தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று ஆகஸ்ட் 29ஆம் தேதி நடிகர் விஷால் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார் விஷால்.
“என் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு அன்பளிப்பு வழங்குவது எனக்கு மகிழ்ச்சி
பிறந்தநாளில் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் அவர்களை பராமரித்து வரும் கன்னியாஸ்திரிகளிடம் வாழ்த்து பெறுவது, கடவுளே வந்து வாழ்த்துவது போன்ற உணர்வை தருகிறது.
விரைவில் நடிகர் சங்க கட்டிடம் கட்டிமுடிக்கப்படும்.
மிஷ்கின் எழுதிய கதை திரைக்கதையை மாற்றி ‘துப்பறிவாளன் பார்ட் 2’ நான் தான் இயக்கு வருகிறேன்.
இயக்குநராக நான் ரசிக்கும் ஒருவர் மிஷ்கின். எனக்கு அண்ணன் ஸ்தானத்தில் அவர் இருப்பார்.
ஆனால் நான் ஒரு தயாரிப்பாளராக அப்படி பார்க்கமுடியாது.
தேசிய விருது தேர்வு குறித்த கேள்விக்கு.. “4 பேர் அமர்ந்து கொண்டு, விருதாளர்களை தேர்வு செய்வதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள் ஆதரவே மகத்தான விருது.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். விஜய் வந்தால் அவரை வாழ்த்துவேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்” என்றார்.
ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து கேட்டதற்கு… “ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் 45 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் இந்த வயதிலும் அவர் திரைத் துறையில் சாதனை படைத்து வருகிறார். மக்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்” என பேசினார் விஷால்.
Vishal open talk about Rajini Vijay and Mysskkin