எட்டு வருட போராட்டத்திற்கு கிடைத்த பரிசு ‘தோனி கபடி குழு’ : விஜித் சரவணன் மகிழ்ச்சி!

எட்டு வருட போராட்டத்திற்கு கிடைத்த பரிசு ‘தோனி கபடி குழு’ : விஜித் சரவணன் மகிழ்ச்சி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijith saravananநந்தகுமார் தயாரித்து, ஐயப்பன் இயக்கிய ‘தோனி கபடி குழு’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பை இயக்குநர் ஐயப்பன், நந்தகுமார் ,கொடுத்தார். இந்தப் படத்தில் நான் முதன்மை வில்லனாக கதாபாத்திரமேற்று நடிக்கிறேன். அதற்கு, இயக்குனர் ஐயப்பன் ,தயாரிப்பாளர் நந்தகுமாருக்கு நன்றி. இதற்கு முன் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.

மேலும், ‘வேட்டை நாய்’ படத்திலும் நடிக்கிறேன். இப்படத்தில் R.K.சுரேஷ் கதாநாயகனாகவும், ராம்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இப்படத்தை ‘மன்னாரு’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஜெய்சங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் வாய்ப்பு தந்திருக்கிறார் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றும் இப்படத்தின் தயாரிப்பாளர் P.ஜோதிமுருகன், விஜய் கார்த்திக், இருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். “வேட்டை நாய்” படமும் எனக்கு ஒரு திருப்புமுனையாக அமையும்.

இது தவிர, இன்னும் சில படங்களில் நடித்து வருகிறேன்.

எனது சொந்த ஊர் சேலம். நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சேலத்தில் தான். அப்பா ஓய்வு பெற்ற ஆசிரியர். அம்மா வீட்டை நிர்வாகம் செய்கிறார். மனைவி ஹோமியோபதி மருத்துவர். அண்ணன், தங்கை என்று எல்லோருடைய ஆதரவும் எனக்கு உண்டு. படம் பார்த்துவிட்டு அனைவரும் மகிழ்ந்தார்கள். ஒரு கலைஞனுக்கு இதை விட மகிழ்ச்சி வேறு என்ன வேண்டும்.
கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே எனக்கு நடிகனாக வேண்டும் என்று ஆசை இருந்தது. 8 வருட கனவு ”தோனி கபடி குழு’ மூலம் நனவாகியது.

அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். எல்லோருடைய ஆதரவுடன் நல்ல நடிகராக வலம் வர வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.

‘தோனி கபடி குழு’ படத்தைப் பார்த்து விட்டு எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். என்னுடன் பல பேர் ‘செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள்.

சுமார் 8 வருட காலமாக வாய்ப்புக்காக பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள் என்று பலரிடமும் முயற்சி செய்திருக்கிறேன். அதனுடைய முயற்சிதான் இன்று நான் நடிகன்.

இன்றைய காலகட்டத்தில் படம் எடுப்பதைவிட வெளியிடுவது தான் சவாலான செயல்.

இப்படத்தில் முகம் சுளிக்கும் காட்சிகளோ, வசனங்களோ இல்லை. இயக்குநரும், அபிலாஷும் சரியான திட்டத்தோடு இப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். ஆகையால் தான் இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய விளையாட்டான கபடியைப் பற்றி ஆணித்தரமாகக் கூறியிருக்கும் படம். இப்படியொரு படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

சினிமாவைப் பொறுத்தவரை கதாநாயகனா? வில்லனா? அல்லது குணச்சித்திரமா? என்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகனாகத்தான் என்னைப் பார்க்கிறேன்.

அதேபோல், இயக்குநர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், இயக்குநர்களின் நடிகனாகவும் இருப்பேன்.

என்று மகிழ்ச்சியுடன் கூறினார் விஜித் சரவணன்

தந்தையின் வழியில் இயக்குனராகும் சஞ்சய்!!!

தந்தையின் வழியில் இயக்குனராகும் சஞ்சய்!!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sanjay bharathiபல்வேறு வெற்றி படங்களை இயக்கிய மூத்த இயக்குனர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி , பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் புதிய படம் மூலம் இயக்குனராகிறார்.

மலையாளத்தில் மம்மூட்டி நடித்த பழசி ராஜா, திலீப்-சித்தார்த் நடித்த கமர சம்பவம், மோகன்லால்-நிவின் பாலி நடித்த “காயன்குளம் கொசுன்னி”, தமிழில் பத்மஸ்ரீ கமலஹாசன் நடிப்பில் வெளி ஆன தூங்காவனம் ஆகிய படங்களை தயாரித்த கோகுலம் கோபாலன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு இளைய இயக்குனர்களை அறிமுகம் செய்யும் இந்த நிறுவனம் , காதல் , ஆக்ஷன், என்று ஜனரஞ்சகமாக உருவாக்கப்படும் இந்த பெயரிடப்படாத படத்தையும் தயாரிக்க உள்ளனர்.

