தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல பாடகியான நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா ஒரு சில படங்களை இயக்கியும் இருக்கிறார். இவருக்கு நீண்ட நாட்களாக தன் மகன் விஜய்யுடன் ஒரு படத்தில் அம்மாவாக நடிக்க விருப்பம் உள்ளதாம்.
இவர்கள் இருவரும் ஒரு நகைக்கடை விளம்பரத்தில் இணைந்து நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
தற்போது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளாராம் விஜய்.
தன் அம்மாவின் கேரக்டர் படத்தில் மிக முக்கியமான கேரக்டராக இருக்க வேண்டும். அப்படி ஒரு கதை கிடைக்கும் பட்சத்தில் மட்டும்தான் நடிப்பேன் என கன்டிஷன் போட்டுள்ளாராம்.