ஒரே நேரத்தில் விஜய்-சூர்யா-சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்தார் விவேக்

Vivek penning lyrics for Vijay Suriya and Sivakarthikeyan movies at same timeவிஜய் நடித்த மெர்சல், தற்போது நடித்து வரும் சர்கார் ஆகிய இரண்டு படங்களுக்கும் ஏஆர். ரஹ்மான் தான் இசை.

இந்த இரண்டு படங்களில் இடம் பெற்ற/பெறும் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார்.

மேலும் ஏஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கும் இவர்தான் பாடல் எழுதுகிறார்.

இதை அவரே உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில் இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கும் இவர்தான் பாடல் எழுதுகிறாராம்.

இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

சூர்யா தயாரித்த 36 வயதினிலே படம் தனக்கு திருப்புமுனையாக அமைந்த்து. தற்போது முதன்முறையாக சூர்யா படத்திற்கு பாடல் எழுதுவது மகிழ்ச்சியாக உள்ளதாக விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Vivek penning lyrics for Vijay Suriya and Sivakarthikeyan movies at same time

Vivek Lyricist‏ @Lyricist_Vivek

Great to b penning for d Inspiring @Suriya_offl Sir for the 1st time.
Part of #Suriya38 2D s 36V gave me my 1st big break. Its always exciting 2 associate with @2D_ENTPVTLTD @gvprakash bro has given me a lovely tune.
Tks 2 him n #Sudha mam for dis movie. Wish She achieves Big

Overall Rating : Not available

Latest Post