயிரம் போல உடை அணிந்து இவர்கள் மக்கள் மத்தியில் வலம் வருகின்றனர்.

கருப்பு கலர் கோட் சூட் அணிந்து கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு மக்கள் மத்தியில் இவர்கள் நுழையும் போது மக்களும் இவர்களை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

சந்தானம், ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், முனிஷ்காந்த், புகழ் உட்பட பலர் நடித்துள்ள படமே ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’.

இந்த படத்தை மனோஜ் பீத்தா இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தெலுங்கில் வெளியான ‘ஏஜென்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா’ படத்தின் ரீமேக் இது.

இந்த படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது.

More Articles
Follows