தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மக்கள் ஜனாதிபதி என இந்திய மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் அப்துல்கலாம்.
அவர் கடந்தாண்டு ஆண்டு ஜீலை 27ஆம் தேதி மறைந்தார். தற்போது ஓராண்டு நிறைவடைய உள்ளது.
இந்நிலையில் அவரது நினைவு நாளை முன்னிட்டு, 24ஆம் தேதி (ஞாயிற்றுகிழமை) ‘கிரீன் கலாம்’ என்ற அமைப்பு பெயரில் அமைதி பேரணி நடைபெறவுள்ளது.
காலை 7.30 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை முதல் காந்தி சிலை வரை இப்பேரணி நடைபெறும் இந்த பேரணியில் கல்லூரி மாணவ–மாணவிகள் கலந்துகொள்கிறார்கள்.
பங்கு பெறுபவர்களுக்கு மரக்கன்றுகளை விவேக் பரிசாக வழங்கவிருக்கிறார்.
இதுகுறித்து விவேக் கூறியதாவது..
அப்துல்கலாம் ஐயா என்னை அழைத்து ஒரு கோடி மரக்கன்றுகளை நட கூறினார்.
இதுவரை 24 லட்சத்து 75 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளேன். மேலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
அதற்கு ‘கிரீன் கலாம்’ அமைப்பு முழு அர்ப்பணிப்போடு செயல்படும்.
இதுவரை பெரும்பாலும் பள்ளி, கல்லூரி வளாகங்களிலேயே நடப்பட்டது. அங்குள்ள மாணவர்கள் பராமரித்து வருகின்றனர்.
பொதுமக்கள் நடமாடும் இடங்களில் இனி நட உள்ளேன். அதற்கு மக்கள், தொழிலதிபர்களின் ஆதரவு தேவை.”
இவ்வாறு விவேக் தெரிவித்தார்.