தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விஜய்க்கு தமிழக முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் ரசிகைகள் உள்ளனர்.
இவர்கள் விஜய் படத்தை திருவிழா போல கொண்டாடுவார்கள். மேலும் விஜய்யின் மீது அளவற்ற அன்பையும் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் விஜய் வீடு அமைந்திருக்கும் நீலாங்கரைக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ரசிகை ஒருவர் வந்துள்ளார்.
அந்த பெரிய கதவை கட்டிப்பிடித்தபடியே தன் ஆசையை தெரிவித்துள்ளார்.
விஜய் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவை பார்த்து.. “தளபதி அண்ணா நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்.. உங்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என தன் ஆசையை தெரிவித்தார்.
அப்போது அருகில் நின்ற ஒரு நபர் உங்களது ஆசையை விஜய் நிறைவேற்றுவாரா.? அந்த நம்பிக்கை இருக்கிறதா? என கேட்டார்.
ஒரு குழந்தை விஜய்யின் பெயரை சொன்னபோது அந்த குழந்தைக்காக வீடியோ காலில் வந்தார் விஜய்.
நான் அவர் வீட்டு வாசலில் ஏறி வந்து நிற்கிறேன்.. எனவே கண்டிப்பாக நிச்சயம் என்னையும் அழைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார் அந்தப் பெண் ரசிகை.
Vijay’s fan girl video goes viral