கைத்தட்டல்களை கேட்டு வாங்குபவர்களுக்கு செருப்படி கொடுத்த அமீர்

We should not ask for applause says Director Ameerஆரி நடிப்பில் உருவாகியுள்ள படம் எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குனர்கள் பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், அமீர் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் அமீர் பேசியதாவது…

வாழ்க்கையில் 3 விஷயங்களை எப்போதும் நாம் கேட்டு பெறக் கூடாது. நன்றி.. வாழ்த்து.. கைத்தட்டல்.. இவை மூன்றும் தானாக கிடைக்க வேண்டும்.

பெரியவர்களிடம் வாழ்த்தை வேண்டுமானாலும் கேட்டு பெறலாம். அது கூட ஓகே. ஆனால் நன்றியை கேட்டு பெற கூடாது. அதுபோல் கைத்தட்டல்களை கேட்டு பெறவே கூடாது.

சினிமாவில் ஒரு காட்சி நன்றாக இருந்தால் மக்களே கைத்தட்டுவார்கள். இந்த காட்சிக்கு கைத்தட்டுங்க என்று வாசகம் வராது.

அதுபோல் மேடையில் நாம் பேசினால் நன்றாக இருந்தால் மக்களே கை தட்டுவார்கள்.

கை தட்டுங்க.. கை தட்டுங்க.. என்று நாம் கேட்க கூடாது. மக்களுக்கு எப்போ கை தட்டனும் என்று தெரியும்.
ஒருவேளை அவர்கள் கை தட்டவில்லை என்றால் நாம் சரியாக பேசவில்லை என்று அர்த்தம். அதை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்” என்றார் அமீர்.

We should not ask for applause says Director Ameer

Overall Rating : Not available

Related News

Latest Post