இயக்குநர் விஜய்யிடம் பல்வேறு படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ள சஞ்சய் பாரதி இந்த படத்தின் நடிக, நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைப்பெற்று கொண்டு இருப்பதாகவும் , பிப்ரவரி மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

“முதல் முறையாக கோர்ட் அறை செட்டிற்குள் நுழைந்த போது பதட்டமாக உணர்ந்தேன் – பூர்ணா !!

“முதல் முறையாக கோர்ட் அறை செட்டிற்குள் நுழைந்த போது பதட்டமாக உணர்ந்தேன் – பூர்ணா !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

poornaஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தன் முதல் வழக்கு தயாராவது போல, பூர்ணாவும் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் தயாராகியிருக்கிறார். தான் தோன்றுகிற எந்த ஒரு கதாபாத்திரத்திலும், பூர்ணா தனது நிலையை அடுத்த அடுத்த கட்டத்துக்கு உயர்த்துகிறார். ‘சவரக்கத்தி’யில் அவரின் பாராட்டத்தக்க நடிப்பை மறக்க முடியாது. அவர் பார்வையாளர்களை சிரிக்க வைத்தார், சில சமயங்களில் உணர்வுப்பூர்வமாகவும் ஒன்ற வைத்தார்.

சொல்லப்போனால் ‘ஒரு சரியான நடிகர் காலவரையறை பற்றி கவலைப்பட மாட்டார், தன் நடிப்பாற்றல் மீது உறுதியான நம்பிக்கை வைத்து, சக்தி வாய்ந்த நடிப்பை வழங்குவார். தற்போது ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடித்து வரும் ‘அடங்க மறு’ படத்தில், வழக்கறிஞராக நடித்து வருகிறார். இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இந்த கதாபாத்திரத்தில் அவரை தேர்ந்தெடுத்ததற்கு பின்னால் ஒரு மிருதுவான காரணத்தைக் கூறுகிறார். அவர் கூறும்போது, “ஆரம்பத்தில், வலுவான ஒரு சிந்தனை மனதில் தோன்றும் வரை, நான் ஒரு ஆண் நடிகரை தான் இந்த வழக்கறிஞரின் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்பினேன். பொது நிகழ்ச்சிகளிலிருந்து, டைனிங் டேபிள் வரை பாலின சமத்துவம் பற்றி நாம் பேசும்போது, அந்த வரம்புக்குள் அவர்களை கட்டுப்படுத்துவது அநியாயமாக இருக்கும். எனவே, இந்த கதாபாத்திரத்தில் ஒரு பெண் நடிகரை நடிக்க வைக்கும் யோசனையை செயலாக்கினேன், படக்குழுவும் அதற்கு இசைந்தார்கள். இருப்பினும், ஒரு பொருத்தமான நடிகையை தேர்ந்தெடுப்பது தான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. அங்கு பூர்ணா அனைவரது தேர்வாகவும் வந்தார். இப்போது பூர்ணாவை தவிர வேறு எவருமே இந்த பாத்திரத்தை முழுமையாக்கி இருக்க மாட்டார்கள் என நினைக்கிறோம்” என்றார்.

நடிகை பூர்ணா இந்த பாத்திரத்தில் நடித்த தனது அனுபவத்தை பற்றி கூறும்போது, “இது ஒரு எளிமையான விஷயம் அல்ல. உண்மையில், முதல் முறையாக நீதிமன்ற அறை செட்டுக்குள் நுழைந்தவுடன் எனக்கு பதட்டம் ஏற்பட்டது. என்ன தான் முன் தயாரிப்பு மற்றும் ஒத்திகைகள் பார்த்திருந்தாலும், படப்பிடிப்பு சூழ்நிலையில் தான் ஒரு கதாபாத்திரத்தின் சரியான கணிப்பை நாம் உணர முடியும். இந்த கதாபாத்திரத்தின் உடல் மொழி, உரையாடல் மற்றும் மேனரிஸம் ஆகியவற்றில் முழுமையான நேர்த்தி தேவைப்பட்டது. ரவி மற்றும் கார்த்திக் இருவருக்கும் நான் மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன். ரசிகர்கள் என் நடிப்பை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்” என்றார்.

