விக்ரம் பிரபு உடன் 3 ஹீரோயின்ஸ் இணையும் ‘பகையே காத்திரு’

Pagaiye Kathiru (2)கந்தன் ஆர்ட்ஸ் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘பகையே காத்திரு’.

விக்ரம் பிரபு வித்தயாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படம், இதுவரையில் அவர் நடித்த படங்களில் இருந்து மாறுபட்ட படமாகவும், முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் நிறைந்த சமூகப் படமாகவும் உருவாகுகிறது.

கதாநாயகியாக ஸ்மிருதி வெங்கட், இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப், சாய்குமார் தமிழ் திரைப்படங்களில் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் சிவா ஷாரா, பாலா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு செல்வக்குமார்.S ஒளிப்பதிவு செய்ய, ஷாம் C.S இசையமைக்கிறார்.

பிரமாண்டமான அரங்குகளை கலை இயக்குனர் M.சிவா யாதவ் அமைக்க, எடிட்டிங் ராஜா முஹமது, அதிரடியான சண்டைக்காட்சிகளை திலீப் சுப்ராயன் அமைக்க உள்ளார்.

A.ஜெய்சம்பத் நிர்வாக தயாரிப்பை ஏற்கிறார். லைன் புரொடியூசராக செல்வக்குமார்.S.

மேலும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் கொண்டு உருவாகி கொண்டிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் A.மணிவேல் இயக்குகிறார்.

இவர் காக்கி என்னும் குறும்படத்தை இயக்கியவர். இப்படம் கொச்சின், ஐதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

இப்படத்தை கந்தன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராசி முத்துசாமி தயாரிக்கிறார்.

இப்படத்தின் துவக்க விழா வெள்ளிக்கிழமை (16.04.2021) இன்று காட்டுப்பாக்கத்தில் உள்ள படப்பிடிப்பு பங்களாவில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மே மாதம் இறுதி வரை தொடர்ந்து நடைபெறும்..

Vikram Prabhu to romance 3 heroines in Pagaiye Kathiru

Overall Rating : Not available

Related News

Latest Post