கீர்த்தி மறுக்க, விக்ரமுக்கு ஜோடியானார் சாய் பல்லவி

vikram keerthy suresh saai pallaviஇருமுகன் படத்தை தொடர்ந்து சிம்புவின் வாலு பட இயக்குனர் விஜயசந்தர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விக்ரம்.

கரிகாலன் படத்திற்காக கொடுத்திருந்த கால்ஷீட்டில் இப்படத்தில் நடிக்க இருக்கிறாராம் விக்ரம்.

வருகிற டிசம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

இதில் விக்ரமுடன் சூரி, யோகிபாபு, சமுத்திரக்கனி, சம்பத் உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர்.

வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் நடிப்பார் என கூறப்படுகிறது.

இதில் நாயகியாக நடிக்க, கீர்த்தி சுரேஷிடம் பேசினார்களாம்.

ஆனால் அவர் கால்ஷீட் இல்லை என மறுத்து விட்டாராம்.

எனவே ‘பிரேமம் படப்புகழ் மலர் டீச்சர்’ சாய்பல்லவியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதில் வடசென்னை வாசியாக விக்ரம் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Related News

‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் ‘இருட்டு…
...Read More
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது SIIMA…
...Read More

Latest Post