அடங்க மறு ஒரு எமோஷன் கலந்த ஒரு அதிரடி ஆக்‌ஷன் திரில்லர் படம். புத்திசாலித்தனமான மற்றும் சுறுசுறுப்பான தருணங்களைக் கொண்ட ஒரு படம். இந்தத் திரைப்படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார், ஆனந்த் ஜாய் இணை தயாரிப்பாரளராக இருக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். சத்யா சூரியன் (ஒளிப்பதிவு), ரூபன் (எடிட்டிங்) மற்றும் லால்குடி என். இளையராஜா (கலை) ஆகியோர் இந்த படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள். இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் படமாக்கினால் முழுப்படப்பிடிப்பும் முடிவடையும்.

சிம்புவின் மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிய எடிட்டர்

சிம்புவின் மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிய எடிட்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STR in maanaduசுந்தர்.சி. இயக்கத்தில் உருவாகும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

எனவே விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார்.

சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கவுள்ளது.

இந்நிலையில், பட கதையை இயக்குநர் வெங்கட் பிரபு எடிட்டர் பிரவீன் கே.எல்லிடம் கூறியிருக்கிறாராம்.

கதையை கேட்ட பிரவீன் கே.எல், அவரது ட்விட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபுவை பாராட்டியுள்ளார்.

உறையவைக்கும் மாநாடு படத்தின் முழுக் கதையை தற்போது தான் கேட்டேன். எனது தலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. அற்புதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கோலமாவு கோகிலா இயக்குனர் பெயரை தன் கேரக்டருக்கு வைத்த சிவகார்த்திகேயன்

கோலமாவு கோகிலா இயக்குனர் பெயரை தன் கேரக்டருக்கு வைத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanநயன்தாரா, யோகி பாபு இணைந்து நடித்த கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார்.

இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் என்பதால் அந்த படத்தில் ஒரு பாடலை எழுத அனுமதியளித்திருந்தார்.

இவர்கள் இருவரும் விஜய் டிவியில் பணியாற்றியபோது நண்பர்கள் தானாம்.

இந்நிலையில் கனா படத்திற்கு பிறகு ரியோ நடிக்கவுள்ள ஒரு படத்தை தயாரிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை முடித்துவிட்டு அடுத்து தயாரிக்கவுள்ள பட இயக்கும் வாய்ப்பை தன் நண்பன் நெல்சன் திலீப்குமாருக்கு அளிக்க இருக்கிறாராம்.

‘கனா’ படத்தில் தன் கேரக்டருக்கு நெல்சன் திலீப்குமார் என பெயரிட்டுள்ளார் சிவகார்த்திகேயன் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

பாட்ஷா பட பாணியில் உருவாகும் விஜய்சேதுபதியின் *மாமனிதன்*

பாட்ஷா பட பாணியில் உருவாகும் விஜய்சேதுபதியின் *மாமனிதன்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathis Maamanithan will be in Rajinis Baasha styleவிஜய்சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தை அளித்தவர் டைரக்டர் சீனுராமசாமி.

இவர்களது கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் நல்ல வரவேற்பையே பெற்று வருகிறது.

தற்போது ‘தர்மதுரை’ படத்தை தொடர்ந்து ‘மாமனிதன்’ என்ற படத்திற்காக இணைந்துள்ளனர்.

இது இவர்கள் இருவரும் இணையும் 4வது படம்.

இதன் சூட்டிங் தன் சென்டிமென்ட் பகுதிகளில் ஒன்றான ஆண்டிபட்டியில் தொடங்கியிருக்கிறார் சீனுராமசாமி.

யுவன்சங்கர் ராஜா தயாரித்து இசையமைக்கும் இப்படத்தில், யுவனுடன் இளையராஜவும் இணைந்து இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதியின் ஆஸ்தான நாயகி காயத்ரி இதில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம். அதாவது டைப்ரைட்டிங் சொல்லிக் கொடுக்கும் டீச்சராக நடிக்கிறாராம்.

‘ஜோக்கர்’ புகழ் குரு சோமசுந்தரமும் இவர்களுடன் இணைந்துள்ளார்.

இதில் ஆட்டோ டிரைவர் வேடத்தில் விஜய்சேதுபதியும் (ஹிந்து மதம்) அவரின் இஸ்லாமிய நண்பராக குரு சோமசுந்தரமும் நடிக்கிறாராம்.

பாட்ஷா படத்தில் ரஜினி ஆட்டோ டிவைராக நடித்திருந்தார். ப்ளாஷ்பேக்கில் அவரது முஸ்லீம் நண்பராக சரண்ராஜ் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Vijay Sethupathis Maamanithan will be in Rajinis Baasha style

More Articles
Follows