ரஜினி படத்தை தயாரிக்க தயங்கும் ஏஜிஎஸ்.?; கோலிவுட்டில் அதிர்ச்சி.!

ரஜினி படத்தை தயாரிக்க தயங்கும் ஏஜிஎஸ்.?; கோலிவுட்டில் அதிர்ச்சி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ பட இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த படம் 2021 தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளது.

இந்த படத்தை முடித்துவிட்டு தன்னுடைய 169-வது படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

கதையில் சில மாற்றங்களை ரஜினி செய்ய சொன்னதகவும் அதனை தேசிங்கு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை முதலில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் என தகவல்கள் வந்தன.

ஆனால் படத்தின் பட்ஜெட்டால் தற்போது தயங்கி வருவதாக கூறப்படுகிறது.

ரஜினி கால்ஷீட் கிடைக்க பல தயாரிப்பாளர்கள் கால் கடுக்க காத்துநிற்க ஏஜிஎஸ் பின் வாங்குவது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தலைவர் 169 படத்தை லைகா அல்லது சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

What happened to Super Star Rajinikanth – AGS production film?

அஜித் 61 அப்டேட் : இயக்குனர் அவரே தான்.. தயாரிப்பாளரை மாற்றிய தல.?

அஜித் 61 அப்டேட் : இயக்குனர் அவரே தான்.. தயாரிப்பாளரை மாற்றிய தல.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ ஆகிய இரண்டு படங்களிலும் அஜித் நடிக்க வினோத் இயக்க, போனிகபூர் தயாரித்துள்ளார்.

வலிமை படம் இன்னும் ரிலீசாகவில்லை.

மேலும் தல 61வது படத்தையும் வினோத் இயக்க போனி கபூரே தயாரிப்பதாக தகவல்கள் வந்தன.

இந்நிலையில் இந்த படத்தை வினோத் மீண்டும் இயக்க, போனி கபூருக்கு பதிலாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே அஜித் நடித்த ‘விவேகம்’ & ‘விஸ்வாசம்’ படங்களை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்தது.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன், ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் சிவகுமாரின் சபதம் ஆகிய படங்களை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Ajith 61 movie director and producer details here

PAN INDIA படத்தில் இணையும் விஜய்சேதுபதி மற்றும் சந்தீப் கிஷன்

PAN INDIA படத்தில் இணையும் விஜய்சேதுபதி மற்றும் சந்தீப் கிஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி நடித்த ‘புரியாத புதிர்’ மற்றும் ஹரிஸ் கல்யாண் நடித்த ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி.

இவரின் அடுத்த படத்தில் மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணையவிருக்கிறாராம்.

அதிரடியான ஆக்சன் கதைக்களமாக இப்படம் உருவாகவுள்ளதாம்.

இதில் விஜய்சேதுபதியுடன் சந்தீப் கிஷன் இணைந்து நடிக்கிறாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்குகிறது.

இந்த புதிய படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் PAN INDIA திரைப்படமாக தயாராகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi and Sundeep Kishan joins for a Pan India Movie

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் இணைந்தார் விஜய்-சூர்யா பட ஹீரோயின்

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் இணைந்தார் விஜய்-சூர்யா பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் ரிலீசாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

இந்த படத்தை தமிழில் எடுக்க பலர் முன்வந்துள்ள நிலையில் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது.

பிஜுமேனன் நடித்த போலீஸ் அதிகாரியாக பவன் கல்யாணும் நடிக்கிறார்.

பிரித்விராஜ் நடித்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியாக ராணா நடிக்கிறார்.

இந்த நிலையில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நித்யா மேனன் இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

விஜய்யின் மெர்சல் மற்றும் சூர்யாவின் 24 ஆகிய படங்களில் நித்யா மேனன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay and Suriya film actress joins this hit remake

‘திட்டம் இரண்டு’ படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யாவின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்

‘திட்டம் இரண்டு’ படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யாவின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

இதனால் ஓடிடி மற்றும் டிவி-யில் நேரடியாக படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

‘ஏலே’, ’புலிக்குத்தி பாண்டி’, ‘மண்டேலா’, ‘வெள்ளை யானை’, உள்ளிட்ட படங்கள் நேடியாக டிவியில் ஏற்கெனவே வெளியானது.

இந்த நிலையில் விஜய் டிவியில் வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி வெளியாகிறது ‘பூமிகா’.

இது ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை ரவீந்திரன் பிரசாத் இயக்க கார்த்திக் சுப்பராஜ் தனது ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

இதன் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியிருப்பதால், 23-ஆம் தேதி அன்றே நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது.

சோனி லைவ் ஓடிடியில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’ அண்மையில் ரிலீசாகி கவனம் ஈர்த்துள்ளதால், பூமிகாவின் ரிலீசும் தற்போது உறுதியாகியுள்ளது.

Aishwarya Rajesh in next film release update is here

சூர்யா பட டப்பிங்கை தொடங்கினார் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ்

சூர்யா பட டப்பிங்கை தொடங்கினார் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலையுலகில் மூன்று தலைமுறையாக ஒரு குடும்பம் நடிப்பில், பாரம்பரியமாக ஜொலிப்பது, மிகப்பெரும் சாதனை.

நடிகர் விஜயகுமார், அருண் விஜய் மற்றும் இப்போது அவர்களது, தொடர்ச்சியாக அடுத்த தலைமுறையில் ஆர்ணவ் விஜய் வரை நடிப்பு அக்குடும்பத்தில் மரபாக, அழகாக வளர்க்கப்படுகிறது.

2D Entertainment நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படத்தில், தாத்தா-தந்தை-மகன் மூவரும் திரையில் இணைந்து நடிக்கும் செய்தி, ரசிகர்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், ஆர்ணவ் விஜய் இன்று தனது காட்சிகளுக்கான, டப்பிங் பணிகளை செய்யத் தொடங்கினார்.

இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

இயக்குநர் சரவ் சண்முகம் எழுதி இயக்கியுள்ள இந்தப்படம், குழந்தைகளை மையப்படுத்தி, 100% குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.

மொத்த படக்குழுவும் இப்படம் உலக ரசிகர்கள் ரசிக்கும் படியான படமாகவும், மன அழுத்தத்தை நீக்கும், பொழுதுபோக்கு திரைப்படமாகவும் இருக்குமென உறுதியாக நம்புகிறது.

இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் ஊட்டியை சுற்றிய பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.

சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், RB Films யின் S.R.ரமேஷ் பாபு உடன் இணைந்து இணை தயாரிப்பு செய்கிறார்கள்.

நிவாஸ் கே பிரசன்னா (இசை), கோபிநாத் (ஒளிப்பதிவு), மேகா (எடிட்டிங்), மைக்கேல் (தயாரிப்பு வடிவமைப்பாளர்), வினோதினி பாண்டியன் (உடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றியுள்ளனர்.

Arun Vijay son Arnav starts dubbing for his debut film

More Articles
Follows